பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 7.கொந்து லாவிய ராமே சுரந்தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய 8வேளுர் 9பரங்கிரி தனில்வாழ்வே (677ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆரூர் மூலட்டானம்' என இரண்டாம் பாட்டையும் தொடங்கியுள்ளார். 6.70. திருவாரூர் - பஞ்சபூதஸ்தலங்களில் பிருதிவித்தலம்: பிறக்க முத்தியளிக்கும் பெரும்பதி, பிறந்தவர் பிறவாப் பெரும் பதி' - கல்லாடம் 52, லக்ஷ்மி பூசித்த தலம். மலர் மென்பாவை முழுதுள திருவும் என்றும் முடிவில் மங்கலமும் எய்த விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன் திருவாரூர். கந்தபுரா - குமாரபுரி 81 சப்தவிடங்கத் தலங்களுள் முதன்மையானது. (விதிவிடங்கத் தியாகர்). திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர்ப் பணிவன் என்னா, ஒருவன் ஏழடி நடந்து மீண்டிடின் ஒப்பில் காசி, விரிபுனற் கங்கை யாடி மீண்டவன் ஆவன் என்றால், இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கும் இயம்ப வற்றோ - திருவாரூர்ப்புரா - தலமகிமை 71; திருப்புகழ் 820-க்கு முன்னுள்ள தலக்குறிப்பு - (பக்கம் 116) (தந்திரர் - மறையவர்) 3. சிதம்பரம்: . பஞ்சபூதஸ்தலங்களில் ஆகாசத்தலம், பஞ்ச சபைகளில் நடராஜப் பெருமானது ஆனந்தத் தாண்டவம் நடைபெறும் கனகசபை' யைக் கொண்டது. தரிசித்தால் முத்தியளிக்கும் தலம். திருப்புகழ் 590-க்கு முன்னுள தலக் குறிப்பைப் பார்க்க (பக்கம் 352) 4. சீகாழி:- திருஞானசம்பந்தப் பெருமான் திரு அவதாரம் செய்த திருப்பதி. இந்திரன் சூரனுக்கு அஞ்சி, மூங்கில் உருவாய் நின்று சிவனைப் பூசித்த திருப்பதி 'அமரர்கோன் துணைவியோடு ... வேணுவாகி மறைந்து நோற்றிருந்தான் மாதோ' - கந்தபுரா - 2-21-44 பிரமன் பூசித்ததால் பிரமபுரம் எனப்படும். தேவர்கள் புகலிடமாகப் புகுதலால் திருப்புகலி என்பது ஒரு திருப் பெயர்: அதுபற்றியே உம்பர் வாழ்வுறு சீகாழி என்றார். இமையோர் புகவுலகு புகழ. பெருகு புகலி நகரே சம், 3-67.3 (திருப்புகழ் 768 - தலக்குறிப்பு - பக்கம் 286 பார்க்க) (தொ. டாக் 679)