திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 5 மகமாயை Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 5 maga mAyai |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 5 - மக மாயை மகமாயை களைந்திட வல்லபிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங்குவதே! ......... சொற்பிரிவு ......... மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறு மொழிந்து மொழிந்திலனே! அகம் ஆடை மடந்தையர் என்று அயரும் சக மாயையுள் நின்று தயங்குவதே! ......... பதவுரை ......... [இவ்வுலக வாழ்க்கையைச் சார்ந்த பொய்யான காட்சிகளாலும் நம்பிக்கைகளாலுமான] பெரிய மாயையை நீக்கவல்ல கடவுளான திருமுருகப்பெருமான் தன் ஆறு திருமுகங்களாலும் பல வழிகளில் உபதேசித்து அருளிய தத்துவங்களை, அந்தோ, [மீண்டும் நினைவுகூர்ந்து] சொல்லாமற் போய்விட்டேனே! 'வீடு-துணிமணி-மாதர்கள்' ஆகியவற்றால் [இறுதியில் பெரும் வருத்தத்தைத் தரும் பொய்யான] இவ்வுலக மாயையில் அகப்பட்டுக் கொண்டு அதை உண்மை என்று நம்பி அடியேன் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கின்றேனே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.638 pg 4.639 WIKI_urai Song number: 5 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.40mb to download |
Song 5 - maga mAyai maga mAyai kaLaindhida valla pirAn mugam ARu mozhindhu mozhindhilanE! agam Adai madandhaiyar endRu ayarum saga mAyaiyuL nindRu thayangkuvadhE!. The all-powerful Lord Thirumurugapperumaan with Six Sacred Faces expounded to me several precepts in order to get rid of the great deceitful illusion of this worldly life. Alas, I failed to [remember and] say those precepts. [After being caught up in the worldly illusion about one's home, clothes and women [which in the end only brings me great distress], I am still being hesitant, believing it to be real! |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |