திருப்புகழ் 29 அனிச்சம் கார்முகம்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 29 anichchamkArmugam  (thiruchchendhUr)
Thiruppugazh - 29 anichchamkArmugam - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தந் தானன தானன தானன
     தனத்தந் தானன தானன தானன
          தனத்தந் தானன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு
     துவட்பஞ் சானத டாகம்வி டாமட
          அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார்

அருக்கன் போலொளி வீசிய மாமர
     கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்
          அழுத்தும் பாவியை யாவியி டேறிட ...... நெறிபாரா

வினைச்சண் டாளனை வீணணை நீணிதி
     தனைக்கண் டானவ மானநிர் மூடனை
          விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே

விகற்பங் கூறிடு மோகவி காரனை
     அறத்தின் பாலொழு காதமு தேவியை
          விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ

முனைச்சங் கோலிடு நீலம கோததி
     அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
          முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே

முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
     திரைக்கங் காநதி தாதகி கூவிள
          முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே

தினைச்செங் கானக வேடுவ ரானவர்
     திகைத்தந் தோவென வேகணி யாகிய
          திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா

சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
     நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
          திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அனிச்சம் ... அனிச்சம்* பூவைப்போல் மென்மை உடையதும்,

கார் முகம் வீசிட மாசு அறு துவள் பஞ்சான ... பஞ்சு அடிக்கும்
வில்லால் அடிக்க மாசுகள் நீங்கிய துவளுகின்ற மென்பஞ்சைப்
போன்றதும்,

தடாகம் விடா மட அனத்தின் தூவி ... நீர் நிலையை விடாது
பற்றுவதுமான அழகிய அன்னப் பறவையின் மெல்லிய இறகு
போன்றதுமான

குலாவிய சீறடி மடமானார் ... மிக மிருதுவான சிறிய பாதங்களும்
உடைய இளம் மானொத்த விலைமாதர்களது

அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி ...
சூரியனைப் போல ஒளி வீசுகின்ற உயர்ந்த மரகதத்தைக் கொண்ட
அழகிய அணிகலன்களை அணிந்த

வார் முலை மேல் முகம் அழுத்தும் பாவியை ... கச்சுடைய
மார்பகங்களின் மேல் முகத்தை அழுத்துகின்ற பாவம் செய்த என்னை,

ஆவி இடேறிட நெறி பாரா வினைச் சண்டாளனை ... என்
ஜன்மம் கடைத்தேறும் வழியை ஆராய்ந்து அறியாத பரம சண்டாளனை,

வீணனை நீள் நிதி தனைக் கண்டு ஆணவமான
நிர்மூடனை
... வீணனை, பெரிய செல்வமுடைமையைக் கண்டு
ஆணவம் கொண்ட முழு மூடனை,

விடக்கு அன்பாய் நுகர் பாழனை ... மாமிசத்தை ஆசையுடன்
உண்கின்ற பாழானவனை,

ஓர் மொழி பகராதே விகற்பம் கூறிடு மோக விகாரனை ...
ஒப்பற்ற சடாக்ஷர (சரவணபவ) மந்திரத்தைச் சொல்லாமல்,
சாஸ்திரத்திலிருந்து மாறுபட்ட பேச்சுக்களையே பேசுகின்ற
காம விகாரனை,

அறத்தின் பால் ஒழுகாத மூதேவியை ... தர்ம வழியில் ஒழுகாத
மூதேவியாகிய

என்னை, விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்
பெறுவேனோ
... (என் குற்றங்களை எல்லாம் பொறுத்து) என்னை
அழைத்து உனது பாதுகையை நீ என் முடிமேல் சூட்ட நான்
திருவருளைப் பெறுவேனோ?

முனைச் சங்கு ஓலிடு நீல மகா உததி ... போர்முனைக்கு உரிய
சங்குகள் ஒலிக்கின்ற நீல நிறம் கொண்ட பெரிய கடலை

அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல முடிக்கு ...
அடைத்து இலங்கைக்குப் பாலம் கட்டி, அஞ்சுதல் இல்லாத
இராவணனுடைய நீண்ட பத்து முடிகளும் (வீழ),

அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே ... அன்று
ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமனுடைய மருகனே,

முளைக்கும் சீத நிலாவொடு அரா ... திருப்பாற்கடலில்
தோன்றும் குளிர்ந்த பிறைச் சந்திரனோடு, பாம்பையும்,

விரி திரை கங்கா நதி தாதகி கூவிள ... விசாலமானதும்
அலைகளை உடையதுமான கங்கை நதியையும், ஆத்திப் பூவையும்,
வில்வத்தையும்

முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே ...
ஜடாமுடியில் தரிக்கும் சிவபெருமானின் பேரருளால் தோன்றிய
முருகோனே.

தினைச் செம் கானக வேடுவர் ஆனவர் ... (வள்ளிமலையிலிருந்த)
தினைப் புனத்தில் வாழ்ந்த செழிப்பான காட்டு வேடர்கள்

திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய திறல் கந்தா ...
திகைப்புற்று இதென்ன ஆச்சரியம் என்று கூறும்படியாக வேங்கை
மரமாய் அவர்களின் முன் நின்ற திறமை வாய்ந்த கந்தனே,

வ(ள்)ளி நாயகி காமுறும் எழில் வேலா ... வள்ளி நாயகி கண்டு
ஆசைப்படும் கட்டழகு உடைய வேலனே,

சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் ... சிறந்த தாமரை
ஓடையிலும், உயர்ந்த உப்பரிகையிலும்

நிறக்கும் சூல் வளை பால்மணி வீசிய ... நிறைந்த கர்ப்பம்
கொண்ட சங்குகள் வெண்ணிறமுடைய முத்துக்களை அலைகள்
அள்ளி வீசுகின்ற (கடற்கரை உள்ள)

திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே. ...
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பராக்கிரமசாலியே,
தேவர்கள் பெருமாளே.


* அனிச்ச மலர் முகர்ந்தாலே வாடிவிடும் மென்மை வாய்ந்தது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.90  pg 1.91  pg 1.92  pg 1.93 
 WIKI_urai Song number: 26 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 29 - anichcham kArmugam (thiruchchendhUr)

aniccang kArmukam veesida mAsaRu
     thuvatpan jAnatha tAkamvi dAmada
          anaththin thUviku lAviya seeRadi ...... madamAnAr

arukkan pOloLi veesiya mAmara
     kathappaim pUNaNi vArmulai mElmukam
          azhuththum pAviyai yAviyi dERida ...... neRipArA

vinaiccaN dALanai veeNaNai neeNithi
     thanaikkaN dANava mAnanir mUdanai
          vidakkan pAynukar pAzhanai yOrmozhi ...... pakarAthE

vikaRpang kURidu mOkavi kAranai
     aRaththin pAlozhu kAthamu thEviyai
          viLiththun pAthukai neethara nAnaruL ...... peRuvEnO

munaiccang kOlidu neelama kOthathi
     adaiththan jAthai rAvaNa neeLpala
          mudikkan ROrkaNai yEvumi rAkavan ...... marukOnE

muLaikkunj ceethani lAvoda rAviri
     thiraikkang gAnathi thAthaki kUviLa
          mudikkunj sEkarar pEraru LAlvaru ...... murukOnE

thinaicceng kAnaka vEduva rAnavar
     thikaiththan thOvena vEkaNi yAkiya
          thiRaRkan thAvaLi nAyaki kAmuRum ...... ezhilvElA

siRakkun thAmarai yOdaiyil mEdaiyil
     niRakkunj cUlvaLai pAlmaNi veesiya
          thiruccen thUrvaru sEvaka nEsurar ...... perumALE.

......... Meaning .........

aniccam: Those were smooth as anichcham* flower,

kAr mukam veesida mAsu aRu thuvaL panjAna: those were like the soft cotton freshly ginned by the ginning bow, after removal of the waste materials;

thadAkam vidA mada anaththin thUvi: those were like the tender feather of the young swans that never left the water surface of the pond;

kulAviya seeRadi madamAnAr: and those were the supple and petite feet of the deer-like whores.

arukkan pOla oLi veesiya mA marakatha paim pUN aNi: Their pretty jewels, studded with precious emeralds, were dazzling like the sun;

vAr mulai mEl mukam azhuththum pAviyai: I am the sinner who pressed my face against their bosom wearing tightly fitted blouses;

Avi idERida neRi pArA vinaic caNdALanai: I am the lowly one who never pondered about the salvation of my soul in this birth;

veeNanai neeL nithi thanaik kaNdu ANavamAna nirmUdanai: I am a total waste; I am an arrogant fool carried away by my big wealth;

vidakku anpAy nukar pAzhanai: I am a sordid flop, gobbling up meat with relish;

Or mozhi pakarAthE vikaRpam kURidu mOka vikAranai: I am a depraved loafer speaking immorally, instead of chanting the unique ManthrA of six letters (SaravaNabava);

aRaththin pAl ozhukAtha mUthEviyai: I am the worst disaster never treading the righteous path;

viLiththu un pAthukai nee thara nAn aruL peRuvEnO: (despite all my defects), will You kindly call me by Your side and place Your holy feet on my head, and will I ever get Your blessing?

munaic cangku Olidu neela makA uthathi: The large blue sea, across which battle bugles are blown,

adaiththu anjAtha irAvaNan neeL pala mudikku anRu Or kaNai Evum irAkavan marukOnE: was blocked and a bridge built to LankA; the undaunted king RAvaNa's ten strong heads were knocked off by a single powerful arrow of RAmA; and You are that Vishnu's nephew!

muLaikkum seetha nilAvodu arA viri thirai gangA nathi: The crescent and cool moon which rose from the milky ocean, a serpent, wide and wavy river GangA,

thAthaki kUviLa mudikkum sEkarar pEr aruLAl varu murukOnE: Aththi (mountain ebony) flower and vilvam (bael) leaves are all stacked on His matted hair; Your emergence was due to that Lord SivA's infinite grace, Oh MurugA!

thinaic cem kAnaka vEduvar Anavar: The hunters of the rich forest living near the millet-field (of VaLLimalai)

thikaiththu anthO enavE kaNi Akiya thiRal kanthA: were astonished and exclaimed "What a wonder!" when You stood cleverly before them in the disguise of a neem tree, Oh KanthA!

va(L)Li nAyaki kAmuRum ezhil vElA: VaLLi is passionately in love with You standing there handsomely with Your lovely spear!

siRakkum thAmarai Odaiyil mEdaiyil: On the great lotus ponds, on lofty terraces,

niRakkum cUl vaLai pAl maNi veesiya: and on the gorgeous shoreline, waves splash white pearls contained in pregnant shells in the town of

thiruc centhUr varu sEvakanE surar perumALE.: ThiruchchendhUr, which is Your abode, Oh Brave One! You are the Lord of the celestials, Oh Great One!


* anichcham flower is so soft that mere smelling would make it droop.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 29 anichcham kArmugam - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]