திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 65 துன்பங்கொண்டு அங்கம் (திருச்செந்தூர்) Thiruppugazh 65 thunbangkoNduangkam (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தந்தந் தந்தன தந்தன தந்தந்தந் தந்தன தந்தன தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான ......... பாடல் ......... துன்பங்கொண் டங்கமெ லிந்தற நொந்தன்பும் பண்பும றந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி ...... லணுகாதே இன்பந்தந் தும்பர்தொ ழும்பத கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி யென்றென்றுந் தொண்டுசெ யும்படி ...... யருள்வாயே நின்பங்கொன் றுங்குற மின்சர ணங்கண்டுந் தஞ்சமெ னும்படி நின்றன்பின் றன்படி கும்பிடு ...... மிளையோனே பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய குன்றெங்குஞ் சங்குவ லம்புரி பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... துன்பங்கொண்டு அங்கம் மெலிந்து ... துன்பப்பட்டு, தேகம் மெலிந்து, அற நொந்து ... மிகவும் நொந்துபோய், அன்பும் பண்பும் மறந்து ... அன்பையும் நல்ல குணங்களையும் மறந்து, ஒளி துஞ்சும் ... தேக காந்தி மங்கும்படி செய்யும் பெண் சஞ்சல மென்பதில் ... பெண் மயக்கம் என்னும் துக்கத்தில் அணுகாதே ... நான் அணுகி சிக்கிக்கொள்ளாமல் இன்பந்தந்து ... இன்பத்தைக் கொடுத்து உம்பர் தொழும்பத கஞ்சம் ... தேவர்கள் தொழும் உன் பாதத் தாமரையே தம் தஞ்ச மெனும்படி ... நமது தஞ்சம் என்று கொண்டு என்றென்றுந் தொண்டு செயும்படி ... எப்போதும் உனக்குத் தொண்டு செய்யும்படி அருள்வாயே ... நீ அருளவேண்டும். நின்பங்கு ஒன்றும் ... உன் பக்கத்திலேயே இணைந்து நிற்கும் குற மின்சரணங்கண்டு ... குறக்குல மின்னல் போன்ற வள்ளியின் பாதங்களைக் கண்டு உன் தஞ்ச மெனும்படி நின்று ... இதுவே எனக்குப் புகலிடம் என்று நின்று அன்பின் தன்படி ... அன்பின் முறைப்படி கும்பிடு மிளையோனே ... அவள் பாதத்தில் கும்பிட்ட இளையோனே, பைம்பொன் சிந்தின் ... பசுமைப் பொலிவு பெற்ற கடலின் துறை தங்கிய ... கரையில் விளங்கும் குன்றெங்குஞ் சங்கு வலம்புரி பம்பும் ... குன்றெல்லாம் சங்கும் வலம்புரியும் நிரம்பிய தென் செந்திலில் வந்தருள் பெருமாளே. ... அழகிய திருச்செந்தூரில் வந்தருள் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.184 pg 1.185 pg 1.186 pg 1.187 WIKI_urai Song number: 72 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'தருமபுரம்' திரு சுவாமிநாதன் Dharmapuram SwAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 65 - thunbangkoNdu angkam (thiruchchendhUr) thunbankoN dangame linthaRa nondhanbum paNbuma RandhoLi thunjumpeN sanchala menpathi ...... laNukAthE inbanthan thumbartho zhumpatha kanchanthan thanjame numpadi yenRenRum thoNduce yumpadi ...... aruLvAyE ninpankon RunkuRa mincara NankaNdun thanjame numpadi ninRanpin Ranpadi kumpidu ...... miLaiyOnE paimponcin thinRuRai thangiya kunRengun cankuva lampuri pampunthen centhilil vantharuL ...... perumALE. ......... Meaning ......... thunbankoN dannga melinthu: After a lot of suffering, my body getting emaciated, aRanondhanbum paNbu maRandh: feeling miserable, giving up love and all virtues, oLi thunjum: I lost my natural body lustre due to peN sanchala menpathil: falling in the pitfall of lust for women. aNukAthE: Lest I fall a victim in this way, inbanthanthu: You must give me the real happiness umbar thozhumpatha kancham: which is Your lotus feet worshipped by DEvAs. than thanja menumpadi: They will be my only refuge; yenRenRum thoNdu ceyumpadi aruLvAyE: You must grant me the boon of serving Your feet for ever. ninpankon RunkuRa min: Close by Your side is VaLLi, a veritable lightning of KuRavas. caraNamkaNdun thanja menumpadi: Her feet are Your place of surrender, where ninRanpin Ranpadi kumpidum: You stand firmly in love and worship, iLaiyOnE: Oh, Younger son of SivA! paimponcin thinRuRai thangiya: On the shore of the greenish and beautiful sea, kunRengun canku valampuri pampu: shells and conches abound on the hillside at then centhilil vantharuL perumALE.: ThiruchchendhUr, Your favourite abode, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |