பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 171 பசுமைப் பொலிவுள்ள கடற்கரையில் உள்ள ன்றின் இடமெல்லாம் சங்கும் வல்ம்புரியும் நிரம்பிக் கிடக்கும் அழகிய திருச்செந்துர்ரில் எழுந்தருளியுள்ள பெருமாளே! (என்றென்றும் தொண்டு செய்யும்படி அருள்வாயே.) 73. தெருவின் வெளிப்புறத்திலேயே கட்டுண்டவராய் (எப்போதும் நிற்பவராய்), கொங்கை என்கின்ற மலையைக் குலுக்குபவராய், சிரித்தும், (காண்போர் மனத்தை) உருக்கியும், அகங்களித்தும் பழைய குப்பை என G)IIT ழ்கின்ற == இளம்பெண்கள் (வேசியர் குலத்துப் பெண்கள்) காத்தளிப்பவர் போல இதமான மொழிகளைக் கூறுபவராய், மனம் வைத்து (செல்வத்தில்) பலமான பேர்வழிகள் (தம்மேல்) மயக்கிங்கொண்டு தவிக்குமாறு அவர்க்ளைக் கண்டும் பேசியும், உடனே (தங்கள்) இருப்பிடத்தின் உள்ளே, தளத்தின்மேலே, விளக்கை எடுத்துவிட்டுப், படுத்து மேலே இருக்க வைத்துப் பசப்பு நடிப்புக்களை நடித்துக்கொண்டு, (கொடுத்த) காசு போதாது இதற்கு வேண்டும், அதற்கு வேண்டும் என்று ஜாலப் பேச்சுக் களைப் பேசி கை (யில் உள்ள பொருள்களை யெல்லாம்) கக்கும் படி செய்து பிடுங்கியே (பின்னர்ச்) சோர்வடைந்து போகும் படி (வெருட்டித் துரத்துகின்ற (பொது) மக்ள்ரிர்களுட்னே சேருவதை நீக்கியருளுக் மலைபோலப் பருத்தனவாம் (இரட்டை பத்து) இருபது புயங்களாலும், தாங்கியுள்ள பத்துத் தலைகளாலும் மூண்ட கோபத்துடன் (இராவணன்) சண்டை செய்ய, மலைபோலக் கொதித்தெழுந்த போர் அரக்கர்கள் (யாவரும்) சிதைவுண்டு பதைக்கவே (அவர்களை) அடி அடித்து (அவர்கள்) எல்லாரையும் வெட்டி யொழித்த திருமால் அன்புமிக வைத்துள்ள மருகனே!