திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 60 சிந்திக்கிலேன் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 60 sindhikkilEn |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 60 ... சிந்திக்கிலேன் சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியை வந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன்மயில் வாகனனைச் சந்திக் கிலேன்பொய்யை நிந்திக்கி லேலுண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே. ......... சொற்பிரிவு ......... சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச் சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே. ......... பதவுரை ......... [அடியேனின் உள்ளத்தின் துக்கங்களையும் உடலின் துயரங்களையும் அறவே அகற்றுவதன் பொருட்டு திருமுருகப்பெருமானை] நினைக்கின்றேன் இல்லை; அவருடைய சந்நிதியில் நின்று தரிசிக்கின்றேன் இல்லை; தண்டையணிந்த சிறிய திருவடிகளை வணங்குகின்றேன் இல்லை; அவருடைய பெருமைகளில் ஒன்றையாவது சொல்லி வாழ்த்துகின்றேன் இல்லை; மயிலை வாகனமாகக் கொண்ட அப்பரமபதியைச் சந்திக்கின்றேன் இல்லை; பொய்யை இகழ்ந்து நீக்கினேன் இல்லை; மெய்யான செயல் எதுவும் செய்கின்றேன் இல்லை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.66 WIKI_urai Song number: 60 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 60 - sindhikkilEn sindhikkilEn nindRu sEvikkilEn thaNdaich sitRadiyai vandhikkilEn ondRum vAzhththugilEn mayilvAgananaich sandhikkilEn poiyai nindhikkilEn uNmai sAdhikkilEn pundhik kilEsamum kAyakkilEsamum pOkkuthaRkkE. [In order I may get rid of my mental and physical agony], I ought to, but I do not think of [ThirumurugapperumAn], nor do I pay homage to the Lord while standing in His sanctuary, nor do I praise the Lord's little Sacred Feet wearing the tandai-anklet, nor do I praise any one of the Lord's Greatnesses, nor do I have the sacred vision of the Lord who has the peacock as vehicle, nor do I condemn falsehood; nor do I perform any truthful deed. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |