பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்| திருப்புகழ் உரை 217 கோத்ததுபோல ஒன்று சேர்ந்து, துன்பம் உண்டாக்கி வருத்தும் இவ்வுடலிற் புகுந்து (என்) உயிர் அலைவதற்கு முன்னம்கூற்றுவன் (என் உயிரை விடுவிக்கும்) செயலமைப்பை நீக்கி, (உனது) அழகிய திருவடியில் (என்னைச்) சேர்த்துச் சற்று அருள் புரிவாயே! (பூமி நிலைத்து நிற்கக்) காவலா யிருக்கின்ற பொன்மலையை (மேருவை) வளைத்துப், பகைவர்களுடைய அரணைக் (காப்பு மதிலை) அழித்தவராம் சிவபிரானுக்குக் குரு நாதனே!காட்டுக்குள் குறவாட்டியாம் வள்ளியிடம் பலவாறாகக் காத்துப் புரப்பதைக் குறிக்கும் (என்னை நீ காத்தருள் என்னும்) வஞ்சகச் சொற்களைச் சொன்னவனே! ’செழிப்புற்ற தமிழ் அகப்பொருள் துறையின் திண்ணிய (உறுதியான) பொருளின் வாய்மைக்கு (அகப்பொருள் துறையின் உண்மை விளக்கத்துக்கு), (உருத்திர சன்மராய் உதவிய) ரகசிய (அல்லது அழகிய) முருகனே! சொல்லுக்கும் அறிவுக்கும் எட்டாத கடவுளே! (புனித) தீர்த்தமாய்ச் சுற்றியுள்ள கடலின் கரையில் (திருச்செந்துாரில்) அழகுடன் அமர்ந்துள்ள பெருமாளே! (கூற்றத் தத்துவம் நீக்கிக் கழல் கூட்டி அருள் புரிவாயே!) 1. வள்ளியிடம் இங்ங்னம் முருகவேள் கூறியதை "ஆவிஉய அருள் பாராய்" எனவரும் 209 ஆம் பாடலையும் "மனம் பரதவிக்க மால் தரலாமோ" என வரும் 1154 ஆம் பாடலையும் பார்க்க 2. இறையனாரகப் பொருளுக்கு உரை கண்டு, தாம்தாம் கண்ட பொருளே சரியான பொருள் என்று சங்கப் புலவர்கள் கலகமிட, முருகவேள் சிவபிரானது மொழிப்படி உருத்திர சன்மர் என்னும் பெயருடன் ஊமைப்பிள்ளையாய் வணிகர் குலத்தில் தோன்றி,சங்கத்தில் வீற்றிருந்து, புலவர்களின் உரையைத் தனித்தனியே கேட்டு, (நக்கீரர்) உரையை வியந்து தெளிவித்த வரலாறு இங்குக் குறித்துளது போலும். இவ் வரலாற்றின் விரிவை சங்கத்தார் கலகத் தீர்த்த திருவிளையாடலிலும், குறிப்பைத் திருப்புகழ் 126, 350, 991 1055 எண்ணுள்ள பாடல்களிலும் காணலாம்.