பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 169 எரிக்கும் (இப்பிறை நிலா) என்று கூறி மனம் புண்படும் என்றெல்லாம்(அகப்பொருள் துறையில் பொய்ம்மையாளராம் மக்கள் மீது) புன்கவிகள் சிலவற்றைப் பாடிக்கொண்டு - இருக்கின்ற சிலர் (ஐயோ) திருச்செந்தூரை உரைத்துப் பிழைக்க அறிய மாட்டாரோ! (அல்லது உரைத்துப் பிழ்ைக்க அறியாதிருக்கின்றாரே - இதென்ன பாவம்) திருமாலுக்கும்,நான்மறைக்கும், பிரமனுக்கும் தெரிதற்கு அரிதான - திருவடியையும் செஞ்சடை முடியையும் கொண்டுள்ள சிவபிரானுக்கும், செய்துள்ளதவபாரம் (நிறைந்த) (பொதிய) மல்ையில் (வாசஞ் செய்யும்) கும்பத்தில் தோன்றிய நல்ல அகத்திய முநிவ்ர்க்கும் அருள் பாலித்த குருபர மூர்த்தியே!பெருகிவந்த வீரமுள்ள அசுரன் (சூரன்) அவன் சுற்றத்தாருடன் அழியக் கோபித்த பெரும்ாளே! (திருச்செந்திலை உரைத்து உய்ந்திட அருள்வாயே) 72 துன்பங்கொண்டு, தேகம் மெலிந்து, மிகவும் நொந்து அன்பையும் நற்குணங்களையும் மறந்து, (தேக) ஒளி குறைந்து போகும்படி செய்யும் பெண் மயக்கம் என்பதில் நான் அணுகிச் சிக்கிக் கொள்ளாமல் - இன்பம் கொடுத்துத் தேவர்கள் தொழுகின்ற (உனது) பாத தாமரையே நமது தஞ்சமென்று (புகலிடம் என்று ) கொண்டு எஞ்ஞான்றும் (உனக்குத்) தொண்டு செய்யும்படி அருள்புரிவாயாக, உன் பக்கத்திற் பொருந்தி நிற்கும் (அல்லது உன்மீது மனம் ஒன்றியுள்ள) குறக்குலத்து மின் போன்ற வள்ளியின் திருவடியைக் கண்டு தஞ்சமென்று (இதுவே எனக்குப் புகலிடம் என்று விளங்கும்படி) நின்று அன்பின் முறைப்படி கும்பிட்ட இளையோனே!