திருப்புகழ் 93 மூப்புற்றுச் செவி  (திருச்செந்தூர்)
Thiruppugazh 93 mUpputRuchchevi  (thiruchchendhUr)
Thiruppugazh - 93 mUpputRuchchevi - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாத்தத் தத்தன தாத்தத் தத்தன
     தாத்தத் தத்தன ...... தனதான

......... பாடல் .........

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
     மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி

மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
     மூக்குக் குட்சளி ...... யிளையோடும்

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
     கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன்

கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
     கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
     காப்பைக் கட்டவர் ...... குருநாதா

காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
     காப்புக் குத்திர ...... மொழிவோனே

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
     வாய்க்குச் சித்திர ...... முருகோனே

வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
     வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மூப்புற்றுச் செவி கேட்பற்று ... கிழப் பருவத்தை அடைந்து, காது
கேட்கும் தன்மையை இழந்து,

பெரு மூச்சுற்றுச் செயல் தடுமாறி ... பெருமூச்சு விட்டுக்கொண்டு,
செயல்கள் தடுமாற்றம் அடைந்து,

மூர்க்கச் சொற்குரல் காட்டி ... கொடிய கோபத்துடன் கூடிய
சொற்களோடு குரலை வெளிப்படுத்தி,

கக்கிட மூக்குக்கு உள்சளி இளையோடும் கோப்புக் கட்டி ...
வெளிப்படும் மூக்குச்சளியும், நெஞ்சுக்கபமும் கோத்தது போல் ஒன்று
சேர்ந்து

இ(ன்)னாப் பிச்சு எற்றிடு ... துன்ப வெறியை அதிகரிக்கச் செய்து,

கூட்டிற் புக்கு உயிர் அலையாமுன் ... இத்தகைய உடலில் புகுந்து
என் உயிர் தவிப்பதற்கு முன்னம்,

கூற்றத் தத்துவ நீக்கி ... யமன் வந்து என்னுயிரை எடுக்கும் தவிர்க்க
முடியாத செயலை அகற்றி,

பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே ... உன் அழகிய
திருவடியில் சேர்த்து, சிறிது அருள் புரிவாயாக.

காப்புப் பொற்கிரி கோட்டி ... உலகின் அரணாக நிற்கும்
பொன்மலை மேருவை வில்லாக வளைத்து,

பற்றலர்காப்பைக் கட்டவர் குருநாதா ... பகைவராகிய
திரிபுரத்தாருடைய அரண்களை அழித்தவராகிய சிவபிரானின்
குருநாதனே,

காட்டுக்குட் குறவாட்டிக்கு ... கானகத்தில் குறப் பெண் வள்ளி
தேவிக்கு

பல காப்புக் குத்திர மொழிவோனே ... என்னைக் காத்தருள்
என்றெல்லாம் பல நயமொழிகள் கூறியவனே,

வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திட்பொருள் ... வாய்ப்புள்ள தமிழின்
அகத்துறையின் உறுதியான பொருளை

வாய்க்குச் சித்திர முருகோனே ... உண்மை இதுவே என
(ருத்திரசன்மனாக வந்து)* அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே,

வார்த்தைச் சிற்பர ... சொல்லுக்கும் சித்தத்துக்கும் அப்பாற்பட்டவனே,

தீர்த்தச் சுற்றலைவாய்க்குள் ... புண்ணிய தீர்த்தங்கள் சுற்றியுள்ள
திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்)

பொற்பமர் பெருமாளே. ... அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.


* மதுரையில் சொக்கநாதர் இயற்றிய இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு
நக்கீரர் எழுதிய உரையே சிறந்தது என்று சங்கப் புலவர்களிடையில்
ருத்திரசன்மனாக முருகன் வந்து நிலை நாட்டினான் - திருவிளையாடல் புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.230  pg 1.231  pg 1.232  pg 1.233 
 WIKI_urai Song number: 92 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 93 - mUpputRuch chevi (thiruchchendhUr)

mUpput Rucchevi kEtpat Rupperu
     mUchchut Ruseyal ...... thadumARi

mUrkkac choRkural kAttik kakkida
     mUkkuk kutchaLi ...... iLaiyOdum

kOppuk kattiin Appich chetRidu
     kUttil pukkuyir ...... alaiyAmun

kUtRath thaththuva neekki poRkazhal
     kUttic chatRaruL ...... purivAyE

kAppup poRgiri kOttip patRalar
     kAppaik kattavar ...... gurunAthA

kAttuk kuLkuRa vAttik kuppala
     kAppuk kuththira ...... mozhivOnE

vAypput Raththamizh mArgath thilporuL
     vAykkuc chiththira ...... murugOnE

vArththaic chiRpara theerththac chutRalai
     vAykut poRpamar ...... perumALE.

......... Meaning .........

mUpputRuc chevi kEtpatRa: Becoming very old, having lost the hearing ability,

peru mUchchutru seyal thadumARi: heaving long sighs, faltering in every movement,

mUrkka soR kural kAtti: the voice betraying a very foul temper with harsh words,

kakkida mUkkukkuL saLi iLaiyOdum kOppuk katti: the mucus from the nose mixing with the phlegm from the chest, oozing uncontrollably,

inAp pichchetRidu: and the misery and madness knowing no bounds,

kUttil pukkuyir alaiyAmun: I do not want that kind of a body in which my life is going to be battered.

kUtRath thaththuva neekki: You must remove the inevitability of death in the hands of Yaman (Death-God)

poRkazhal kUtti satraruL purivAyE: and show me just a little grace so that I could attain Your lotus feet!

kAppu poRgiri kOtti: The guarding boundary in the North, Mount MEru, was bent by Him like a bow!

patRalar kAppai kattavar gurunAthA: He then destroyed the fortresses of the enemies at Thiripuram. He was SivA, and You are His Master!

kAttukkuL kuRavAttikku: To VaLLi, the damsel of the KuRavAs in the forest,

pala kAppuk kuththira mozhivOnE: You spoke several cajoling words as if You needed her protection!

vAypputrath thamizh mArgaththil: In an appropriate interpretation of the Tamil composition dealing with the Lord,

poruL vAykku chiththira murugOnE: You (as Rudrasanman)* gave the true meaning marvellously, Oh MurugA!

vArththai siRpara: You are beyond the comprehension of speech and intellect!

theerththa sutr alaivAykuL: In ThiruchcheeralaivAy (ThiruchchendhUr), surrounded by holy waters,

poRpamar perumALE.: You have Your lovely abode, Oh Great One!


* In Madhurai, SivA as SokkanAthar composed the poetical work 'iRaiyanAr agapporuL'. While several poets fought to claim credit for their interpretations, Murugan came as Rudrasanman and declared that the true meaning was conveyed in Nakkeerar's work - ThiruviLaiyAdal PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 93 mUpputRuch chevi - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]