திருப்புகழ் 1315 சீர் சிறக்கும் மேனி  (பழமுதிர்ச்சோலை)
Thiruppugazh 1315 seersiRakkummEni  (pazhamudhirchOlai)
Thiruppugazh - 1315 seersiRakkummEni - pazhamudhirchOlaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதத்த தான தனாதனா தன
     தானதத்த தான தனாதனா தன
          தானதத்த தான தனாதனா தன ...... தனதானா

......... பாடல் .........

சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென
     நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென
          சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார்

சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு
     நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு
          தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர்

மார்படைத்த கோடு பளீர் பளீ ரென
     ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென
          மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி

வாடைபற்று வேளை யடா வடா வென
     நீமயக்க மேது சொலாய் சொலா யென
          வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
     கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
          பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே

பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை
     மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு
          பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா

போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென
     நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென
          போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி

பூமியுக்க வீசு குகா குகா திகழ்
     சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்
          பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் என ... அழகு மிக்க உடல்
பசுமையான குளிர்ந்த நிறத்துடன் விளங்க,

நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என ... கால் சிலம்பின் ஓசை கலீர்
கலீர் என்று ஒலிக்க,

சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேல் என வரு மானார் ...
இணைந்து செல்லும் பாதங்கள் செக்கச் செவேல் எனத் திகழ வருகின்ற
விலைமாதர்கள் சிலரும்,

சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களு(ம்) ...
கூட்டங்களுக்குக் (கொடுப்பதற்காக) கட்டிளமைப் பருவத்து சில சில
பெண்களும்,

நூறு லக்ஷ கோடி மயால் மயால் கொடு ... நூறு லக்ஷ கோடி
அளவில் மிகப் பலத்த மோகத்தோடு

தேடி ஒக்க வாடி ஐயோ ஐயோ என மடமாதர் ... தேடி
வைத்துள்ள பொருள்கள் அவ்வளவையும் வாட்டமுற்று ஐயோ ஐயோ
என்னும்படி (இழக்கச் செய்கின்ற) இளம் மாதர்களின்

மார்பு அடைத்த கோடு பளீர் பளீர் என ... நெஞ்சம் எல்லாம்
பரந்துள்ள மலை போன்ற மார்பகம் பளீர் பளீர் என்று ஒளி வீச,

ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என ... அதைக் கண்டு மனக்
கலக்கம் உற்று என் உயிர் பகீர் பகீர் எனப் பதைக்க,

மா மசக்கில் ஆசை உளோம் உளோம் என நினைவு ஓடி ...
அம்மாதர்களின் பெரிய மயக்கத்தில் ஆசை உண்டு, உண்டு என்று
நினைவானது ஓடி,

வாடை பற்று வேளை அடா அடா என ... (அந்தக் காமப் பித்தக்)
காற்று என்னைப் பிடிக்கின்ற சமயத்தில் அடா அடா என்று என்னைக்
கூவி அழைத்து,

நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என ... உனக்கு என்ன
மயக்கம் இது சொல்லுக, சொல்லுக என வற்புறுத்தி,

வாரம் வைத்த பாதம் இதோ இதோ என அருள்வாயே ...
நீ அன்பு வைத்த திருவடி இதோ, இதோ என்று கூறித் தந்து அருள்
புரிவாயாக.

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் ... பாரதத்தை மேரு
மலையின் வெளிப் புறத்தில் நன்கு விளங்கும்படி

கோடு ஒடித்த நாளில் வரை (இ)வரை (இ)பவர் ... தமது
தந்தத்தையே ஒடித்து அந்த நாளில் மலையில் எழுதிய யானை
முகத்தவரும்,

பா(னு) நிறக் கணேசர் கு ஆகு வாகனர் இளையோனே ...
சூரியனைப் போன்ற நிறத்தை உடைய கணபதியும், சிறிய மூஞ்சூறு
வாகனத்தவரும் ஆகிய விநாயகருக்குத் தம்பியே,

பாடல் முக்ய மாது தமீழ் தமீழ் இறை ... பாக்கள் சிறப்புடனும்
அழகுடனும் உள்ள தமிழை, தமிழ்க் கடவுளாய் நின்று,

மா முநிக்கு காதில் உணார் உணார் விடு ... சிறந்த அகத்திய
முனிவருக்கு, செவியில் நன்கு ஆராய்ந்து உபதேசம் செய்த,

பாசம் அற்ற வேத குரூ குரூபர குமரேசா ... இயல்பாகவே
பாசங்களினின்று நீங்கிய வேத குருபரனாகிய குமரேசனே,

போர் மிகுத்த சூரன் விடோம் விடோம் என ... போரில்
மிக்கவனாகிய சூரன் விட மாட்டேன் விடமாட்டேன் என்று,

நேர் எதிர்க்க வேலை படீர் படீர் என போய் அறுத்த போது ...
நேராக வந்து எதிர்த்தவுடன் வேலாயுதத்தை படீர் படீர் என்ற ஒலியுடன்
(அந்த அசுரர்களைப்) போய் அறுத்த போது

குபீர் குபீர் என வெகு சோரி பூமி உக்க வீசு குகா குகா ...
ரத்தம் குபீர் குபீர் என்று பூமியில் சிந்த ஆயுதத்தை வீசிய குகனே,
குகனே,

திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா ... விளங்கும் சோலை
மலையில் வீற்றீருக்கும் தெய்வமே,

தெய்வானை தோள் பூணி இச்சை ஆறு புயா புயா ஆறு உள
பெருமாளே.
... தேவயானையின் தோளை அணைந்து அன்பு கொண்ட
(6+6=12) பன்னிரண்டு புயங்களைக் கொண்ட பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1093  pg 1.1094  pg 1.1095  pg 1.1096 
 WIKI_urai Song number: 441 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1315 - seer siRakkum mEni (pazhamuthirchOlai)

seersiRakku mEni pasEl pasE lena
     nUpuraththi nOsai kaleer kalee rena
          sEravitta thALkaL sivEl sivE lena ...... varumAnAr

sEkaraththin vAlai silOr silOr kaLu
     nURulaksha kOdi mayAl mayAl kodu
          thEdiyokka vAdi yaiyO vaiyO vena ...... madamAthar

mArpadaiththa kOdu paLeer paLee rena
     Emaliththe nAvi pakeer pakee rena
          mAmasakki lAsai yuLO muLO mena ...... ninaivOdi

vAdaipatRu vELai yadA vadA vena
     neemayakka mEthu solAy solA yena
          vAramvaiththa pAtha mithO ithO ena ...... aruLvAyE

pArathaththai mEru veLee veLee thikazh
     kOdodiththa nALil varaii varaii pavar
          pAniRakka NEsar kuvA kuvA kanar ...... iLaiyOnE

pAdalmukya mAthu thameezh thamee zhiRai
     mAmunikku kAthi luNAr vuNAr vidu
          pAsamatRa vEtha kurU kurU para ...... kumarEsA

pOrmikuththa cUran vidOm vidO mena
     nErethirkka vElai padeer padee rena
          pOyaRuththa pOthu kupeer kupee rena ...... vekusOai

pUmiyukka veesu gukA gukA thikazh
     sOlaiveRpin mEvu theyvA theyvA naithoL
          pUNiyicchai yARu puyA puyA RuLa ...... perumALE.

......... Meaning .........

seer siRakkum mEni pasEl pasEl ena: Their beautiful bodies looked cool and fresh;

nUpuraththin Osai kaleer kaleer ena: their anklets made a ringing sound of "kaleer kaleer";

sEra vitta thALkaL sivEl sivEl ena varu mAnAr: the pairs of their feet, while walking together, looked very reddish; so passed by a few whores;

sEkaraththin vAlai silOr silOrkaLu(m): some young and robust-looking whores went along offering themselves to the mass;

nURu laksha kOdi mayAl mayAl kodu thEdi okka vAdi aiyO aiyO ena madamAthar: some young women made their suitors, consumed by extreme passion, fritter away things worth hundreds of millions on them, ending up saying desperately "alas, alas";

mArpu adaiththa kOdu paLeer paLeer ena: the chests of these whores are filled with mountain-like bosom which simply dazzle;

Emaliththu en Avi pakeer pakeer ena: looking at that, my mind is baffled and my life trembles in fear;

mA masakkil Asai uLOm uLOm ena ninaivu Odi: my thought runs amuck in a big delusory passion for those women;

vAdai patRu vELai adA adA ena: when that big, chill and lustrous wind catches hold of me, kindly pull me back calling in a loud voice "Hey you, hey you";

nee mayakkam Ethu solAy solAy ena: ask me firmly "Why are you in such a daze? Tell me. Tell me";

vAram vaiththa pAtham ithO ithO ena aruLvAyE: kindly grant me Your hallowed feet, saying "These feet that you love are yours; take them; take them!"

pArathaththai mEru veLee veLee thikazh kOdu odiththa nALil varai(i) varai(i)pavar: He wrote the MahAbhAratham on the outskirts of Mount MEru by breaking His own tusk for scribing; He is elephant-faced;

pA(nu) niRak kaNEsar ku Aku vAkanar iLaiyOnE: His complexion is that of the sun; He is GaNapathi, whose vehicle is the little mouse; You are the younger brother of that Lord VinAyagA!

pAdal mukya mAthu thameezh thameezh iRai mA munikku kAthil uNAr uNAr vidu: Appearing in the form of the Tamil Deity, You preached, after considerable research, the Tamil language, full of many rich and beautiful poems, into the ears of the great Sage AgasthyA;

pAsam atRa vEtha kurU gurupara kumarEsA: You are naturally detached from all bonds, Oh Supreme Master of the VEdAs!

pOr mikuththa cUran vidOm vidOm ena: When the mighty warrior SUran declared "I shall not give in; I shall not give in"

nEr ethirkka vElai padeer padeer ena pOy aRuththa pOthu: and confronted You head-on, You wielded the spear with a banging sound to sever all the demons;

kupeer kupeer ena veku sOri pUmi ukka veesu gukA gukA: at that time, blood gushed profusely on the earth as You threw Your weapon, Oh GuhA, Oh GuhA!

thikazh sOlai veRpin mEvu theyvA: You have Your abode in the elegant place, SOlai malai, Oh Lord!

theyvAnai thOL pUNi icchai ARu puyA puyA ARu uLa perumALE.: You lovingly embrace the shoulder of DEvayAnai with Your (6+6) twelve shoulders, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1315 seer siRakkum mEni - pazhamudhirchOlai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]