திருப்புகழ் 43 களபம் ஒழுகிய  (திருச்செந்தூர்)
Thiruppugazh 43 kaLapamozhugiya  (thiruchchendhUr)
Thiruppugazh - 43 kaLapamozhugiya - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

களபம் ஒழுகிய புளகித முலையினர்
     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
          கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் ...... எவரோடுங்

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்
     பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு
          தளர விடுபவர் தெருவினில் எவரையும் ...... நகையாடிப்

பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
     நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
          பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு ...... குழைவோடே

பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும்
     அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
          பெருமை யுடையவர் உறவினை விடஅருள் ...... புரிவாயே

அளையில் உறைபுலி பெறுமக வயிறரு
     பசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள்
          வசவ னொடுபுலி முலையுண மலையுடன் ...... உருகாநீள்

அடவி தனிலுள உலவைகள் தளிர்விட
     மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
          அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர ...... விரல்சேரேழ்

தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய
     இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
          சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ் ...... மருகோனே

துணைவ குணதர சரவண பவநம
     முருக குருபர வளரறு முககுக
          துறையில் அலையெறி திருநகர் உறைதரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

களபம் ஒழுகிய புளகித முலையினர் ... சந்தனக் கலவை
ஒழுகுகின்ற புளகம் கொண்ட மார்பகத்தை உடையவர்,

கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் ... விஷமும் அமுதமும்
கலந்த கண்களை உடையவர்,

கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும் கலகம் இடு
கயல் எறி குழை விரகியர்
... கழுவி எடுத்து வாரிய, பொருத்தமான
வாசனைத் தைலம் ஒழுகும், கூந்தலை உடையவர், கயல் மீன் போன்ற
கண்கள் பரந்து மோதும் குண்டலங்களை அணிந்த, எல்லாரிடமும்
கலகம் செய்கின்ற, தந்திரவாதிகள்,

பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு தளர
விடுபவர்
... பொருள் இல்லாத வாலிபர்களை தமது நடவடிக்கையாலும்
பேச்சுக்களாலும் தளர்ச்சி அடையச் செய்பவர்,

தெருவினில் எவரையும் நகை ஆடிப் பிளவு பெறில் அதில்
அளவு அளவு ஒழுகியர்
... தெருவில் யாரோடும் சிரித்துப் பேசி,
பிரிவுக்குக் காரணம் ஏற்பட்டால் அதற்குத் தக்கபடி அளவோடு
நடந்து கொள்பவர்,

நடையில் உடையினில் அழகொடு திரிபவர் ... நடையிலும்,
உடையிலும் அழகினோடு திரிபவர்,

பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே
பிணமும் அணைபவர்
... மிக்க பொருள் கிடைத்தால், படுக்கையில்
இன்பத்துடனும் உருக்கத்துடனும் பிணத்தையும் தழுவுவர்,

வெறி தரு புனல் உ(ண்)ணும் அவச வனிதையர் முடுகொடும்
அணைபவர்
... கலக்கத்தைத் தரும் கள்ளை உண்டு தம் வசம்
இழக்கும் விலைமாதர் அந்தக் கள் நாற்றத்துடனேயே நெருங்கி
அணைபவர்,

பெருமை உடையவர் உறவினை விட அருள் புரிவாயே ...
அகந்தை உடைய இத்தகைய வேசியரது உறவு நீங்கும்படி அருள்
புரிவாயாக.

அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை
முலை அமுது உ(ண்)ண
... குகையில் இருக்கும் புலி பெற்ற குட்டி
குடிப்பதற்கு பசுக் கூட்டங்களின் முலைப் பால் அமுதை உண்ணவும்,

நிரை மகள் வசவனொடு புலி முலை உ(ண்)ண மலையுடன்
உருகா
... பசுவின் பெண் கன்று, ஆண் கன்றுடன் புலியின் முலைப்
பாலைக் குடிக்கவும், மலை அப்படியே உருகவும்,

நீள் அடவி தனில் உள உலவைகள் தளிர் விட ... நீண்ட
காட்டில் உள்ள பட்ட மரங்கள் தளிர் விடவும்,

மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளி உயர்
பறவைகள் நிலம் வர
... மயல் கொண்ட மதத்துடன் ஆண் யானைகள்
பெண் யானைகளோடு ஒரு புறம் செல்லவும், ஆகாயத்தில் உயரத்தில்
உள்ள பறவைகள் நிலத்துக்கு வந்து சேரவும்,

விரல் சேர் ஏழ் தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய ...
தன் விரல்களைச் சேர்த்து, ஏழு தொளைகள் விட்டுள்ள மூங்கில்
(புல்லாங்குழல்) மீது விரலை முறைப்படி தடவினதால் எழுகின்ற

இசைகள் பல பல தொனி தரு கரு முகில் சுருதி உடையவன்
நெடியவன் மனமகிழ் மருகோனே
... இசைகளால் பற்பல
நாதங்களை எழுப்பும் கரிய மேகம் போன்ற கண்ணபிரான், வேதப்
பொருளோன், நெடிய திருமால் மனமகிழும் மருகனே,

துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறு
முக குக
... துணை நிற்பவனே, குணவானே, சரவணபவனே,
வணங்கத் தக்கவனே, முருகனே, குருபரனே, புகழ் வளரும்
ஆறு முகனே, குகனே,

துறையில் அலை எறி திருநகர் உறை தரு பெருமாளே. ...
கரையில் அலைகளை வீசும் அழகிய திருச்செந்தூர் நகரில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.162  pg 1.163  pg 1.164  pg 1.165 
 WIKI_urai Song number: 60 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 43 - kaLabam ozhugiya (thiruchchendhUr)

kaLapam ozhukiya puLakitha mulaiyinar
     kaduvum amirthamum viraviya vizhiyinar
          kazhuvu saripuzhu kozhukiya kuzhalinar ...... evarOdum

kalakam idukayal eRikuzhai virakiyar
     poruLil iLainjarai vazhikodu mozhikodu
          thaLara vidupavar theruvinil evaraiyum ...... nakaiyAdip

piLavu peRilathi laLavaLa vozhukiyar
     nadaiyil udaiyinil azhakodu thiripavar
          peruku poruLpeRil amaLiyil ithamodu ...... kuzhaivOdE

piNamum aNaipavar veRitharu punaluNum
     avasa vanithaiyar mudukodum aNaipavar
          perumai yudaiyavar uRavinai vidAruL ...... purivAyE

aLaiyil uRaipuli peRumaka vayiRaru
     pasuvin niraimulai yamuthuNa niraimakaL
          vasava nodupuli mulaiyuNa malaiyudan ...... urukAneeL

adavi thaniluLa ulavaikaL thaLirvida
     maruLa mathamodu kaLiRukaL pidiyudan
          akala veLiyuyar paRavaikaL nilamvara ...... viralsErEzh

thoLaikaL vidukazhai viralmuRai thadaviya
     isaikaL palapala thonitharu karumukil
          suruthi yudaiyavan nediyavan manamakizh ...... marukOnE

thuNaiva kuNathara saravaNa pavanama
     muruka gurupara vaLaraRu mukaguka
          thuRaiyil alaiyeRi thirunakar uRaitharu ...... perumALE.

......... Meaning .........

kaLapam ozhukiya puLakitha mulaiyinar: From their exhilarated bosom, sandalwood paste overflows;

kaduvum amirthamum viraviya vizhiyinar: their eyes are filled with a mixture of poison and the divine nectar;

kazhuvu sari puzhuku ozhukiya kuzhalinar evarOdum kalakam idu kayal eRi kuzhai virakiyar: their hair is freshly washed and tidied up with the finest aromatic oil; their kayal-fish-like eyes extend sideways, colliding with the dangling earstuds; carrying out quarrelsome spats with all, they are great schemers;

poruL il iLainjarai vazhi kodu mozhi kodu thaLara vidupavar: if their youthful suitors are found without money, they weaken them with their deriding actions and speech;

theruvinil evaraiyum nakai Adip piLavu peRil athil aLavu aLavu ozhukiyar: they giggle and chatter with anyone on the street, and should a separation occur, they readjust their activities opportunely;

nadaiyil udaiyinil azhakodu thiripavar: they walk the streets with an elegant gait and with an attractive attire;

peruku poruL peRil amaLiyil ithamodu kuzhaivOdE piNamum aNaipavar: should they be showered with a lot of money, they are willing to hug even a corpse passionately on the bed, feigning pleasure;

veRi tharu punal u(N)Num avasa vanithaiyar mudukodum aNaipavar: these whores consume intoxicating toddy, become inebriated and embrace their suitors with a foul smell of liquor on their mouth;

perumai udaiyavar uRavinai vida aruL purivAyE: and these whores are very haughty; kindly bless me so that I sever my relationship with them!

aLaiyil uRai puli peRum makavu ayiltharu pasuvin nirai mulai amuthu u(N)Na: The tiger cub in the cave seeks to suck the nectar-like milk from the nipples of the cows in the herd;

nirai makaL vasavanodu puli mulai u(N)Na malaiyudan urukA: the female calf of the cow, along with the male calf, sucks the nipples of the tiger; the mountain simply melts;

neeL adavi thanil uLa ulavaikaL thaLir vida: the barren trees in the long forest flourish and begin to blossom;

maruLa mathamodu kaLiRukaL pidiyudan akala veLi uyar paRavaikaL nilam vara: the awestruck and raging male elephants move away to one side along with their female counterparts; the birds, flying high in the sky, come down to the ground;

viral sEr Ezh thoLaikaL vidu kazhai viral muRai thadaviya: when He brings His fingers together to play on the flute containing seven holes, with His fingers methodically stroking and

isaikaL pala pala thoni tharu karu mukil suruthi udaiyavan nediyavan manamakizh marukOnE: producing music of a variety of melodies; He is Lord KrishNa, of the complexion of dark cloud; He is the substance of the VEdAs; He is the tall Lord VishNu; and You are His favourite nephew!

thuNaiva kuNa thara saravaNapava nama muruka gurupara vaLar aRu muka kuka: You are my companion, full of virtues! Oh SaravaNabavA, You are the One to be worshipped! Oh MurugA, the Great master, Your glory excels, Oh six-faced Lord GuhA!

thuRaiyil alai eRi thirunakar uRai tharu perumALE.: You are seated in the beautiful place ThiruchchendhUr with lashing waves on its shores, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 43 kaLapam ozhugiya - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]