திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1307 அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை) Thiruppugazh 1307 agaramumAgi (pazhamudhirchOlai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான ......... பாடல் ......... அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி வருவோனே ... வருபவனே இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில் எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும் மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்) மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*) அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி) என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே. |
* முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.1071 pg 1.1073 pg 1.1074 pg 1.1075 pg 1.1076 WIKI_urai Song number: 433 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) பாடல் ரா - 1 song R1 பாடல் ரா - 2 song R2 | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு L. வசந்த குமார் Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'கொடுமுடி' திரு தியாகராஜ தேசிகர் Kodumudi S. Thiyagaraja DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'மயிலாடுதுறை' திரு சொ. சிவகுமார் Thiru S. Sivakumar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுகந்திஸ்ரீ Ms Sughandhisri K. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1307 - agaramumAgi (pazhamudhirchOlai) agaramum Agi adhipanum Agi adhikamum Agi ...... agamAgi ayanena vAgi ariyena vAgi aranena vAgi ...... avarmElAy igaramum Agi evaigaLum Agi inimaiyum Agi ...... varuvOnE irunila meedhil eLiyanum vAzha enathumun Odi ...... varavEnum magapathi Agi maruvum valAri magizh kaLi kUrum ...... vadivOnE vanamuRai vEdan aruLiya pUjai magizh kadhir kAmam ...... udaiyOnE jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi ena Adu ...... mayilOnE thirumali vAna pazhamuthir sOlai malai misai mEvu ...... perumALE. ......... Meaning ......... agaramum Agi: Being the foremost as "a" is the foremost letter in all languages adhipanum Agi: Being the Leader of all adhikamum Agi: Being the Greatest of all agamAgi: Being the Inner Self of all ayanena vAgi: Being BrahmA, the Creator, ariyena vAgi: Being Vishnu, the Protector, aranena vAgi: Being SivA, the Destroyer, avarmElAy: Being Someone transcending the above Trinity igaramum Agi: Being all the things in this World evaigaLum Agi: Being whatever things are in whichever world inimaiyum Agi: Being the embodiment of sweetness varuvOnE: The One who comes to me. irunila meedhil: In this vast world eLiyanum vAzha: In order that this humble self may also survive enathumun Odi varavENum: You must come running towards me. magapathi Agi: The Deity presiding over all sacrificial rites maruvum valAri: being IndrA alias ValAri (enemy of ValAsura) magizh kaLi kUrum: becomes immensely pleased vadivOnE: to look at Your lovely figure. vanamuRai vEdan: The hunter (AnthimAn*) who lived in the forest aruLiya pUjai magizh: offered worship which You gladly accepted at kadhir kAmam udaiyOnE: KadhirgAmam, Your favourite place. jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi: (very same sound) ena Adu mayilOnE: On these beats does Your Peacock dance! thirumali vAna pazhamuthir sOlai: Pazhamudhir chOlai, where wealth is plentiful, malai misai mEvu perumALE.: the mountain there is Your favourite, You Great One! |
* Once BrahmA claimed that for the valour of Muruga's Spear, credit should go entirely to BrahmA. MurugA could not stand BrahmA's egoism and cursed him to be born as a hunter in the jungles near KathirkAmam, now in Sri LankA. The hunter AndhimAn savagely pursues to kill a sage named PippalAtha Munivar who realises that the hunter is none other than BrahmA and advises him to do penance on Krithigai day offering his prayer to KathirkAman who is in the form of VEL (spear). The hunter's pUja is accepted by MurugA who makes him a King who ultimately obtains salvation. |
Paraphrase of this Poem: Being the foremost in the Universe as the letter "a" is in all languages, the Leader, the Greatest and Inner Self of all, the Creator-Protector-Destroyer and the one above the Trinity, being all things in this world and in any other world, an embodiment of sweetness, You are the one who comes to me. In this vast world You have to come running to me so that I too can survive. Your majestic figure immensely pleases IndrA, the Deity who presides over all offerings. The hunter (AnthimAn*) who lived in the forest made an offering which You gladly accepted at KathirkAmam, Your favourite place. You, the rider on the dancing peacock liltingly, reside on the mountain at Pazhamudhir chOlai, where wealth is plentiful. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |