திருப்புகழ் 73 நிறுக்குஞ் சூதன  (திருச்செந்தூர்)
Thiruppugazh 73 niRukkunjchUdhana  (thiruchchendhUr)
Thiruppugazh - 73 niRukkunjchUdhana - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தந் தானன தத்தன தத்தன
     தனத்தந் தானன தத்தன தத்தன
          தனத்தந் தானன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்
     கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்
          நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல ...... தடவாமேல்

நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்
     ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை
          நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி ...... யெனவோதி

உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட
     விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
          யுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி ...... லுழலாமே

உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ்
     கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம்
          உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட ...... அருள்வாயே

கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை
     யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி
          கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் ...... மருகோனே

கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி
     திருச்செங் கோடுஇ டைக்கழி தண்டலை
          களர்ச்செங் காடுகு றுக்கைபு றம்பயம் ...... அமர்வோனே

சிறுக்கண் கூர்மத அத்திச யிந்தவ
     நடக்குந் தேரனி கப்படை கொண்டமர்
          செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை ...... யுருவானோன்

செருக்குஞ் சூரக லத்தையி டந்துயிர்
     குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள்
          திருச்செந் தூர்நக ரிக்குள்வி ளங்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நிறுக்கும் சூது அ(ன்)ன மெய்த் தன முண்டைகள் ... சூதாடும்
கருவியைப் போன்று, நிமிர்ந்து நிற்கும் மார்பகங்களை நெஞ்சின் மீது
உடைய முண்டைகள்.

கருப்பன் சாறொடு அரைத்து உள உண்டைகள் நிழல்
கண்காண உணக்கி மணம் பல தடவா
... கரும்பின் சாற்றுடன்
அரைத்து வைத்துள்ள (மருந்து) உருண்டைகளை நிழலில் உலர்த்தி,
வாசனை திரவியங்கள் பலவும் தடவி

மேல் நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து
அன்பாக அளித்த பின்
... பின்னர், நெருங்கிப் படுக்கையில்
வெற்றிலையின் புறத்தில் (அந்த மருந்தை) ஒளித்து வந்தவருக்கு
அன்பு காட்டிக் கொடுத்து, அதன் பிறகு,

இங்கு எனை நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொ(ல்)லி
என ஓதி
... இங்கு இருக்கும் என்னை நீங்கள் நினைப்பதே இல்லை,
மெச்சும் இதமான சொற்களைப் பேசுவதில்லை என்று கூறி,

உறக் கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும்
பாவிகள் பொட்டிகள் சிந்தனை உருக்கும் தூவைகள் செட்டை
குணம் தனில் உழலாமே
... (வந்தவர்) தமது மயக்கத்தில்
விழுவதைப் பார்த்து, மோக வலைக்குள் அவர் அழுந்தும்படி
விடுக்கின்ற பாவிகளான வேசிகள். மனதை உருக்கும் மாமிசப்
பிண்டங்கள் போன்றவரது உலோப குணத்தில் நான் சிக்குண்டு
அலைச்சல் அடையாத வண்ணம்

உலப்பு இல் ஆறு எ(ன்)னு(ம்) அக்கரமும் கமழ் கடப்பம்
தாரும் முக ப்ரபையும் தினம் உளத்தின் பார்வை இடத்தில்
நினைந்திட அருள்வாயே
... அழிவில்லாத (சரவணபவ என்னும்)
ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும்,
திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக்
கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக.

கறுக்கும் தூய மிடற்றன் அரும் சிலை எடுக்கும் தோளன்
இறத்து அமர் எண் கரி கடக்கும் தானவனைக் கொல் அரும்
புயன் மருகோனே
... கரிய பரிசுத்தமான கழுத்தை உடைய
சிவபெருமானது அரிய மலையாகிய கயிலையை எடுத்த தோள்களை
உடையவனும், (உடைந்த கொம்புகள் தனது) மார்பில் பொருந்த வந்த
(அஷ்ட திக்கஜங்கள்* ஆகிய) எட்டு யானைகளை வென்றவனுமாகிய
அரக்கன் ராவணனைக் கொன்ற இணையற்ற தோள் வலிமை பெற்ற
(ராமன்) திருமாலின் மருகனே,

கனத் தஞ்சா புரி சிக்கல் வலம்சுழி திருச்செங்கோடு
இடைக்கழி தண்டலை களர் செங்காடு குறுக்கை புறம்பயம்
அமர்வோனே
... பெருமை வாய்ந்த தஞ்சாவூர், சிக்கல், திருவலஞ்சுழி,
திருச்செங்கோடு, திருவிடைக்கழி, தண்டலைநீணெறி, திருக்களர்,
திருச்செங்காட்டங்குடி, திருக்குறுக்கை, திருப்புறம்பயம் என்னும்
தலங்களில் வீற்றிருப்பவனே,

சிறுக் கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கு(ம்) தேர்
அனிகப்படை கொண்டு
... சிறிய கண்களையும், மிகுந்த மதத்தையும்
உடைய யானை, குதிரை, நடத்தப்படும் தேர், காலாட்படை (என்னும்
நால்வகைப்) படைகளையும் கொண்டு,

அமர் செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை உருவானோன்
செருக்கும் சூர் அகலத்தை இடந்து
... போர் புரிந்தவனும், பாதகனும்,
அநீதி செய்பவனும், வஞ்சகமே உருக் கொண்டவனும், அகங்காரம்
மிக்கவனும் ஆகிய சூரனுடைய மார்பைப் பிளந்து,

உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் திருச்செந்தூர்
நகரிக்குள் விளங்கிய பெருமாளே.
... அவனுடைய உயிரைக் குடித்த
கூரிய சக்திவேலைக் கையிலேந்தி அமர்ந்து, அருள்மிகு திருச்செந்தூர்
நகரில் விளங்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.96  pg 1.97  pg 1.98  pg 1.99 
 WIKI_urai Song number: 28 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 73 - niRukkum cUthana (thiruchchendhUr)

niRukkunj cUthana meyththana muNdaikaL
     karuppanj chARoda raiththuLa vuNdaikaL
          nizhaRkaN kANavu Nakkima Nampala ...... thadavAmEl

nerukkum pAyalil vetRilai yinpuRam
     oLiththan pAkaa Liththapi ningenai
          ninaikkin Reerilai mecchali thamcholi ...... yenavOthi

uRakkaN dAsaiva laikkuLa zhunthida
     vidukkum pAvikaL pottikaL sinthanai
          yurukkun thUvaikaL settaiku Nanthani ...... luzhalAmE

ulappin RARenu makkara mumkamazh
     kadappan thArumu kaprapai yunthinam
          uLaththin pArvaiyi daththini nainthida ...... aruLvAyE

kaRukkun thUyami datRana rumchilai
     yedukkun thOLani Raththama reNkari
          kadakkun thAnava naikkola rumpuyan ...... marukOnE

kanaththan jApuri sikkalva lamchuzhi
     thiruchcheng kOdui daikkazhi thaNdalai
          kaLarccheng kAduku Rukkaipu Rampayam ...... amarvOnE

siRukkaN kUrmatha aththisa yinthava
     nadakkun thErani kappadai koNdamar
          seluththum pAthakan akraman vanjanai ...... yuruvAnOn

serukkunj cUraka laththaiyi danthuyir
     kudikkung kUriya saththiya marntharuL
          thiruchchen thUrnaka rikkuLvi Langiya ...... perumALE.

......... Meaning .........

niRukkum cUthu a(n)na meyth thana muNdaikaL: Looking like the gambling dice, the breasts of those bitchy whores stand erect on their chest;

karuppanj chARodu araiththu uLa uNdaikaL nizhal kaNkANa uNakki maNam pala thadavA: mixing drugs with the juice of sugarcane, they make them into little globules and dry them in shade adding a variety of spices and scents;

mEl nerukkum pAyalil vetRilaiyin puRam oLiththu anpAka aLiththa pin: then, getting close to their suitors on the bed, they hide that drug inside the betel leaf and offer it with feigned affection; thereafter,

ingu enai ninaikkinReer ilai mecchal itham so(l)li ena Othi: they complain saying "You never think about my presence here at all; and you never speak any words of appreciation";

uRak kaNdu Asai valaikkuL azhunthida vidukkum pAvikaL pottikaL sinthanai urukkum thUvaikaL settai kuNam thanil uzhalAmE: seeing that their suitors have become obsessed with them, these sinful whores ensnare them in their web of passionate delusion; they are nothing but mounds of flesh capable of melting the hearts of men; saving me from falling victim to their avaricious trap and roaming about miserably,

ulappu il ARu e(n)nu(m) akkaramum kamazh kadappam thArum muka prapaiyum thinam uLaththin pArvai idaththil ninainthida aruLvAyE: kindly grant me the ability to perceive everyday through my inner eyes the everlasting six hallowed letters (SaravaNabava), the fragrant garland of kadappa flowers and the brilliant radiance of Your faces, Oh Lord!

kaRukkum thUya midatRan arum silai edukkum thOLan iRaththu amar eN kari kadakkum thAnavanaik kol arum puyan marukOnE: With his shoulders he lifted the rare mountain KailAsh of Lord SivA who has a dark stain on His pure throat; he is the demon RAvaNan who wrestled with and defeated the eight elephants* guarding the cardinal directions, (whose broken tusks remained embedded in his chest); that RAvaNan was killed by RAmA, whose valorous shoulders are unique; and You are the nephew of that Lord VishNu!

kanath thanjA puri sikkal valamchuzhi thiruchchengOdu idaikkazhi thaNdalai kaLar sengAdu kuRukkai puRampayam amarvOnE: The famous towns namely, ThanjAvUr, Sikkal, Thiruvalamchuzhi, ThiruchchengkOdu, Thiruvidaikkazhi, ThaNdalaineeNeRi, ThirukkaLar, ThiruchchengAttangudi, ThirukkuRukkai and ThiruppuRampayam are the places where You are seated, Oh Lord!

siRuk kaN kUr matha aththi sayinthavam nadakku(m) thEr anikappadai koNdu: With four varieties of armies namely, the elephants with small eyes and fierce rage, horses, chariots and soldiers,

amar seluththum pAthakan akraman vanjanai uruvAnOn serukkum cUr akalaththai idanthu: he came to fight in the battlefield; he was evil, unjust, a personification of treachery and filled with arrogance; that demon SUran's chest was split

uyir kudikkum kUriya saththi amarnthu aruL thiruchchenthUr nakarikkuL viLangiya perumALE.: and his life was extinguished by Your sharp and powerful spear; holding that spear in Your hand, You are seated in the holy town of ThiruchchendhUr, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 73 niRukkunj chUdhana - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]