திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1306 கும்பகோணம் (க்ஷேத்திரக் கோவை) Thiruppugazh 1306 kumbagONam (kshEththirak kOvai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன ...... தனதான ......... பாடல் ......... கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே செம்பு கேசுர மாடானை யின்புறு செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ் செஞ்சொ லேரக மாவா வினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு லாவிய காவேரி சங்கமு கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சி வாயமு மேயா யகம்படு கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா எம்பி ரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்ம ணந்துல கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் ... (1) கும்பகோணம், அதனுடன் (2) திருவாரூர், (3) சிதம்பரம், உம்பர் வாழ்வுறு சீகாழி ... தேவர்கள் விரும்பி வாழ்க்கை கொள்ளும் (4) சீகாழி, நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் ... நிலையான கொன்றை மலர்ச்சடையர் சிவனுடைய (5) மாயூரம், அம்பெறு சிவகாசி ... அழகு வாய்ந்த (6) சிவகாசி, கொந்து உலாவிய ராமேசுரம் ... திரளான பக்த ஜனங்கள் கூட்டமாக உலாவும் (7) ராமேஸ்வரம், தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் ... ஒப்பற்ற நிலையில் வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள் கும்பு கூடிய வேளூர் ... கூட்டமாகக் கூடும் (8) புள்ளிருக்கும் வேளூர் - வைத்தீஸ்வரன் கோயில், பரங்கிரி தனில்வாழ்வே ... (9) திருப்பரங்குன்றம் எனப்படும் தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே, செம்பு கேசுரம் ஆடானை ... (10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா, (11) திருவாடானை, இன்புறு செந்தில் ஏடகம் ... நீ மகிழ்ந்து வாழும் (12) திருச்செந்தூர், (13) திருவேடகம், வாழ்சோலை யங்கிரி ... நீ வாழ்கின்ற சோலைமலையாம் (14) பழமுதிர்ச்சோலை, தென்றன் மாகிரி ... தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான பெருமலை (15) பொதியமலை, நாடாள வந்தவ ... என்னும் தலங்களில் எல்லாம் வீற்றிருக்க வந்தவனே, செகநாதம் ... (வடக்கே) பூரித்தலத்தில் (16) ஜெகந்நாதன் உருவில் காட்சி தந்தவனே, செஞ்சொல் ஏரக ... செம்மையான உபதேசச் சொல்லை நீ உன் தந்தைக்குச் சொன்ன (17) திருவேரகம், மாவாவினன்குடி ... சிறந்த (18) திருவாவினன்குடி - பழநி, குன்று தோறுடன் ... (19) குன்று தோறாடல், இவையுடன் மூதூர் விரிஞ்சை ... பழம்பதி எனப்படும் (20) திருப்புனவாயில், விரிஞ்சிபுரம் எனப்படும் (21) திருவிரிஞ்சை, நல் செம்பொன் மேனிய ... ஆகிய தலங்களில் அமரும் சிறந்த செம்பொன் நிறம் கொண்ட திருமேனியனே, சோணாடு வஞ்சியில் வருதேவே ... சோழநாட்டின் தலைநகராகிய வஞ்சி என்னும் (22) கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே, கம்பை மாவடி மீதேய சுந்தர ... கம்பாநதி தீரத்தில் உள்ள (23) காஞ்சியில் மாமரத்தின் அடியில், மேலே லிங்க ரூபத்தில் பொருந்தி விளங்கும் அழகனே, கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் ... சங்குகள் உலவும் காவேரி ஆறு கடலில் சங்கமம் ஆகும் (24) காவிரிப் பூம்பட்டினத்திலும், சிராமலை வாழ்தேவ தந்திர ... (25) திருச்சிராப்பள்ளி மலையில் வாழ்கின்ற தேவ சேனாபதியே, வயலூரா ... (26) வயலூர்ப் பெருமானே, கந்த மேவிய போரூர் ... நறுமணங்கள் நிரம்பிய (27) திருப்போரூர், நடம்புரி தென்சிவாயமு மேயாய் ... நீ நடனம் புரிந்த தலமாம் அழகிய சிவாயம் என்ற (28) திருவாட்போக்கி எனப்படும் தலங்களில் விளங்குபவனே, அகம்படு கண்டி யூர்வரு சாமீ ... பாவத்தைத் தொலைக்கும் (29) திருக்கண்டியூரில் எழுந்தருளும் ஸ்வாமியே, க டம்பணி மணிமார்பா ... கடப்ப மாலையை அணிந்துள்ள அழகிய மார்பனே, எம்பிரானொடு வாதாடு மங்கையர் ... எங்கள் சிவபிரானுடன் நடனப் போட்டி செய்த காளியும், அவளைச் சேர்ந்த தோழியரும், உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி ... தேவலோகத்து சரஸ்வதியும், லக்ஷ்மி எனப்படும் நெடுமாலுக்கு உரிய அழகியும், ஆகிய இவர்கள் யாவரும் எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று ... தினந்தோறும் உள்ளத்தில் எழுச்சியுடன் நின்று, உறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு ... பொருந்திய துதியுடன் போற்றுகின்ற தேவயானையாம், இந்திரன் மனைவி சசியின் மகளோடு, நன்குற மங்கை மானையு ... குறக்குலத்தில் தோன்றிய பெண் மான் வள்ளியையும் மாலாய்மணந்து ... ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே. ... உலகத்தில் எங்குமுள்ள தேவாலயங்கள்* தோறும் வீற்றிருக்கும் பெருமாளே. |
* குறிப்பு: முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்களைத் தொகுத்தளிக்கும் சிறப்பான பாடல் இது. (1) கும்பகோணம் - காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம், (2) திருவாரூர் - சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான தலம், (3) சிதம்பரம் - பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம் - நடராஜப் பெருமான் நடனமாடிய கனகசபை, (4) சீகாழி - சம்பந்தர் அவதரித்த தலம், சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கிலாக மாறி ஒளிந்த இடம், (5) மாயூரம் - பார்வதி மயிலாக மாறி சிவனை வழிபட்ட தலம், (6) சிவகாசி - பாண்டிய நாட்டில் வட நாட்டுக் காசிக்கு சமமான புண்ணியத் தலம், (7) ராமேஸ்வரம் - சிவனை ஸ்ரீராமன் பூஜை செய்து வழிபட்ட க்ஷேத்திரம், (8) வைத்தீஸ்வரன்கோயில் - முருகன் முத்துக்குமரனாகக் காட்சி தரும் தலம், செவ்வாய்த் தலம், (9) திருப்பரங்குன்றம் - ஆறு படைவீடுகளில் முதலாவது, மதுரைக்கு அருகில் உள்ளது, (10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா - பஞ்ச பூதத் தலங்களில் அப்புத்தலம், திருச்சிக்கு வடக்கே 2 மைல், (11) திருவாடானை - மானாமதுரைக்கு 40 மைலில் சிவகங்கைக்கு அருகே உள்ள தலம், (12) திருச்செந்தூர் - ஆறுபடைவீட்டில் இரண்டாம் படைவீடு, திருநெல்வேலியிலிருந்து 35 மைல், (13) திருவேடகம் - சம்பந்தர் மதுரையில் இட்ட ஏடு வைகையில் மேற்கே எதிர்த்துச் சென்று தங்கிய தலம், (14) பழமுதிர்ச்சோலை - மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள ஆறாவது படைவீடு, (15) பொதியமலை - பாபநாசம், அம்பாசமுத்திரத்திலிருந்து 7 மைலில் உள்ளது, அகத்தியர் க்ஷேத்திரம், (16) பூரி ஜெகந்நாதம் - ஒரிஸ்ஸா கடற்கரையிலுள்ள விஷ்ணு, ஸ்வாமிகளுக்கு முருகனாகத் தெரிகிறார், (17) திருவேரகம் - சுவாமிமலை - தந்தை சிவனுக்கு முருகன் உபதேசித்த நான்காம் படைவீடு, (18) திருஆவினன்குடி - பழநி மலையிலும் ஆவினன்குடி அடிவாரத்திலும் உள்ள மூன்றாம் படைவீடு, (19) குன்றுதோறாடல் - பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் ஐந்தாவது படைவீடு, (20) மூதூர் - திருப்புனவாயில் - வேதங்கள் பூஜித்த தலம், திருவாடானைக்கு 12 மைலில் உள்ளது, (21) விரிஞ்சை - விரிஞ்சிபுரம், வேலூருக்கு மேற்கே 8 மைலில் உள்ளது, (22) வஞ்சி - சோணாட்டுவஞ்சி கருவூர், திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ளது, (23) கம்பை மாவடி - காஞ்சீபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் மாமரத்தின் கீழ் இருக்கும் முருகன், (24) காவேரி சங்கமுகம் - காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) - சீகாழிக்குத் தென்கிழக்கில் 10 மைல், பட்டினத்தார் ஊர், (2 கோயில்கள் - பல்லவனீச்சரம், சாயாவனம் - இவை வைப்புத்தலங்கள்). (25) சிராமலை - திருச்சிராப்பள்ளி, திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த திருப்பதி, தாயுமானவர் தலம், (26) வயலூர் - திருச்சிக்கு 6 மைல், ஸ்வாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரம் கிடைத்த தலம், (27) திருப்போரூர் - செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைல், சமரமராபுரி, என்று வழங்கும் தலம், (28) சிவாயம் - வாட்போக்கி - குழித்தலைக்கு தெற்கே 5 மைலில் உள்ள ரத்னகிரி, என்ற தலம், (29) திருக்கண்டியூர் - தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் உள்ள சப்தஸ்தான க்ஷேத்திரம். |
* உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் உள்ள கடவுள் முருகனே என ஸ்வாமிகள் சொல்வதன் மூலம் உலகில் எல்லா மதத்துக் கடவுளும் ஒருவனே என்ற அவரது பரந்த கொள்கை தெரிகிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.684 pg 3.685 pg 3.686 pg 3.687 pg 3.688 pg 3.689 pg 3.690 pg 3.691 WIKI_urai Song number: 1304 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு L. வசந்த குமார் Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1306 - kumbakona (ksheththirakkovai) kumba kONamod ArUr chidhambaram umbar vAzhvuRu seegAzhi nindridu kondRai vENiyar mAyUra mampeRu ...... sivakAsi kondhu lAviya rAmE suram thani vandhu pUjai sey nAl vEdha thandhirar kumbu kUdiya vELUr parangiri ...... thanilvAzhvE jembu kEsuram AdAnai inbuRu sendhil Edagam vAzhsOlai yangiri thendran mAgiri nAdALa vandhava ...... jeganAtham senchol Eragam AvAvinan kudi kundru thOrudan mUdhUr virinjai nal sempon mEniya sONAdu vanjiyil ...... varudhEvE kambai mA adi meedhEya sundhara kambu lAviya kAvEri sangamu kanchirA malai vAzhdhEva thandhira ...... vayalUrA gandha mEviya pOrUr natampuri thensi vAyamu mEyA agampadu kaNdi yUrvaru sAmi kadambaNi ...... maNimArbA empirAnodu vAdhAdu mangaiyar umbar vANi poneeLmAl savundhari endha nALthoru mErbAga nindruRu ...... thudhiyOdhum indhirANi than mAdhOdu nan kuRa mangai mAnaiyu mAlAy maNandh ula gengu mEviya dhEvAlayam thoRu ...... perumALE. ......... Meaning ......... kumba kONamod ArUr chidhambaram: (1) KumbakONam, along with (2) ThiruvArUr, (3) Chidhambaram, umbar vAzhvuRu seegAzhi: (4) SeekAzki, preferred as a domicile by DEvAS, nindridu kondRai vENiyar mAyUram: (5) MAyUram, belonging to SivA with everlasting kondRai (Indian laburnum) flower on His tresses, ampeRu sivakAsi: beautiful (6) SivakAsi, kondhu lAviya rAmEsuram: (7) RamEswaram, where pilgrims throng, thani vandhu pUjai sey nAl vEdha thandhirar kumbu kUdiya vELUr: (8) PuLLirukkum vELUr (Vaitheeswaran KOyil) where experts in the four VEdAs gather in strength to perform special worship, and parangiri thanilvAzhvE: (9) ThirupparankundRam - these are the few places You choose for Your abode! jembu kEsuram AdAnai: (10) JembukEswaram (ThiruvAnaikkA), (11) ThiruvAdAnai, inbuRu sendhil Edagam: (12) ThiruchchendhUr, Your favourite place, (13) ThiruvEdagam, vAzhsOlai yangiri: (14) PazhamuthirsOlai, Your dwelling place in SOlaimalai, thendran mAgiri: and the great mount famous for southerly breeze, namely, (15) Pothiyamalai - nAdALa vandhava: these are also a few places ruled by You! jeganAtham: (16) Puri, where You manifested as JagannAthan, senchol Eragam: (17) ThiruvEragam (SwAmimalai) where You preached the greatest message to Your Father, AvAvinan kudi: (18) ThiruvAvinankudi - Pazhani kundru thOrudan: (19) KunRuthOrAdal, as well as, mUdhUr virinjai: (20)ThiruppunavAyil, the ancient town, and (21) Thiruvirinjai known asVrinjipuram - nal sempon mEniya: these are the places where You are seated with Your reddish gold complexion! sONAdu vanjiyil varudhEvE: You are the Lord at (22) Vanji (alias KaruvUr), the capital of ChozhA Kingdom. kambai mA adi meedhEya sundhara: You are the beautiful Lord prevailing at the foot of the mango tree in (23) KAnchipuram, on the banks of River KampA. kambu lAviya kAvEri sangamukan: You are at (24) KAvErippUmpattinam where KAvEri with conch shells merges with the sea. chirA malai vAzhdhEva thandhira: You are at (25) ThiruchirA malai as the Commander-in-Chief of all DEvAs; vayalUrA: and You also belong to (26) VayalUr. gandha mEviya pOrUr: You are at (27) ThiruppOrUr, famous for its fragrance. natampuri then sivAyamu mEyA: You are in a dancing pose at (28) the beautiful SivAyam (ThiruvAtpOkki). agampadu kaNdi yUrvaru sAmi: You are the Lord at (29) ThirukkaNdiyUr where all sins are washed away. kadambaNi maNimArbA: Your lovely chest displays the beautiful garlands of kadappa flowers! empirAnodu vAdhAdu mangaiyar: KALi and her dancing maids, who compete with our Lord SivA in dancing, umbar vANi poneeLmAl savundhari: Saraswathi of DEvAs, and Lakshmi, the beautiful consort of Vishnu, endha nALthoru mErbAga nindruRu thudhiyOdhum: assemble everyday with utmost devotion to sing the glory of indhirANi than mAdhOdu: DEvayAnai, Daughter of IndrANi; along with her, is VaLLi, nan kuRamangai mAnaiyu mAlAy maNandhu: the deer-like damsel of KuRavAs; and You married them both with love. ulagengu mEviya dhEvAlayam thoRu perumALE.: You have Your abode at every place of worship* in this world, Oh Great One! |
Note: This is a special song called KshEththirakkOvai meaning the compilation of favourite places of Murugan: (1) KumbakONam: It is the most sacred place in South India where MahA Makam is celebrated once in 12 years. (2) ThiruvArUr: This is the foremost place among Saptha Vidanga SthalAs; it is near NAgappattinam. (3) Chidhambaram: This is AakAya (Sky) sthala of Panch PUtha Sthalas; famous for Cosmic Dance by NadarAja. (4) SeegAzhi: Birthplace of the foremost Saivaite ThirugnAna Sambandhar; IndrA hid himself as a bamboo tree to escape SUran. (5) MAyUram: This is where PArvathi worshipped SivA taking the form of a Peahen. (6) SivakAsi: This place is in PANdiya Kingdom in the South, famous as KAsi, on the banks of the Ganges. (7) RAmEswaram: It is the sacred pilgrim centre in Southeastern Shore where RAmA worshipped SivA. (8) Vaitheeswaran KOyil: The place where Mars is worshipped. Murugan is known here as Muthu KumAraswamy. (9) ThirupparankundRam: Near Madhurai, this is the first of the six Padaiveedus (fortresses) of Murugan. (10) ThiruvAnaikA: Appusthalam (Water) of the Pancha PUtha sthalAs; and situated 2 miles north of Thiruchchi. (11) ThiruvAdAnai: It is near Sivagangai, 40 miles away from Manamadurai in Ramanathapuram District. (12) ThiruchchendhUr: Second Padaiveedu on the sea shore, 35 miles east of ThirunelvEli. (13) ThiruvEdagam: When Sambandhar placed a palm leaf against the current in River Vaigai, the leaf settled here. (14) PazhamuthirsOlai: Located 12 miles north of Madhurai, this is the sixth Padaiveedu of Murugan. (15) Pothiyamalai: This is at PApanAsam, 7 miles north of AmbAsamuththiram, famous for Agasthiyar Temple. (16) PUri Jagannatham: On this shore town of Orissa State, Vishnu is seen as Murugan by Arunagiri SwAmigaL. (17) ThiruvEragam: This is SwAmimalai, Fourth Padaiveedu, where Murugan preached the Vedic principle to SivA. (18) ThiruvAvinankudi: This is the third Padaiveedu, under Mount Pazhani, 35 miles west of Dindigul. (19) KunRuthOrAdal: This is the common name of several mountains, collectively known as the fifth Padaiveedu. (20) ThiruppunavAyil: This place (the oldest town) was worshipped by VEdAs. It is 12 miles from ThiruvAdAnai. (21) Virinjipuram: It is situated near KAtpAdi, 8 miles west of Vellore. (22) Vanji: This is now known as KaruvUr (Karur) 45 miles west of Thiruchchi. Once, it was the capital of ChOzhAs. (23) KAnchipuram: In the EkAmbarEswarar Temple, there is a mango tree at whose feet is Lord Murugan. (24) KAvErippUmpattinam: (it is the shoretown where River KAvEri merges with the sea) now known as PUmbuhAr (includes 2 temples - Pallavaneechcharam and SAyAvanam - these are referenced in song as 'kavEri sangkamugam' (25) ThiruchirAppaLLi: A city in the South. Ruled by Thirisiran, a Demon destroyed by SivA (ThAyumAnavar). (26) VayalUr: At 6 miles from Thiruchchi, here is where SwAmigaL was granted the boon to sing one Thiruppugazh daily. (27) ThiruppOrUr: At 16 miles northeast of Chingalpet, this town is known as SamaramarApuri. (28) SivAyam - ThiruvAtpOkki: This is 5 miles to the south of Kuzhiththalai. Also known as Rathnagiri. (29) ThirukkaNdiyUr: This is 6 miles north of ThanjAvUr known as a Saptha SthAna KshEththiram. |
* As all Gods in every place of worship in this world is seen as Murugan, SwAmigaL's secular outlook and broadened acceptance of all religions are evident. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |