திருப்புகழ் 158 சீ உதிரம் எங்கும்  (பழநி)
Thiruppugazh 158 seeudhiramengkum  (pazhani)
Thiruppugazh - 158 seeudhiramengkum - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த தானதன தந்த
          தானதன தந்த தானதன தந்த தனதான

......... பாடல் .........

சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
     மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
          தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே

தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
     மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
          சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா

ஆயதுந மன்கை போகவுயி ரந்த
     நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
          யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்

ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
     தானுமிக வந்து மேவிடம யங்கு
          மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே

மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
     பார்முழுது மண்ட கோளமுந டுங்க
          வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே

வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
     நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
          வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்

வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
     மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
          வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக

வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
     கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
          வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் ... சீழும் இரத்தமும் எங்கும்
பொருந்தி, புழுக்கள் நிறைந்த,

மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை ... நிலை இல்லாத
மலங்கள் நிறைந்த, நோய்களுக்கு இருப்பிடமாகிய (இந்த) உடலை,

தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே ... நெருப்பும்,
நரிகளும், கழுகுகளும், காகங்களும் ஆகிய இவை உண்ணுவது
நீங்காதோ?

தீது உள குணங்களே பெருகு தொந்த ... தீமையான குணங்களே
வளர்கின்ற பந்தபாசம்

மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு சேரிடு ... மாயையில்
வளர்ந்த தோல், சதை, எலும்பு சேர்ந்துள்ள

நரம்பு தான் இவை பொதிந்து நிலை காணா ... நரம்பு ஆகிய
இவைகளும் நிறைந்து நிலை காண முடியாத

ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் ... இப்படியான
இந்த உடம்பு, யமன் கையில் உயிர் போனவுடன், அந்த நேரத்தில்

விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு பேணி ... மிகவும்
கெட்டுப் போகும் துன்பம் நிறைந்த இவ்வுடலை விரும்பி,

நிலை என்று மடவார் பால் ஆசையை விரும்பியே ... அது
நிலையானது என்று கருதி மாதர்களிடத்தே காமப் பற்றை வைத்து,

விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் ... காம விஷம்
மிகுதியாகச் சேர்வதால் மயக்கம் கொண்டு

ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே ... ஆழ்ந்த
துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற என் மீது அன்பு புரிந்தருளுக.

மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு ... மாயையில்
வல்லவனாகிய கம்சனால் விடப்பட்டு கோபத்துடன் வந்து,

பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க ... உலகம் முழுவதும்,
அண்ட கோளங்களும் நடுங்கும்படியாக

வாய் பிளறி நின்று ... வாய்விட்டு சத்தம் செய்துகொண்டு வந்து
பயங்கரமாக நின்று,

மேக நிகர் தன் கை அதனாலே ... மேகம் போன்ற கருமையான
தனது தும்பிக்கையால்

வாரி உற அண்டி வீறொடு முழங்கு ... எல்லாவற்றையும்
வாரும்படியாக நெருங்கி கர்வத்துடன் முழக்கம் புரிந்து,

நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த ... நீரை உண்ணும்
கோபத்தோடு எதிர்த்து வந்த

வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம் ...
(குவலயா பீடம் என்னும்) யானையின் இரண்டு கொம்புகளையும்
ஒடித்து வென்ற நீண்ட வடிவை உடையவனும்,

வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து ... புல்லாங்குழலின்
இன்னிசையைக் கொண்டு பசுக் கூட்டங்களைக் காத்து

மேயல் புரி செம் கண் மால் மருக ... மேயவிட்ட சிவந்த
கண்களை உடையவனும் ஆகிய திருமாலின் மருகனே,

துங்கவேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக ...
பரிசுத்தமான வேலனே, கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து
பொடியாகும்படி,

வேலை விடு கந்த ... வேலைச் செலுத்திய கந்தவேளே,

காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க ...
காவிரி ஆற்றின் செழிப்புள்ள நகரமான நீர் சூழ்ந்த கலிசை என்ற
ஊரில் வாழ்கின்ற வீரன்* உன்னைத் துதிக்க

வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே. ... வீரை
நகரில் எழுந்தருளியுள்ள பழனிப் பெருமாளே, தேவர்கள் பெருமாளே.


* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய
சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர். இவர் அருணகிரியாரின் நண்பர்,
முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.300  pg 1.301  pg 1.302  pg 1.303 
 WIKI_urai Song number: 120 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 158 - see udhiram engkum (pazhani)

seeyuthira mengu mEypuzhuni rampu
     mAyamala piNda nOyiduku rampai
          theenarikaL kangu kAkamivai thinpa ...... thozhiyAthE

theethuLaku Nanga LEperuku thontha
     mAyaiyilva LArntha thOlthasaiye lumpu
          sEriduna rampu thAnivaipo thinthu ...... nilaikANA

Ayathuna mankai pOkavuyi rantha
     nAzhikaiyil vinja Usidumi dumpai
          yAkiyavu dampu pENinilai yenRu ...... madavArpAl

Asaiyaivi rumpi yEviraka singi
     thAnumika vanthu mEvidama yangu
          mAzhthuyarvi zhunthu mALumenai yanpu ...... purivAyE

mAyaivala kanja nAlvidave kuNdu
     pArmuzhuthu maNda kOLamuna dunga
          vAypiLaRi ninRu mEkanikar thankai ...... yathanAlE

vAriyuRa aNdi veeRodumu zhangu
     neerainukar kinRa kOpamode thirntha
          vAraNa iraNdu kOdodiya venRa ...... nediyOnAm

vEyinisai koNdu kOniraipu ranthu
     mEyalpuri sengaN mAlmaruka thunga
          vElakira vunja mAlvaraiyi dinthu ...... podiyAka

vElaividu kantha kAvirivi Langu
     kArkalisai vantha sEvakanva Nanga
          veerainakar vanthu vAzhpazhani yaNdar ...... perumALE.

......... Meaning .........

seeyuthira mengu mEypuzhuni rampu mAyamala piNda nOyiduku rampai: This body is filled with puss, blood and unstable faeces crammed with worms, serving as the receptacle of all diseases.

theenarikaL kangu kAkamivai thinpathozhiyAthE: Can it escape the ultimate fate of being devoured by fire, jackals, vultures and crows?

theethuLaku Nanga LEperuku thontha: Attachment that breeds all vices,

mAyaiyilva LArntha thOlthasaiye lumpu: combined with delusory growth of the skin, flesh, bones,

sEriduna rampu thAnivaipo thinthu nilaikANA: and veins makes this body unsteady.

Ayathuna mankai pOkavuyir: When life from such a body reaches Yaman, (God of Death),

antha nAzhikaiyil vinja Usidumi dumpai yAkiyavu dampu pENi: even at the very last minute, there is attachment to this body which is about to rot and stink;

nilai yenRu madavArpAl Asaiyaivi rumpi yE: thinking that this body is indestructible, I hanker after women with lust;

viraka singi thAnumika vanthu mEvidama yangu: being obsessed with too much carnal desire to the point of swooning,

mAzhthuyarvi zhunthu mALumenai yanpu purivAyE: I fall into the deep sea of distress leading to death. Will You kindly shower Your grace on me?

mAyaivala kanja nAlvidave kuNdu: The elephant (KuvalayApeetam) sent out by Kamsan, notorious for his trickery, came charging with anger;

pArmuzhuthu maNda kOLamuna dunga vAypiLaRi ninRu: it bleated at full throttle sending shock waves throughout the world and stood there menacingly;

mEkanikar thankai yathanAlE vAriyuRa aNdi veeRodumu zhangu: as if it was going to sweep everything with its trunk of black-cloud hue, it made loud noise arrogantly;

neerainukar kinRa kOpamode thirntha: it charged in with rage as though it was going to drink all the water in a gulp;

vAraNa iraNdu kOdodiya venRa nediyOnAm: the elephant's two tusks were broken by Krishna, the tall lord, who overpowered it triumphantly;

vEyinisai koNdu kOniraipu ranthu mEyalpuri sengaN mAlmaruka: He played the bamboo flute and herded the cattle of cows; He has eyes like the red lotus; You are the nephew of that Lord Vishnu!

thunga vElakira vunja mAlvaraiyi dinthu podiyAka: Oh Lord with the immaculate spear, to smash the large mount Krouncha to pieces,

vElaividu kantha: You wielded that spear, Oh Kandha!

kAvirivi Langu kArkalisai vantha sEvakanva Nanga: The mighty king of the prosperous and fertile town, Kalisai*, on the banks of the river KAvEri, worshipped You,

veerainakar vanthu vAzhpazhani yaNdar perumALE.: You have Your seat at Veerainagar*, and Your abode is Pazhani, Oh Great One!


* AruNagirinAthar seldom sings about humans, with a few exceptions.
One such person was King of Kalisai, a sincere devotee of Murugan, and a friend of the poet.
The King built a temple for Murugan at Veerai invoking Pazhani Murugan's blessings.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 158 see udhiram engkum - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]