Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 48  புத்தியை வாங்கி
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 48  buththiyai vAngki
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 48 ... புத்தியை வாங்கி

புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
   முத்தியை வாங்க அறிகின்றி லேன்முது சூர்நடுங்கச்
      சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
         குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே.

......... சொற்பிரிவு .........

புத்தியை வாங்கி நின் பாத அம்புயத்தில் புகட்டி அன்பாய்
   முத்தியை வாங்க அறிகின்றிலேன் முது சூர் நடுங்கச்
      சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
         குத்திய காங்கேயனே வினையேனுக்கு என் குறித்தனையே?

......... பதவுரை .........

தீய வழிகளில் சென்று அல்லற்படும் அடியேனின் புத்தியை அவ்வாறு
செல்லா வண்ணம் தடுத்து தேவரீரின் திருவடித் தாமரை மலர்களில்
அன்புடன் செலுத்தி வீடுபேற்றைப் பெற்று உய்வதற்கு அடியேன்
அறியவில்லை. நீண்டகாலம் கொடூரமான செயல்கள் புரிந்த வயதான
சூரபன்மன் நடுங்கும்படி சக்திவேலினை விடுவதற்கு அடியேனால்
முடியுமா? கிரௌஞ்சமலை பொடிபடும்படி வேலாயுதத்தால் குத்திய
கங்கையின் மைந்தரே, வினையின் விளைவை உடையவனாகிய
அடியேன் யாது செய்யவேண்டும் என எண்ணியுள்ளீர்?

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.53   pg 4.54 
 WIKI_urai Song number: 48 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 48 - buththiyai vAngki

buththiyai vAngki nin pAdha ambuyaththil pugatti anbAi
   muththiyai vAngka aRigindRilEn mudhu sUr nadungkach
      saththiyai vAngkath tharamO kuvadu thavidupadak
         kuththiya kAngkEyanE vinaiyEnukku en kuRiththanaiyE?

O' Lord, I did not know how to direct my intellect to Your lotus-flower-like-feet to attain salvation with love, so as to prevent my mind from traversing the paths of evil, and suffer the consequences. Am I capable of hurling the powerful lance at the aged SUrapanman of cruel deeds to make him shiver with fear? You are the Son of GangA, and You pierced the krauncha-hill and reduced it to dust. What do You have in Your sacred mind as to what I, a bearer of the results of past deeds, should do?
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 48 - buththiyai vAngki

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]