(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 1308 இலவிதழ் கோதி  (பழமுதிர்ச்சோலை)
Thiruppugazh 1308 ilavidhazhkOdhi  (pazhamudhirchOlai)
Thiruppugazh - 1308 ilavidhazhkOdhi - pazhamudhirchOlaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தான தான தனதன தான தான
     தனதன தான தான ...... தனதான

......... பாடல் .........

இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார
     இளநகை யாட ஆடி ...... மிகவாதுற்

றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால
     இணைமுலை மார்பி லேற ...... மதராஜன்

கலவியி லோடி நீடு வெகுவித தாக போக
     கரணப்ர தாப லீலை ...... மடமாதர்

கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது
     கருதிய ஞான போத ...... மடைவேனோ

கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி
     குலிசகு டாரி யாயி ...... மகமாயி

குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி
     குணவதி யால வூணி ...... யபிராமி

பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக
     பதிவ்ரதை வேத ஞானி ...... புதல்வோனே

படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர
     பழமுதிர் சோலை மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவார(ம்) இள
நகையாட ஆடி மிக வாதுற்று
... இலவம் பூ போன்ற சிவந்த
வாயிதழ்களை வேண்டுமென்றே அசைத்து, முறையாக மன்மதக்
கலைகளை ஆரவாரமும் புன்சிரிப்பும் தோன்ற விளையாடி, அதிக
தர்க்கங்களைப் பேசி,

எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை
மார்பில் ஏற மத ராஜன் கலவியில் ஓடி நீடு வெகு வித தாக
போக(ம்)
... எதிரில் தாக்கும், அச்சத்தைத் தரும், கனத்த, கஸ்தூரி
முதலியவைகளை அணிந்த, ஆடம்பரமான இரு மார்பிலும் பொருந்தும்படி
மன்மத ராஜனுடைய காம லீலைச் சேர்க்கையில் வேகத்துடன் ஓடி,
பலவிதமான போக சுகத்தை உண்டுபண்ணும்

கரண ப்ரதாப லீலை மடமாதர் கலவியில் மூழ்கி ஆழும்
இழி தொழிலேனு(ம்) மீது கருதிய ஞான போதம்
அடைவேனோ
... காமபோக புணர்ச்சியில் பேர் பெற்ற லீலைகளுடன்
இளமை பொருந்திய விலைமாதர்களுடைய கலவியில் முழுகி
அழுந்தியிருக்கும் இழிந்த தொழிலை உடைய அடியேனும், மேலாகக்
கருதப்பட்ட ஞான அறிவை அடைவேனோ?

கொலை புரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி
ஆயி மகமாயி குமரி வராகி மோகி பகவதி ஆதி சோதி
...
கொலைத் தொழில் புரியும் காளி, சூலாயுதத்தை உடையவள், பைரவி, நீல
நிறத்தினள், வனத்தில் வாழும் துர்க்கை, குலிஜம், அங்குசம் இவற்றை
ஏந்திய தாய், மகமாயி, குமாரி, வராகி, மோகி, பகவதி, ஆதி ஜோதி,

குணவதி ஆல ஊணி அபிராமி பலிகொள் கபாலி யோகி
பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே
...
குணவதி, ஆலகால விஷத்தை உண்டவள், அழகி, பலி ஏற்கும் பிரம
கபாலத்தினள், யோகத்தினள், பரமரைத் திருமணம் புரிந்தவள், உலகில்
சிறந்த பத்தினி, வேத ஞானி (ஆகிய பார்வதியின்) மகனே,

படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர் சோலை
மேவு பெருமாளே.
... தனது சேனைகளுடன் சூரன் (போர்க்களத்தில்)
இறக்கும்படி துணிவுடன் எதிர்த்துச் சென்ற சூர தீரனே, பழமுதிர்
சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1075  pg 1.1076  pg 1.1077  pg 1.1078 
 WIKI_urai Song number: 434 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 1308 - ilavidhazh kOdhi (pazhamuthirchOlai)

ilavithazh kOthi nEthi mathakalai yAra vAra
     iLanakai yAda Adi ...... mikavAthut

Rethirporu kOra pAra mrukamatha kOla kAla
     iNaimulai mArpi lERa ...... matharAjan

kalaviyi lOdi needu vekuvitha thAka pOka
     karaNapra thApa leelai ...... madamAthar

kalaviyin mUzhki yAzhu mizhithozhi lEnu meethu
     karuthiya njAna pOtha ...... madaivEnO

kolaipuri kALi cUli vayiravi neeli mOdi
     kulisaku dAri yAyi ...... makamAyi

kumariva rAki mOki bagavathi yAthi sOthi
     guNavathi yAla vUNi ...... yabirAmi

palikoLka pAli yOki paramakal yANi lOka
     pathivrathai vEtha njAni ...... puthalvOnE

padaiyodu cUran mALa mudukiya cUra theera
     pazhamuthir sOlai mEvu ...... perumALE.

......... Meaning .........

ilava ithazh kOthi nEthi matha kalai AravAra(m) iLa nakaiyAda Adi mika vAthutRu: Deliberately moving their reddish lips that are like the ilavam (silk-cotton) flower, they methodically perform the erotic arts defined by Manmathan (God of Love) creating a bustle, displaying a smile and arguing excessively;

ethir poru kOra pAra mrukamatha kOlakAla iNai mulai mArpil ERa matha rAjan kalaviyil Odi needu veku vitha thAka pOka(m): their two heavy breasts are confrontational, awe-inspiring, smeared with a paste of musk and other aromatic substances, and pompous; pressing them tightly and running about swiftly playing the game of Manmathan, they offer a variety of erotic pleasure;

karaNa prathApa leelai madamAthar kalaviyil mUzhki Azhum izhi thozhilEnu(m) meethu karuthiya njAna pOtham adaivEnO: these young whores are famous for many passionate acts of love-making, and I am deeply drowned in the carnal pleasure offered by them; and I am engaged in such a debased activity that I wonder whether I will ever realise the true knowledge considered to be superior.

kolai puri kALi cUli vayiravi neeli mOdi kulisa kudAri Ayi makamAyi kumari varAki mOki bagavathi Athi sOthi: She is Goddess KALi engaged in the activity of slaying; She holds the trident in Her hand; She is Bhairavi; She is blue-complexioned, living as Durgai in the forest; She is the Mother, holding vajra (thunderbolt) and elephant-goad as weapons; She is the Supreme Mother known as KumAri, VAragi, Mohi, Bhagavathi and the Primeval Effulgence;

kuNavathi Ala UNi apirAmi palikoL kapAli yOki parama kalyANi lOka pathivrathai vEtha njAni puthalvOnE: She is full of virtues; She imbibed the evil AlakAla poison; She is the most beautiful; She holds in Her hand the skull of Brahma for seeking offerings; She is the ultimate Yogini; She is the Consort of the Supreme Lord SivA; She is the most devout and chaste woman of this world; She has supreme knowledge of the VEdAs; and You are the son of that PArvathi, Oh Lord!

padaiyodu cUran mALa mudukiya cUra theera pazhamuthir sOlai mEvu perumALE.: The demon SUran and his armies died (in the battlefield) as You confronted him courageously, Oh valorous Warrior! You are seated in Pazhamuthir cOlai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1308 ilavidhazh kOdhi - pazhamudhirchOlai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top