பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 451 (நல்ல) ஆடையாலும், தங்கச் சரங்களாலும் (பொன் வடங்கள்ாலும்) (இவ்வுடலை) அலங்கரித்து மகிழ்ந்து, அம்மகிழ்ச்சியால் ஏழுலகமுமே எனக்குப் பிற்படும்படி முந்தி ஓடுகின்ற மூடன்ாகிய நான் (உலகெலாம் எனக்கு மதிப்பில்லை என்று ஆணவங்கொண்டு துள்ளி ஒடும் மூடனாகிய நான்,) துர்ய்மை வாய்ந்த அழகிய சுத்த அடியார்களின் திருவடியைச் சேரும் பாக்கியத்தைப் பெற உனது திருவருளைத் தந்தருள்க. திதந் தித்திமி....... தோதக திகுட என்று பேரி வாத்தியம், சேடன் மயக்கமுறவும், கடல், அண்ட கோளகை முற்றும் அச்சங்கொள்ளவே, அசுரர்கள் (புக்கிருந்த) மலைகளும் தீவுகளும் பொடிபட்டு நாசமுறவும், நெருப்பை வீசும் வேலைச் செலுத்திய மயில் வீரனே! பிரமனது அழகிய தலையிற் குட்டி, நல்ல ஈசனுக்குச் சற்குருவர்ய் அமைந்து, அவர் திருச்செவிகளில் நாடுகின்ற பற்றற்றவர் பெறத்தக்க அருளாகிய பிரணவப் பொருளை உபதேசித்த முருகனே! (வேட்டுவக் கோலம், செட்டி வடிவு, வேங்கை மரக்கோலம், கிழவர் வேடம் ஆகிய) வேஷங்களைப் பூண்டு, பின் ತ புனத்துக்குச்) சென்று, சிறந்த வள்ளியின்மீது மோகப் பித்துக்கொண்டவனாகி, தேவர்கள் வந்து வணங்கும் பராக்ரமம் வாய்ந்த பழனாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே! (பித்துக் கொண்டவனாகி மேவிய பெருமாளே! விண்ணோர் பணி பெருமாளே! வீரங்கொள் பெருமாளே!) பழனாபுரி மேவிய பெருமாளே எனத் தனித்தனி இய்ைக்கவும். (அடியார் அடிசேர நின் அருள்தாராய்) 194 பல விதங்களில் ஆசைப்பட்டு (அல்லது பலவித உபாயங்களை மேற்கொண்டு),இனிதாக, மலர் மாலைகளைக் கூந்தலில் அணிந்து, காமப் பற்றான பேச்சுக்களைப் பேசித் தமது விவேகத்தைச் சொல்லியும், சிறப்புக்களைச் சொல்லியும், அழகாக