பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்| திருப்புகழ் உரை 215 வளர்கின்ற (தினைப்) புனத்தில் காவலிருந்த குற மங்கையின் (வள்ளியின்) கொங்கை மீதிருந்த மணிமாலை புதைத்த புயங்கள் (விளங்கும்) வேளே! அலைகளிலே தவழ்ந்து சூல் (கருப்பம்) நிறைந்த சங்கங்கள் மிக ஒலித்து வந்து தாமரை மலர் மேலே. வண்டுகள் மொய்த்து ஒலிக்க (அந்த) இசையைக் கேட்டுக் கொண்டே துயில்கொள்ளும் அருமை நகராம் திருச்செந்துாரில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே! (நான் செயலழிந்து உழன்று திரிவேனோ!) 92 வயது முதிர்ந்து (மூத்து), காது கேட்குஞ் சத்தியை இழந்து, (செவிடாகி), பெருமூச்சு விட்டுக்கொண்டு, செயல்கள் தடுமாறி - கொடிய கோபச் சொல்கள் வரும் குரலைக்காட்டி, வெளிப்படுகின்ற மூக்குச்சளியும் (நெஞ்சுக்) கோழையும்; திருப்புகழ் 156, 203, 805 எண்ணுள்ள பாடல்களிலும், வேல் வகுப்பு, பூதவேதாள வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு, புய வகுப்பு என்னும் வகுப்புக்களிலும், கந்தரந்தாதி 51 ஆம் பாடலிலும் காணலாம். திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழ் செங்கீரைப் பருவம் 3 ஆம் செய்யுளிலும், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் சிறு தேர்ப்பருவம் 2 ஆம் செய்யுளிலும், தணிகைப் பிள்ளைத்தமிழ் முத்தப்பருவம் 10 ஆம் செய்யுளிலும், முருகரும் தமிழும் என்னும் எனது நூலிலும் காணலாம். 1. பக்கம் 214:- இளை - ஈளை கோழை.