திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 17 வேத ஆகம Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 17 vEdha Agama |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 17 ... வேத ஆகம வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப் பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச் சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப் போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே. ......... சொற்பிரிவு ......... வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப் பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப் போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே. ......... பதவுரை ......... வேதங்களும் ஆகமங்களும் துதிக்கின்ற அழகிய வேற்படையையுடைய திருமுருகப்பெருமானின், வெட்சிமலரால் ஆகிய மாலை மலர்ந்துள்ளதும் தண்டை என்னும் அணிகலனை உடையதுமாகிய செந்தாமரைமலர் போன்ற திருவடிகளைக் காவலாகக்கொண்டு, வேறு ஒருவருக்கும் தெரியாத நல்ல நெறியாகிய, இரவும்-பகலும்-மறத்தலும்-நினைத்தலும்- வஞ்சகமும்-அற்ற பரவெளியில் மறைந்து பேசாது சும்மா இருக்கும் [அநுபூதி] நிலையில் நிலைத்து நிற்கும் பொருட்டு இனியாவது வருவாயாக மனமே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.25 pg 4.26 WIKI_urai Song number: 17 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 17 - vEdha Agama vEdha Agama chithra vElAyudhan vetchipUththa thaNdaip pAdha aravindham araN Aga allum pagalum illAch sUdhAnadhu atRa veLikkE oLiththuch summAirukkap pOdhAi ini manamE theriyAdha oru bUdharukkumE. O' mind, please come along at least now to have as your Protector the garlands-of-vetchi-flowers-and-the-anklets-of-tandai-adorned-red-lotus-flower-like-Sacred-Feet of ThirumurugapperumAn, whose beautiful lance is praised by the scriptures of the VEdAs and the AgamAs, so that you may proceed to the outer space, bereft of night and day, forgetfulness or remembrance or deception, and remain hidden there in the state of quietude with no speech or motion, this rightful path being unknown to anyone else. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |