திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 16 தடுங்கோள் மனத்தை Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 16 thadungkOL manaththai |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 16 ... தடுங்கோள் மனத்தை தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும் இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல் விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. ......... சொற்பிரிவு ......... தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக் கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல் விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே. ......... பதவுரை ......... மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடைசெய்யுங்கள்; கோபத்தை அறவே விட்டுவிடுங்கள்; எப்போதும் ஏழைகளுக்குத் தானம் கொடுத்துக் கொண்டிருங்கள்; இருந்தபடியே அசைவற்றுப் பேசாமல் இருங்கள். [இவ்வாறு செய்வீர்களானால்] ஏழு உலகங்களும் பிழைக்குமாறு கொடிய கோபத்துடன்கூடிய சூரபன்மனுடன் கிரௌஞ்சமலையையும் பிளந்து துகள்பட்டு அழியும்படி கூர்மையான வேலினை விடுத்து அருளிய தனிப் பெருந்தலைவராகிய திருமுருகப்பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு உங்களை ஆட்கொள்ளும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.24 pg 4.25 WIKI_urai Song number: 16 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 16 - thadungkOL manaththai thadungkOL manaththai vidungkOL veguLiyaith dhAnam endRum idungkOL irundhapadi irungkOL ezhu pArum uiyyak kodum kObach sUrudan kundRam thiRakkath thoLaikka vaivEl vidum kOn aruLvandhu thAnE umakku veLippadumE. Please stop your mind from following the paths of the five sense-organs; forsake the emotion of anger completely; keep giving alms/gifts to the poor always; be quiet in the same position as you are with no speech or movement. [If these rules are observed] you would be automatically conferred with the sacred grace of the unique Lord ThirumurugapperumAn, who hurled the sharp lance to pierce and split both the cruelly angry SUrapanman and the krauncha-hill and reduced them to dust, and saved the seven worlds from their tyranny. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |