திருப்புகழ் 198 விதம் இசைந்து  (பழநி)
Thiruppugazh 198 vidhamisaindhu  (pazhani)
Thiruppugazh - 198 vidhamisaindhu - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்தன தானன தானன
     தனன தந்தன தானன தானன
          தனன தந்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
     குழல ணிந்தநு ராகமு மேசொலி
          விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி ...... யழகாக

விரிகு ரும்பைக ளாமென வீறிய
     கனக சம்ப்ரம மேருவ தாமதி
          விரக மொங்கிய மாமுலை யாலெதி ...... ரமர்நாடி

இதமி சைந்தன மாமென வேயின
     நடைந டந்தனர் வீதியி லேவர
          எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் ...... வலையாலே

எனது சிந்தையும் வாடிவி டாவகை
     அருள்பு ரிந்தழ காகிய தாமரை
          இருப தங்களி னாலெனை யாள்வது ...... மொருநாளே

மதமி சைந்தெதி ரேபொரு சூரனை
     யுடலி ரண்டுகு றாய்விழ வேசின
          வடிவு தங்கிய வேலினை யேவிய ...... அதிதீரா

மதுர இன்சொலி மாதுமை நாரணி
     கவுரி யம்பிகை யாமளை பார்வதி
          மவுந சுந்தரி காரணி யோகினி ...... சிறுவோனே

பதமி சைந்தெழு லோகமு மேவலம்
     நொடியில் வந்திடு மாமயில் மீதொரு
          பவனி வந்தக்ரு பாகர சேவக ...... விறல்வீரா

பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்
     வடிவு கொண்டருள் காசியின் மீறிய
          பழநி யங்கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து
அனுராகமுமே சொ(ல்)லி விதரணம் சொ(ல்)லி வீறுகளே
சொ(ல்)லி
... பல விதங்களில் ஆசைப்பட்டு இனிதாக மலர் மாலைகளை
கூந்தலில் அணிந்து, காமப் பற்றான பேச்சுக்களைப் பேசி, தமது
விவேகத்தைச் சொல்லியும், சிறப்புக்களைச் சொல்லியும்,

அழகாக விரி குரும்பைகளாம் என வீறிய கனக சம்ப்ரம
மேரு அது ஆம்
... அழகாக விரிந்து வளர்ந்த தென்னங்
குரும்பைகளாம் என்னும்படி ஓங்கி வளர்ந்த, பொன் மயமான, நிறைந்த
மேரு மலை போல,

அதி விரகம் ஒங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி ... மிக்க
காமம் பொதிந்து ஓங்கிய, அழகிய மார்பகங்களைக் கொண்டு
முன்னுள்ளவர் விருப்பத்தை நிறைவேற்ற காமப் போரை விரும்பி,

இதம் இசைந்து அ(ன்)னமாம் எனவே இன நடை
நடந்தனர் வீதியிலே வர
... இன்பத்துடன் அன்னப் பறவை
போல விதம் விதமான நடை நடப்பவராய் (வேசையர்) தெருவில் வர,

எவர்களும் சி(த்)தம் மால் கொ(ள்)ளும் மாதர் கண்
வலையாலே எனது சிந்தையும் வாடி விடா வகை
...
எல்லோருடைய உள்ளமும் காம மயக்கத்தைக் கொள்ளச்செய்யும்
விலைமாதர்களின் (கண் என்னும்) வலையால் என் மனமும் வாடிப்
போகாத வகைக்கு,

அருள் புரிந்து அழகாகிய தாமரை இரு பதங்களினால்
எ(ன்)னை ஆள்வதும் ஒரு நாளே
... அருள் பாலித்து அழகான
தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகளால் என்னை
ஆட்கொள்ளுவதும் ஒரு நாள் நடக்குமோ?

மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு
கு(கூ)றாய் விழவே சின வடிவு தங்கிய வேலினை ஏவிய
அதி தீரா
... ஆணவம் மிக்கு எதிரில் வந்து சண்டை செய்த
சூரனை உடல் இரண்டு கூறாக விழும்படிச் செய்த, கோபமான
உருவத்தைக் கொண்ட, வேலாயுதத்தைச் செலுத்திய மிக்க
வலிமை வாய்ந்தவனே,

மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை
யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி
சிறுவோனே
... இனிமை வாய்ந்த சொல்லை உடைய உமாதேவி,
நாராயணி, கெளரி, அம்பிகை, சியாமள நிறத்தினள், பார்வதி,
மோன நிலையில் உள்ள அழகி, ஜகத்காரணி, யோகினி
ஆகிய பல நாமஙளைக் கொண்ட தேவியின் சிறுவனே,

பதம் இசைந்து எழு லோகமுமே வலம் நொடியில்
வந்திடு மா மயில் மீது ஒரு பவனி வந்த க்ருபாகர
சேவக விறல் வீரா
... ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும்
ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த சிறந்த மயிலின் மேல்
ஒப்பற்ற திருவுலா வந்த கிருபாகரனே, வலிமையாளனே,
வெற்றி வீரனே,

பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு
அருள்
... சூரியனின் ஒளி கோடிக்கணக்கானதாம் என்னும்
பிரகாசமான திருவுருவத்தைக் கொண்டு அருள்பவனே,

காசியின் மீறிய பழனி அம் கிரி மீதினில் மேவிய
பெருமாளே.
... (வாரணாசி என்னும்) காசித் தலத்திலும் சிறந்த
பழனி என்னும் அழகிய மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.466  pg 1.467  pg 1.468  pg 1.469 
 WIKI_urai Song number: 194 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 198 - vidham isaindhu (pazhani)

vithami sainthini thAmalar mAlaikaL
     kuzhala Ninthanu rAkamu mEsoli
          vithara Nancholi veeRuka LEsoli ...... yazhakAka

viriku rumpaika LAmena veeRiya
     kanaka samprama mEruva thAmathi
          viraka mongiya mAmulai yAlethi ...... ramarnAdi

ithami sainthana mAmena vEyina
     nadaina danthanar veethiyi lEvara
          evarka Lumchitha mAlkoLu mAtharkaN ...... valaiyAlE

enathu sinthaiyum vAdivi dAvakai
     aruLpu rinthazha kAkiya thAmarai
          irupa thangaLi nAlenai yALvathu ...... morunALE

mathami sainthethi rEporu cUranai
     yudali raNduku RAyvizha vEsina
          vadivu thangiya vElinai yEviya ...... athitheerA

mathura insoli mAthumai nAraNi
     kavuri yampikai yAmaLai pArvathi
          mavuna sunthari kAraNi yOkini ...... siRuvOnE

pathami sainthezhu lOkamu mEvalam
     nodiyil vanthidu mAmayil meethoru
          pavani vanthakru pAkara sEvaka ...... viRalveerA

paruthi yinprapai kOdiya thAmenum
     vadivu koNdaruL kAsiyin meeRiya
          pazhani yangiri meethinil mEviya ...... perumALE.

......... Meaning .........

vitham isainthu inithA malar mAlaikaL kuzhal aNinthu anurAkamumE so(l)li vitharaNam so(l)li veeRukaLE so(l)li: Bedecking their hair nicely with a variety of choicest flower garlands, these women speak in a manner provoking passion and they brag about their acumen, describing how great they are;

azhakAka viri kurumpaikaLAm ena veeRiya kanaka samprama mEru athu Am: looking like well-grown baby coconuts that have flourished beautifully, they resemble the bursting golden mount MEru;

athi virakam ongiya mA mulaiyAl ethir amar nAdi: with those passion-filled big bosom, they keenly wage the war of romance with their suitors;

itham isainthu a(n)namAm enavE ina nadai nadanthanar veethiyilE vara: these whores walk pleasantly along the street with various gaits resembling that of a swan;

evarkaLum si(th)tham mAl ko(L)Lum mAthar kaN valaiyAlE enathu sinthaiyum vAdi vidA vakai: the net cast by (the eyes of) these women is capable of knocking down the heart of anyone leaving them inebriated with passion; not allowing me too to fall into their net and later feel miserable,

aruL purinthu azhakAkiya thAmarai iru pathangaLinAl e(n)nai ALvathum oru nALE: You will have to kindly take charge of me with Your two hallowed, lotus feet; will that event happen one of these days?

matham isainthu ethirE poru cUranai udal iraNdu ku(kU)RAy vizhavE sina vadivu thangiya vElinai Eviya athi theerA: When the demon SUran confronted You arrogantly in the battlefield, You wielded the furious spear which split his body into two parts, Oh valorous One!

mathura in soli mAthu umai nAraNi kavuri ampikai yAmaLai pArvathi mavuna sunthari kAraNi yOkini siRuvOnE: She is UmAdEvi with endearing sweet words; She is NArAyaNi, Gowri and the Divine Mother; She has green complexion; She is the beautiful PArvathi observing silence in tranquility; She is the Causal One for the entire universe; She is YOgini; You are the child of that Goddess with several names!

patham isainthu ezhu lOkamumE valam nodiyil vanthidu mA mayil meethu oru pavani vantha krupAkara sEvaka viRal veerA: At the opportune time, You went for a matchless ride, mounting the great peacock and circling the seven worlds in a fraction of a second, Oh Compassionate One! You are the triumphant warrior!

paruthiyin prapai kOdiyathAm enum vadivu koNdu aruL: You radiate grace with a dazzling form that is equivalent to the light emitted by millions of suns, Oh Lord!

kAsiyin meeRiya pazhani am kiri meethinil mEviya perumALE.: Your abode is the beautiful Mount Pazhani that is far superior to the holy place, KAsi (VAranNAsi), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 198 vidham isaindhu - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]