திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1322 மலரணை ததும்ப (பழமுதிர்ச்சோலை) Thiruppugazh 1322 malaraNaithadhumba (pazhamudhirchOlai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான ...... தனதான ......... பாடல் ......... மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ மணபரி மளங்கள் வேர்வை ...... யதனோடே வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க வனைகலை நெகிழ்ந்து போக ...... இளநீரின் முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட முகமுகமொ டொன்ற பாய ...... லதனூடே முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு முடிவடிவொ டங்கை வேலு ...... மறவேனே சிலைநுத லிளம்பெண் மோகி சடையழ கியெந்தை பாதி திகழ்மர கதம்பொன் மேனி ...... யுமைபாலா சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக திகழயி லெறிந்த ஞான ......முருகோனே கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள குணவலர் கடம்ப மாலை ...... யணிமார்பா கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான குலகிரி மகிழ்ந்து மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே வழி பட ... மலர்ப் படுக்கை அசைந்து கலைய, மேகம் போன்ற கரிய கூந்தலின் முடி சரிந்து விழ, நறு மணங்கள் வேர்வையுடன் ஒன்றுபட, இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இள நீரின் முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட ... விசாலமான கண்கள் அசைய, பிறை போலும் நெற்றி புரண்டு குங்குமம் கலைய, அலங்காரமாய் அணிந்த ஆடை நெகிழ்ந்து போக, இளநீர் போன்ற மார்பகங்கள் இரண்டும் அசைய, நூலின் பிளவு போன்ற நுண்ணிய இடை சுழன்று வாட்டம் கொள்ள, முக(ம்) முகமோடு ஒன்ற பாயல் அதனூடே முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் ... முகம் முகத்தோடு பொருந்த, படுக்கை அணையில் பெரிய மோகச் செயலில் கலந்து முழுகி (நான்) இன்புற்று இருந்தாலும், அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே ... மாலைகள் அசையும் திருமுடி முதலான உனது வடிவத்தையும் அழகிய திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தையும் மறக்க மாட்டேன். சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா ... வில் போன்ற நெற்றியை உடைய இளம் பெண், ஆசையைத் தருபவள், அழகிய சடையை உடையவள், என் தந்தையாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் விளங்கும் மரகதம் போல் பச்சை நிறத்து அழகிய உருவினளாகிய உமா தேவியின் குழந்தையே, சிறு நகை புரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே ... புன்னகை செய்து, சூரனும், மலையும், கடலும் எரிந்து போக, கையிலே திகழ்ந்த வேலை எறிந்த ஞான முருகனே, கொலை மிக பயின்ற வேடர் மகள் வ(ள்)ளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா ... கொலைத் தொழிலை நன்றாகப் பயின்றிருந்த வேடர்கள் பெண்ணாகிய வள்ளி மணந்த தோளனே, நற் குணனே, கடப்ப மலர் மாலையை அணிந்த மார்பனே, கொடி மி(ன்)னல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே. ... மின்னல் கொடி போன்ற ஜோதியே, காலைக் கதிர் போல ஒளிவீசும் ஞானியே, (பழமுதிர்) சோலை மலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.1115 pg 1.1116 WIKI_urai Song number: 448 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1322 - malaraNai thadhumba (pazhamuthirchOlai) malaraNai thathumpa mEka kuzhalmudi sarinthu veezha maNapari maLangaL vErvai ...... yathanOdE vazhipada idanga NAda piRainuthal puraNdu mAzhka vanaikalai nekizhnthu pOka ...... iLaneerin mulaiyiNai thathumpa nUlin vakiridai suzhanRu vAda mukamukamo donRa pAya ...... lathanUdE muthumayal kalanthu mUzhki makizhkinum alanga lAdu mudivadivo dangai vElu ...... maRavEnE silainutha liLampeN mOki sadaiyazha kiyenthai pAthi thikazhmara kathampon mEni ...... yumaibAlA siRunakai purinthu cUrar kirikada lerinthu pOka thikazhayi leRintha njAna ......murukOnE kolaimika payinRa vEdar makaLvaLi maNantha thOLa kuNavalar kadampa mAlai ...... yaNimArpA kodimina ladaintha sOthi mazhakathir thavazhntha njAna kulakiri makizhnthu mEvu ...... perumALE. ......... Meaning ......... malar aNai thathumpa mEka kuzhal mudi sarinthu veezha maNa parimaLangaL vErvai athanOdE vazhi pada: The flowery bed shaking and becoming dishevelled, the cloud-like black hair becoming unfastened and falling freely, many a fragrance mingling with the perspiration, idam kaN Ada piRai nuthal puraNdu mAzhka vanai kalai nekizhnthu pOka iLa neerin mulai iNai thathumpa nUlin vakir idai suzhanRu vAda: the wide eyes fluttering, the crescent-shaped forehead throbbing and erasing the vermillion mark, the attire that is worn pretty decoratively becoming slack, the breasts looking like two tender coconuts quivering, the thread-like slender waist reeling and sagging, muka(m) mukamOdu onRa pAyal athanUdE muthu mayal kalanthu mUzhki makizhkinum: and the faces attaching to each other, I might have been drowning in the big act of love-making upon the bed; nonetheless, alangal Adu mudi vadivodu am kai vElum maRavEnE: I will never forget Your sacred figure beginning from the heads where garlands sway and the Spear that is held in Your hallowed hand, Oh Lord! silai nuthal iLam peN mOki sadai azhaki enthai pAthi thikazh marakatham pon mEni umai bAlA: She is a youthful damsel having a bow-like forehead; She is the One who causes desire; She has pretty tresses; She is concorporate on the left side of the body of my Father, Lord SivA; She has an emerald-green complexion; She is the beSUranl Goddess, UmA, and You are Her child, Oh Lord! siRu nakai purinthu cUrar kiri kadal erinthu pOka thikazh ayil eRintha njAna murukOnE: With a benign smile, You wielded the elegant spear from Your hand and burnt down the demon SUran, the mountains and the sea, Oh MurugA of absolute Knowledge! kolai mika payinRa vEdar makaL va(L)Li maNantha thOLa kuNa alar kadampa mAlai aNi mArpA: The hunters had mastered the art of slaughter, and she was the damsel of those hunters; You wedded that VaLLi, Oh broad-shouldered and virtuous One! You wear the kadappa garland on Your hallowed chest, Oh Lord! kodi mi(n)nal adaintha sOthi mazha kathir thavazhntha njAna kula kiri makizhnthu mEvu perumALE.: Oh Great Effulgence that dazzles like the lightning! Oh Wise One, with knowledge radiating like morning rays! You are seated with relish on the mountain in Pazhamuthir cOlai, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |