திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 112 ஆதாளிகள் புரி (பழநி) Thiruppugazh 112 AthaLigaLpuri (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானா தனதன தானா தனதன தானா தனதன ...... தனதான ......... பாடல் ......... ஆதா ளிகள்புரி கோலா கலவிழி யாலே யமுதெனு ...... மொழியாலே ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை யாலே மணமலி ...... குழலாலே சூதா ரிளமுலை யாலே யழகிய தோடா ரிருகுழை ...... யதனாலே சோரா மயல்தரு மானா ருறவிடர் சூழா வகையருள் ...... புரிவாயே போதா ரிருகழல் சூழா ததுதொழில் பூணா தெதிருற ...... மதியாதே போரா டியஅதி சூரா பொறுபொறு போகா தெனஅடு ...... திறலோனே வேதா வுடனெடு மாலா னவனறி யாதா ரருளிய ...... குமரேசா வீரா புரிவரு கோவே பழநியுள் வேலா இமையவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு(ம்) மொழியாலே ... தற்பெருமைப் பேச்சு பேசும் பொது மகளிர் காட்டும் ஆடம்பரக் கண்களாலும், அமுதைப் போன்ற இனிய பேச்சாலும், ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே ... ஆழ்ந்த அழகிய சிரிப்பாலும், உடுக்கை போன்ற இடுப்பாலும், வாசனை மிகுந்த கூந்தலாலும், சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே ... சூதாடும் கருவி போன்ற இளமையான மார்பகத்தாலும், அழகிய தோடுகள் அணிந்த இரண்டு செவிகளாலும், சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள் புரிவாயே ... தளராத மயக்கம் தருகின்ற விலைமாதர்களின் உறவால் வரும் துன்பங்கள் என்னைச் சூழாத வண்ணம் அருள் புரிவாயாக. போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே ... மலர் நிறைந்த திருவடிகளைச் சிந்தியாமலும், பணியும் தொழிலை மேற்கொள்ளாமலும், எதிரே வந்து மோதுவதைப் பற்றி நினைக்காமலும் போர் ஆடிய அதி சூரா பொறு பொறு போகாதே என அடு திறலோனே ... போர் செய்ய வந்த அதி சூரனை பொறு பொறு (தீய வழியில்) போகாதே என்று கூறி அவனை அழித்த வல்லமை வாய்ந்தவனே, வேதா உடன் நெடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா ... பிரமனுடன், நீண்ட திருமாலாலும் அறியாதவாரகிய சிவபெருமான் பெற்றருளிய குமரேசனே, வீரா புரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே. ... வீரைநகரில்* எழுந்தருளியிருக்கும் தலைவனே, பழனியில் இருக்கும் வேலனே, தேவர்கள் பெருமாளே. |
* வீரைநகர் திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத் தலம். இப்பாடல் திருவாவினன்குடியின் கீழும் தரப்பட்டுள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.296 pg 1.297 pg 1.298 pg 1.299 WIKI_urai Song number: 118 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 112 - AthaLigaL puri (pazhani) AthA LikaLpuri kOlA kalavizhi yAlE yamuthenu ...... mozhiyAlE Azhsee riLanakai yAlE thudiyidai yAlE maNamali ...... kuzhalAlE cUthA riLamulai yAlE yazhakiya thOdA rirukuzhai ...... yathanAlE sOrA mayaltharu mAnA ruRavidar sUzhA vakaiyaruL ...... purivAyE pOthA rirukazhal sUzhA thathuthozhil pUNA thethiruRa ...... mathiyAthE pOrA diya athi cUrA poRupoRu pOkA thenAdu ...... thiRalOnE vEthA vudanedu mAlA navanaRi yAthA raruLiya ...... kumarEsA veerA purivaru kOvE pazhaniyuL vElA imaiyavar ...... perumALE. ......... Meaning ......... AthALikaL puri kOlAkala vizhiyAlE amuthu enu(m) mozhiyAlE: Because of the showy eyes of the egotistic whores, their nectar-like sweet talk, Azh seer iLa nakaiyAlE thudi idaiyAlE maNa mali kuzhalAlE: their deep and pretty smile, slender waist, aromatic hair, cUthu Ar iLa mulaiyAlE azhakiya thOdu Ar iru kuzhai athanAlE: their petite bosom looking like the gambling dice and their two dainty ears with lovely studs, sOrA mayal tharu mAnAr uRavu idar sUzhA vakai aruL purivAyE: they give me a dizzy spell; kindly protect me from the miseries that result because of their relationship. pOthu Ar iru kazhal sUzhAthu athu thozhil pUNAthu ethir uRa mathiyAthE: He never meditated on Your hallowed feet decorated with flowers nor did he undertake the mission of worship; without thinking of the consequences of confronting You, pOr Adiya athi cUrA poRu poRu pOkAthE ena adu thiRalOnE: he came to battle with You; that demon SUran was warned several times not to tread the wrong path and was ultimately killed by Your mighty valour, Oh Lord! vEthA udan nedu mAl Anavan aRiyAthAr aruLiya kumarEsA: Oh Lord KumArA, You are the son of Lord SivA who was never fully comprehended by BrahmA or the tall Lord, VishNu. veerA puri kOvE pazhaniyuL vElA imaiyavar perumALE.: You are the Lord seated in Veerainagar* and also the Lord with the spear in Pazhani. You are the Lord of the celestials, Oh Great One! |
* Veerainagar is a Saivite shrine west of Thirupperunthurai. This song is also given under Pazhani - ThiruAvinankudi. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |