திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1326 ஓருரு வாகி (திருவெழுகூற்றிருக்கை) Thiruppugazh 1326 OruruvAki (thiruvezhukUtRirukkai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
......... பாடல் ......... ஓருரு வாகிய தாரகப் பிரமத் தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை இருபிறப் பாளரி னொருவ னாயினை ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள் நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து மூவரும் போந்து இருதாள் வேண்ட ஒருசிறை விடுத்தனை ஒருநொடி யதனில் இருசிறை மயிலின் முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய மும்மதன் தனக்கு மூத்தோ னாகி நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் அறுகு சூடிக் கிளையோ னாயினை ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து முக்கட் சுடரினை இருவினை மருந்துக் கொருகுரு வாயினை ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட் டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற ஏரகத் திறைவ னென இருந்தனையே. ......... சொல் விளக்கம் ......... ஓருருவாகிய தாரகப் பிரமத்து ... ஒரு (1) பொருளாகிய பிரணவமாம் முழுமுதலின் ஒருவகைத் தோற்றத்து ... (சிவனின் ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்ந்த) ஒரு (1) வகையான தோற்றத்தில், இருமரபெய்தி ... சக்தி சிவம் என்னும் இரண்டின் (2) லக்ஷணங்களும் அமைந்து, ஒன்றாய் ஒன்றி ... அதுவே ஓர் (1) உருவாகச் சேர்ந்து, இருவரிற் தோன்றி ... சக்தி சிவம் என்ற இருவரிடமும் (2) தோன்றி, மூவாதாயினை ... மூப்பே (3) இல்லாது என்றும் இளமையோடு விளங்குகிறாய். இருபிறப்பாளரின் ... [உபநயனத்துக்கு முன்னும் பின்னும்] இரு (2) பிறப்புக்களை உள்ள அந்தணர் குலத்தில் ஒருவன் ஆயினை ... ஒப்பற்ற ஒருவனாக (1) விளங்கிய திருஞானசம்பந்தராய் அவதரித்தாய். ஓராச் செய்கையின் ... [ஓரா - இரு பொருள் - ஒன்று (1) மற்றும் தெரியாமல்] பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த காரணமாக, இருமையின் (2) முன்னாள் (3) ... [இருமை - இரு பொருள் - இரண்டு (2) மற்றும் கர்வம்) கர்வத்துடன் பிரம்மா முன்னாளில் (முன்னாள் = இரு பொருள் - மூன்று (3) மற்றும் முன்பொரு நாள்] நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து ... நான்கு (4) முகங்களுடைய பிரமனின் குடுமியை கணநேரத்தில் (கைகளால் குட்டிக்) கலைத்து, மூவரும் போந்து இருதாள் வேண்ட ... அரி, அரன், இந்திரன் ஆகிய மூவரும் (3) உன்னை அடைந்து உன்னிரு (2) பாதங்களில் பணிந்து முறையிட்டு வேண்ட, ஒருசிறை விடுத்தனை ... பிரமனை நீ அடைத்த ஒரு (1) சிறையினின்றும் விடுவித்தாய். ஒருநொடியதனில் இருசிறை மயிலின் ... ஒரு (1) நொடிப்பொழுதில் இரண்டு (2) சிறகுகள் உடைய மயிலில் ஏறி, முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச ... மூன்று (3) பக்கங்களிலும் நீர் உள்ள கடல்களை ஆடையாக உடுத்தியுள்ள, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நால் (4) வகையான நிலம் படைத்த இவ்வுலகமே அஞ்ச (5) (அஞ்ச என்றால் ஐந்து -5- என்றும் பயப்பட என்றும் இரு பொருள்), நீ வலம் செய்தனை ... நீ உலகை வலம் வந்தாய். நால்வகை மருப்பின் ... நான்கு (4) விதமான தந்தங்களை உடையதும் (ஐராவத யானைக்கு நான்கு தந்தங்கள்), மும்மதத்து ... மூன்று (3) வகையான மதம் பிடிக்கக் கூடியதும், இருசெவி ஒருகை பொருப்பன் ... இரண்டு (2) காதுகளையும், ஒரு (1) துதிக்கையையும் கொண்ட மலை போன்ற ஐராவதத்தை உடைய இந்திரனின் மகளை வேட்டனை ... மகளாகிய தேவயானையை மணம் செய்து கொண்டனை. ஒருவகை வடிவினில் ... ஒரு (1) வகையான யானை வடிவிலே இருவகைத்து ஆகிய ... இள யானை, கிழ யானை என இரு (2) வடிவிலும் வரவல்லதும், மும்மதன் தனக்கு ... கன்ன மதம், கை மதம், வாய் மதம் என்ற மும்மத (3) நீரும் பெருகி வந்த கிழ யானைக்கு மூத்தோன் ஆகி ... மூத்த சகோதரனாக* விளங்கினாய். நால்வாய் முகத்தோன் ... [நால்வாய் = இரு பொருள் - நான்கு (4) மற்றும் வாயினின்று] தொங்கும் துதிக்கை முகத்தோனும், ஐந்துகைக் கடவுள் ... ஐங்கரங்களை (5) (தோளிலிருந்து நான்கு கரங்களும், துதிக்கையும்) உடைய கடவுளும், அறுகு சூடிக்கு ... அறுகம் [அறுகம் = இரு பொருள் - ஆறு (6) மற்றும் அறுகம் (புல்)] புல்லைச் சூடியவனுமான கணபதிக்கு இளையோன் ஆயினை ... இளைய சகோதரன் என விளங்குகிறாய். ஐந்தெழுத்து அதனில் ... நமசிவாய என்ற பஞ்ச (5) அட்சரத்தின் மூலமாக நான்மறை உணர்த்து ... நான்கு (4) வேதங்களாலும் இவரே இறைவன் என்று உணர்த்தப் பெறுபவரும், முக்கட் சுடரினை ... சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடரை (3) தம் கண்களாக உடையவரும், இருவினை மருந்துக்கு ... நல்வினை, தீவினை இரண்டிற்கும் (2) மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு ஒரு குருவாயினை ... ஒப்பற்ற ஒரு (1) குருநாதனாக அமைந்தாய். ஒருநாள் ... முன்பொரு (1) நாள் உமையிரு முலைப்பால் அருந்தி ... உமாதேவியின் இரு மார்பிலும் சுரந்த ஞானப்பாலைப் பருகி முத்தமிழ் விரகன் ... இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும் வல்லவனாகி, நாற்கவி ராஜன் ... நால்வகைக் கவியிலும்** அரசனாகி, ஐம்புலக் கிழவன் ... பஞ்ச இந்திரியங்களின் உணர்ச்சிகட்கு அடிமைப்படாத உரிமையாளனாகி, அறுமுகன் இவன் என ... ஆறு முகங்களை உடைய ஷண்முக மூர்த்தியே இவன்தான் என யாவரும் கூற எழில்தரும் அழகுடன் ... இளமை ததும்பும் அழகோடு கழுமலத்து உதித்தனை ... சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத் தோன்றினாய். அறுமீன் பயந்தனை ... கார்த்திகைப் பெண்களாகிய ஆறு நக்ஷத்திரங்களும் பெற்ற புதல்வனாகினாய். ஐம் தரு வேந்தன் ... கற்பகம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம் என்ற ஐந்து தேவ விருட்சங்கள் இருக்கும் தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய். நான்மறைத் தோற்றத்து ... நான்கு மறைகளைப் போன்று மிக ரகசியமானதும், முத்தலைச் செஞ்சூட்டு ... மூன்று பிரிவுகளோடு சிவந்த கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான அன்றிலங் கிரி ... அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட மலையை இரு பிளவாக ... இரண்டு கூறாகப் பிளக்குமாறு ஒரு வேல் விடுத்தனை ... ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய். காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த ... காவிரியின் வட பாகத்தில் விளங்கும் சுவாமிமலையில் இருக்கும் ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற ... சரவணபவ என்னும் உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத கமலங்களைப் போற்ற, ஏரகத்து இறைவன் என இருந்தனையே. ... திருவேரகத்தின் இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய். |
குறிப்பு: இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாடல். 1 1 2 1 1 2 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 . . . . . . . . . . . . . . . . . . . . . . . இடையில் தேர் தட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . . 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 2 1 1 2 1 1 |
தேர் படத்தைக் காண இங்கே சொடுக்கவும் தேர் படத்தின் பிரதியை பதிவிரக்க இங்கே சொடுக்கவும் (302kb zip file) |
சில தமிழ்ச் சொற்கள் இரு பொருள் படும்படி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மூவாதாயினை என்ற சொல்லுக்கு இரு பொருள் .. (மூவா = மூன்று மற்றும் மூவா = வயதாகாமல் இளமையாக). |
* முருகனுக்காக வள்ளியை பயமுறுத்த விநாயகர் கிழ யானையாகி மதம் பெருக வந்தார். அப்படி வந்த யானை முருகனுக்குப் பின்பு தோன்றியதால், முருகன் இங்கு மூத்தவன் ஆகிறான். |
** தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்: ஆசு - எதுகை மோனையுடன் கூடியது, மதுரம் - இனிமை வாய்ந்தது, சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது, வித்தாரம் - வர்ணனை மிக்கது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.690 pg 3.691 pg 3.692 pg 3.693 pg 3.694 pg 3.695 pg 3.696 pg 3.756 pg 3.757 WIKI_urai Song number: n-a goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1326 - 'OruruvAgi' (thiruvezhukUtRirukkai) Oruru vAgiya thAragap piramaththu oruvagaith thOtraththu irumara beydhi ondrA yondri iruvariR thOndri mUvA dhAyinai irupiRap pALari noruvan Ayinai OrA seygayin irumaiyin munnAL nAnmugan kudumi imaippiniR peyarththu mUvarum pOndhu iruthAL vENda oru siRai viduththanai oru nodi yadhanil irusiRai mayilin munneer uduththa nAnilam anja neevalam seydhanai naalvagai maruppin mummadha thiruchchevi orugaip poruppan magaLai vEttanai oruvagai vadivinil iruvagaith thAgiya mummadhan thanakku mUththOn Agi nAlvAy mugaththOn aindhugaik kadavuL aRugu sUdik kiLaiyOn Ayinai aindhezhuth thadhanil nAnmaRai uNarththu mukkat chudarinai iruvinai marundhuk koru guru vAyinai orunAL umaiyiru mulaippAl arundhi muththamizh viragan nARkavi rAjan aimbulak kizhavan aRumugan ivanena ezhiltharum azhagudan kazhumalath thudhiththanai aRumeen payandhanai aindharu vEndhan nAnmaRaith thOtraththu muththalaic chenjchUttu andRil angiri iru piLavAga oruvEl viduththanai kAviri vadakarai mEviya gurugiri irundha ARezhuththu andhaNar adiyiNai pOtra Eragathth iRaivan ena irundhanaiyE. ......... Meaning ......... OruruvAgiya thAragap piramaththu: The Brahmam is the complete, primeval principle of ONENESS (1); oruvagaith thOtRaththu: in a unique (1) form of Lord SivA (when His five faces are joined with the sixth, athOmugam), irumarapeythi: the two (2) characterstics, namely, Shakthi and Sivam, are combined onRAy onRi: to unite (1) as a single (1) manifestation; iruvAriR thOnRi: having the origin from the two (2) aspects, namely, Shakthi and Sivam mUvAthAyinai: You for ever remain youthful (mU refers to the number 3); irupiRappALarin: Coming in the lineage of Brahmins (who are supposed to have two (2) births, one before the holy-thread ceremony and one after) oruvan Ayinai: You came as the unique (1) poet, ThirugnAna Sambandhar! OrAc cheygaiyin: (OrA has two meanings: one -1- and ignorant) Being ignorant of the meaning of the PraNava Manthra (OM) irumaiyin munnAL: (irumai has two meanings: two -2- and pride) when proud Brahma walked past Murugan one day (munnAl has two meanings: three -3- and one day), nAnmugan kudumi imaippiniR peyarththu: the tuft of the four-faced (4) Brahma was instantaneously untangled (with Your knuckles); mUvarum pOnthu iruthAL vENda: VishNu, SivA and IndrA, the three (3) Lords, approached You and prostrated at Your two (2) feet requesting compassion; orusiRai viduththanai: then, You released Brahma from his unitary (1) prison-cell. orunodiyathanil irusiRai mayilin: In the matter of one (1) second, You mounted the peacock with two (2) wings; munneeer uduththa nAnilam anja: the earth wearing the seas, surrounded by water in three (3) sides as a robe, and consisting of four (4) major subdivisions, namely, mullai - the forests, kuRinji - the mountains, marutham - plains with paddy-fields, and neythal - the seaside, was terrified (anja has two meanings: the number five -5- and terrified); nee valam seythanai: You flew around the world! nAlvagai maruppin mummathaththu: The divine elephant, AirAvadham, has four (4) different tusks and is capable of being affected by three (3) kinds of frenzy; irusevi orugai poruppan: it has two (2) ears and a unique (1) trunk; that mountain-like elephant belongs to IndrA; magaLai vEttanai: and You wooed IndrA's daughter, DEvayAnai, and married her! oruvagai vadivinil: In one (1) form of a special figure, iruvagaiththu Agiya: He could come in two (2) different forms, namely an older elephant and a younger elephant; mummathan thanakku: the older elephant has three (3) different discharges of bilious juices of frenzy (namely, through its cheeks, its trunk and its jaw); mUththOn Agi: You became the older* brother of that older elephant; nAlvAy mugaththOn: (nAlvAy has two meanings: four (4) and hanging mouth, (namely, trunk) he has a trunk hanging from His mouth; ainthugaik kadavuL: He has five (5) arms (four arms from the shoulders plus the trunk) aRugu sUdikku: He wears his favourite grass aRugam (cynodon) (Arugam has two meanings: the number six -6- and cynodon grass); He is Lord GaNapathi; iLaiyOn Ayinai: You are the younger brother of that Lord; ainthezuththu athanil: through the five (5) sacred letters of Lord SivA (namely, NamasivAya) nAnmaRai uNarththu: the four (4) vEdAs declare Him to be the Lord Almighty; mukkat chudarinai: He has three (3) effulgent eyes (namely, the Sun, the Moon and the Fire - agni); iruvinai marunthukku: He is the ultimate medicine for the two (2) kinds of deeds (namely, good and bad); He is Lord SivA; oru guruvAyinai: and You are the unique (1) Master of that Lord SivA! orunAL: Once (1) upon a time, umaiyiru mulaippAl arunthi: imbibing the holy milk from the two (2) hallowed breasts of Goddess UmA DEvi, muththamiz viragan: he became an expert in all the three (3) branches of Tamil language (namely, literature, music and drama); nARkavi rAjan: he became the king of four (4) kinds of poetry** aimpulak kizhavan: he conquered the five (5) sensory organs, without being subject to any of their influence; aRumugan ivan ena: people referred to him as none other than Lord ShanmugA, with six (6) faces; ezhiltharum azhagudan: he had an extraordinary youth and handsomness (ezhil has two meanings: the number -7- and handsomness); kazhumalaththu uthiththanai: he was ThirugnAna Sambandhar; and You were born as him in SeegAzhi, Oh Lord! aRumeen payanthanai: You came as the child of the six (6) KArthigai maids (represented by the six star-constellation, KArthigai); aim tharu vEnthan: You became the emperor of the Celestial world that possesses five (5) wish-yielding trees (namely, kaRpagam, manthAram, pArijAtham, santhAnam and arichanthanam); nAnmaRaith thOtRaththu: this mountain has a secretive appearance like the four (4) vEdAs; muththalaic chenjchUttu: it has three (3) distinctive reddish peaks as its crest; anRilang giri: that mountain has the name of the bird anRil (KrounchA); iru piLavAga: it was split into two (2) oru vEl viduththanai: when You wielded Your singularly (1) unique spear, Oh Lord! kAviri vadakarai mEviya gurugiri irundha: Choosing SwAmimalai, on the northern bank of River KAvEri, ARezuththu anthaNar adiyiNai pOtRa: as Your lotus feet are extolled by VEdic priests chanting the six-lettered manthrA, SaravaNabava, Eragaththu iRaivan ena irunthanaiyE: You are seated with relish as the Lord of ThiruvEragam (SwAmimalai)! |
......... Note ......... (This unique song is shaped like a chariot as given overleaf. With seven layers above the main deck and seven below, the chariot is composed as follows: 1 1 2 1 1 2 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 Then the deck . . . . . . . . . . . . . . . . . . . 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 2 1 1 2 1 1 For each layer the reference would be to the number 1, 2, 3 etc. in an ascending order and then in a descending order. Some of the Tamil words referring to numbers have more than one meaning; for instance the word "mUvAdhakinai" refers to the number 3 (mU) but it also means "You are ever-youthful". With this pattern in mind, the build-up of seven decks of the chariot in poetical form is unique). |
click to view the 'thEr' (chariot) picture click here to download the 'thEr' (chariot) picture (307kb zip file) |
......... Meaning ......... OruruvAgiya thAragap piramaththu: The Brahmam is the complete, primeval principle of ONENESS (1); oruvagaith thOtRaththu: in a unique (1) form of Lord SivA (when His five faces are joined with the sixth, athOmugam), irumarapeythi: the two (2) characterstics, namely, Shakthi and Sivam, are combined onRAy onRi: to unite (1) as a single (1) manifestation; iruvAriR thOnRi: having the origin from the two (2) aspects, namely, Shakthi and Sivam mUvAthAyinai: You for ever remain youthful (mU refers to the number 3); irupiRappALarin: Coming in the lineage of Brahmins (who are supposed to have two (2) births, one before the holy-thread ceremony and one after) oruvan Ayinai: You came as the unique (1) poet, ThirugnAna Sambandhar! OrAc cheygaiyin: (OrA has two meanings: one -1- and ignorant) Being ignorant of the meaning of the PraNava Manthra (OM) irumaiyin munnAL: (irumai has two meanings: two -2- and pride) when proud Brahma walked past Murugan one day (munnAl has two meanings: three -3- and one day), nAnmugan kudumi imaippiniR peyarththu: the tuft of the four-faced (4) Brahma was instantaneously untangled (with Your knuckles); mUvarum pOnthu iruthAL vENda: VishNu, SivA and IndrA, the three (3) Lords, approached You and prostrated at Your two (2) feet requesting compassion; orusiRai viduththanai: then, You released Brahma from his unitary (1) prison-cell. orunodiyathanil irusiRai mayilin: In the matter of one (1) second, You mounted the peacock with two (2) wings; munneeer uduththa nAnilam anja: the earth wearing the seas, surrounded by water in three (3) sides as a robe, and consisting of four (4) major subdivisions, namely, mullai - the forests, kuRinji - the mountains, marutham - plains with paddy-fields, and neythal - the seaside, was terrified (anja has two meanings: the number five -5- and terrified); nee valam seythanai: You flew around the world! nAlvagai maruppin mummathaththu: The divine elephant, AirAvadham, has four (4) different tusks and is capable of being affected by three (3) kinds of frenzy; irusevi orugai poruppan: it has two (2) ears and a unique (1) trunk; that mountain-like elephant belongs to IndrA; magaLai vEttanai: and You wooed IndrA's daughter, DEvayAnai, and married her! oruvagai vadivinil: In one (1) form of a special figure, iruvagaiththu Agiya: He could come in two (2) different forms, namely an older elephant and a younger elephant; mummathan thanakku: the older elephant has three (3) different discharges of bilious juices of frenzy (namely, through its cheeks, its trunk and its jaw); mUththOn Agi: You became the older* brother of that older elephant; nAlvAy mugaththOn: (nAlvAy has two meanings: four (4) and hanging mouth, (namely, trunk) he has a trunk hanging from His mouth; ainthugaik kadavuL: He has five (5) arms (four arms from the shoulders plus the trunk) aRugu sUdikku: He wears his favourite grass aRugam (cynodon) (Arugam has two meanings: the number six -6- and cynodon grass); He is Lord GaNapathi; iLaiyOn Ayinai: You are the younger brother of that Lord; ainthezuththu athanil: through the five (5) sacred letters of Lord SivA (namely, NamasivAya) nAnmaRai uNarththu: the four (4) vEdAs declare Him to be the Lord Almighty; mukkat chudarinai: He has three (3) effulgent eyes (namely, the Sun, the Moon and the Fire - agni); iruvinai marunthukku: He is the ultimate medicine for the two (2) kinds of deeds (namely, good and bad); He is Lord SivA; oru guruvAyinai: and You are the unique (1) Master of that Lord SivA! orunAL: Once (1) upon a time, umaiyiru mulaippAl arunthi: imbibing the holy milk from the two (2) hallowed breasts of Goddess UmA DEvi, muththamiz viragan: he became an expert in all the three (3) branches of Tamil language (namely, literature, music and drama); nARkavi rAjan: he became the king of four (4) kinds of poetry (namely, Asu - rhymes, mathuram - sweetness, viththAram - descriptive, and chiththiram - imaginative) aimpulak kizhavan: he conquered the five (5) sensory organs, without being subject to any of their influence; aRumugan ivan ena: people referred to him as none other than Lord ShanmugA, with six (6) faces; ezhiltharum azhagudan: he had an extraordinary youth and handsomness (ezhil has two meanings: the number -7- and handsomness); kazhumalaththu uthiththanai: he was ThirugnAna Sambandhar; and You were born as him in SeegAzhi, Oh Lord! aRumeen payanthanai: You came as the child of the six (6) KArthigai maids (represented by the six star-constellation, KArthigai); aim tharu vEnthan: You became the emperor of the Celestial world that possesses five (5) wish-yielding trees (namely, kaRpagam, manthAram, pArijAtham, santhAnam and arichanthanam); nAnmaRaith thOtRaththu: this mountain has a secretive appearance like the four (4) vEdAs; muththalaic chenjchUttu: it has three (3) distinctive reddish peaks as its crest; anRilang giri: that mountain has the name of the bird anRil (KrounchA); iru piLavAga: it was split into two (2) oru vEl viduththanai: when You wielded Your singularly (1) unique spear, Oh Lord! kAviri vadakarai mEviya gurugiri irundha: Choosing SwAmimalai, on the northern bank of River KAvEri, ARezuththu anthaNar adiyiNai pOtRa: as Your lotus feet are extolled by VEdic priests chanting the six-lettered manthrA, SaravaNabava, Eragaththu iRaivan ena irunthanaiyE: You are seated with relish as the Lord of ThiruvEragam (SwAmimalai)! |
* For the sake of Murugan, Lord GaNapathi came as an old elephant to scare away VaLLi. As that old elephant was born, in terms of time, after Murugan, the latter becomes elder to GaNapathi. |
** The four varieties of Tamil poetry are: Asu (alliteration) Mathuram (sweetness) Chiththiram (artful presentation) and ViththAram (description). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |