திருப்புகழ் 142 கனத்திறுகி  (பழநி)
Thiruppugazh 142 kanaththiRugi  (pazhani)
Thiruppugazh - 142 kanaththiRugi - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

......... பாடல் .........

கனத்திறுகிப் பெருத்திளகிப்
     பணைத்துமணத் திதத்துமுகக்
          கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய்

கவட்டையுமெத் தடக்கிமதர்த்
     தறக்கெருவித் திதத்திடுநற்
          கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந்

தனத்தியர்கட் கிதத்துமிகுத்
     தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
          றவித்திழிசொற் பவக்கடலுற் ...... றயர்வாலே

சலித்தவெறித் துடக்குமனத்
     திடக்கனெனச் சிரிக்கமயற்
          சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோ

புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
     திருக்குதனக் குடத்தினறைப்
          புயத்தவநற் கருத்தையுடைக் ...... குகவீரா

பொருப்பரசற் கிரக்கமொடுற்
     றறற்சடிலத் தவச்சிவனிற்
          புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதா

சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
     திகைத்துவிழக் கணப்பொழுதிற்
          சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் ...... துடையோனே

செருக்கொடுநற் றவக்கமலத்
     தயற்குமரிக் கருட்புரிசைத்
          திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கனத்து இறுகிப் பெருத்து இளகிப் பணைத்து மணத்து
இதத்து முகக் கறுப்பு மிகுத்து அடர்த்து நிகர் தல(ம்) மேரு
ஆய்
... பாரமுள்ளதாய், அழுத்தம் உள்ளதாய், பெருத்ததாய்,
நெகிழ்ச்சி உள்ளதாய், எழுச்சி உடையதாய், நறு மணம் வீசுவதாய்,
இதம் தருவதாய், நுனி கரு நிறம் உடையதாய், பரப்புள்ளதாய், மேரு
மலைக்கு ஒப்பானதாய்,

கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அறக் கெருவித்து
இதத்திடு நல் கலைச் சவுளித் தலைக் குலவிக் களி
கூரும்தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து
... கபடத்தை மிகவும்
உள்ளடக்கியதாய், செழிப்புள்ளதாய், மிக்க ஆடம்பரம் உள்ளதாய்,
இன்பம் தருமாறு நல்ல ஆடையையும், அணி கலன்களுடன்
மேற்கொண்டதாய், இன்பம் மிகும் மார்பகங்களை உடைய பொது
மகளிர் கண்களுக்கு இன்பத்துடன் ஈடுபட்டு,

அனற்கு உள் மெழுக்கு எனப் புவியில் தவித்து இழி சொல்
பவக் கடல் உற்ற அயர்வாலே சலித்த வெறித் துடக்கு மனத்து
இடக்கன் எனச் சிரிக்க மயல் சலத்தின் வசைக்கு இணக்கம்
உறக் கடவேனோ
... நெருப்பில் இட்ட மெழுகைப் போல் பூமியில்
தவிப்புண்டு, இழிவான சொல்லுக்கு இடமான பிறவிக் கடலில்
(நீந்த முடியாமல்) ஏற்பட்ட சோர்வினால் அலுத்த வெறியில் கட்டுண்ட
மனத்தையுடைய கீழ் மகன் என்று (உலகோர்) சிரிக்க, (வேசியர்)
மயக்கத்துக்கும் கோபத்துக்கும் வசை மொழிகளுக்கும் இணக்கம்
உடையவனாக இருக்கக் கடவேனோ?

புனத்தின் மலைக் குறத்தி உயர்த் திருக்கு தனக் குடத்தின்
நறைப் புயத்தவ நல் கருத்தை உடைக் குக வீரா
... தினைப்
புனத்திலிருந்த (வள்ளி) மலைக் குறத்தியாகிய வள்ளியின் சிறந்த
கண்களும், குடம் போன்ற மார்பகங்களும் படும் மணம் வீசும்
புயத்தவனே, நல்ல எண்ணத்தை உடைய குக வீரனே,

பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அச்
சிவனில் புலச்சி தனக்கு இதத்தை மிகுத்திடு நாதா
... மலை
அரசனான இமவானிடம் அன்புடன் (அவனது நாட்டிற்குச்) சென்ற
கங்கையைத் தரித்த சடை முடியை உடைய அந்தச் சிவனிடத்து
உள்ள ஞானாம்பாளுக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கும்
குழந்தைநாதனே,

சினத்து எதிர் துட்ட அரக்கர் தமைத் திகைத்து விழக் கணப்
பொழுதில் சிதைத்திடு நல் கதிர்க் கை படைத்து
உடையோனே
... கோபத்துடன் எதிர்த்து வந்த துஷ்ட அரக்கர்களை
திகைப்புண்டு விழும்படி, ஒரு நொடிப் பொழுதில் அழித்திட்ட, நல்ல
ஒளி வீசும் கைப்படையாகிய வேலை உடையவனே,

செருக்கொடு நல் தவக் கமலத்து அயற்கும் அரிக்கு(ம்) அருள்
புரிசைத் திருப் பழநிக் கிரிக் குமரப் பெருமாளே.
... களிப்புடன்
நல்ல தவம் நிறைந்த தாமரைப் பீடத்துப் பிரமனுக்கும், திருமாலுக்கும்
அருள் பாலித்தவனே, மதில் சூழ்ந்த திருப் பழனி மலையில்
வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.330  pg 1.331 
 WIKI_urai Song number: 134 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 142 - kanaththiRugi (pazhani)

kanaththiRukip peruththiLakip
     paNaiththumaNath thithaththumukak
          kaRuppumikuth thadarththunikarth ...... thalamErAy

kavattaiyumeth thadakkimatharth
     thaRakkeruvith thithaththidunaR
          kalaicchavuLith thalaikkulavik ...... kaLikUrun

thanaththiyarkat kithaththumikuth
     thanaRkuNmezhuk kenappuviyit
          RaviththizhisoR pavakkadalut ...... RayarvAlE

saliththaveRith thudakkumanath
     thidakkanenac chirikkamayaR
          chalaththinvasaik kiNakkamuRak ...... kadavEnO

punaththinmalaik kuRaththiyuyarth
     thirukkuthanak kudaththinaRaip
          puyaththavanaR karuththaiyudaik ...... kukaveerA

porupparasaR kirakkamodut
     RaRaRchadilath thavacchivaniR
          pulacchithanak kithaththaimikuth ...... thidunAthA

sinaththethirthut tarakkarthamaith
     thikaiththuvizhak kaNappozhuthiR
          sithaiththidunaR kathirkkaipadaith ...... thudaiyOnE

serukkodunat Ravakkamalath
     thayaRkumarik karutpurisaith
          thiruppazhanik kirikkumarap ...... perumALE.

......... Meaning .........

kanaththu iRukip peruththu iLakip paNaiththu maNaththu ithaththu mukak kaRuppu mikuththu adarththu nikar thala(m) mEru Ay: Those breasts are weighty, soft, bulging, fragrant, comforting, blackened at the tips, dense and are comparable to Mount MEru;

kavattaiyum meththu adakki matharththu aRak keruviththu ithaththidu nal kalaic chavuLith thalaik kulavik kaLi kUrum thanaththiyar katku ithaththu mikuththu: concealing treachery within, they are robust, pompous, adorned with pretty clothing and jewellery to please; falling victim to the eyes of the whores who are bestowed with those pleasurable breasts,

anaRku uL mezhukku enap puviyil thaviththu izhi sol pavak kadal utRa ayarvAlE saliththa veRith thudakku manaththu idakkan enac chirikka mayal chalaththin vasaikku iNakkam uRak kadavEnO: I have been suffering on this earth like wax dripped in fire; earning a word of infamy and being unable to swim in this sea of birth, I experience a weariness binding my mind with a vengence so severely that I am derided by the people of the world calling me a debased fellow; am I destined to be susceptible to the lure, anger and words of scorn of these whores?

punaththin malaik kuRaththi uyarth thirukku thanak kudaththin naRaip puyaththava nal karuththai udaik kuka veerA: This damsel of the KuRavAs lived in the field of millet of VaLLimalai; Your shoulders are daubed by the great eyes and the fragrance of the pot-like bosom of that VaLLi, Oh Lord! You always have noble thoughts, Oh Valorous GuhA!

poruppu arasaRku irakkamodu utRa aRal chadilaththa ac chivanil pulacchi thanakku ithaththai mikuththidu nAthA: On His matted hair, He wears River Gangai that flows with love in the land ruled by HimavAn, the mountain-king; in that Lord SivA is concorporate, Goddess PArvathi, Mother of True Knowledge, and You are the Child-Lord who elates Her!

sinaththu ethir thutta arakkar thamaith thikaiththu vizhak kaNap pozhuthil sithaiththidu nal kathirk kai padaiththu udaiyOnE: When the evil demons came confronting angrily, You devastated and felled them, destroying them in a second by wielding the bright and dazzling weapon in Your hand, namely, the spear, Oh Lord!

serukkodu nal thavak kamalaththu ayaRkum arikku(m) aruL purisaith thirup pazhanik kirik kumarap perumALE.: On Lord Brahma, who is seated on the lotus full of bliss and penance, and on Lord VishNu You showered Your grace, Oh Lord! You are seated in the holy Mount Pazhani, surrounded by fortress walls, Oh KumarA, the Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 142 kanaththiRugi - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]