திருப்புகழ் 1304 வான் அப்பு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1304 vAnappu  (common)
Thiruppugazh - 1304 vAnappu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான

......... பாடல் .........

வானப் புக்குப் பற்றும ருத்துக் ...... கனல்மேவு
   மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் ...... பிறவாதே

ஞானச் சித்திச் சித்திர நித்தத் ...... தமிழாலுன்
   நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் ...... புரிவாயே

கானக் கொச்சைச் சொற்குற விக்குக் ...... கடவோனே
   காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் ...... பொரும்வேலா

தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் ...... தொடையோனே
   தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வான் அப்புக் குப் பற்று மருத்துக் கனல் மேவு ... ஆகாயம், நீர்,
பூமி, ஆசை, காற்று, தீ ஆகியவை கலந்த

மாயத் தெற்றிப் பொய்க்குடில் ஒக்கப் பிறவாதே ... மாயக்
கட்டடமான இந்தப் பொய்க் குடிசையாம் உடலோடு பிறக்காமல்,

ஞானச் சித்திச் சித்திர நித்தத் தமிழால் ... ஞானம் கைகூட,
அழகியதும் அழியாததுமான தமிழ்ச் சொற்களால்

உன் நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் புரிவாயே ... உன் திரு
நாமத்தை நன்கு கற்றறிந்து (கந்தா, முருகா, குகா என்றெல்லாம் கூறி)
புகழ்வதற்கு நீ அருள் புரிய வேண்டும்.

கானக் கொச்சைச் சொற்குற விக்குக் கடவோனே ... காட்டில்
வாழ்ந்தவளும், திருந்தாத குதலைப் பேச்சைக் கொஞ்சிப் பேசுபவளும்
ஆன குறப்பெண் வள்ளியை ஆட்கொள்ளக் கடமைப்பட்டவனே,

கொற்றப் பொற்குல வெற்பை காதிப் பொரும்வேலா ... வெற்றிச்
சிறப்புடன் இருந்த தங்கமயமான குலகிரி கிரெளஞ்சமலையைக் கூறு
செய்து அதனுடன் போரிட்ட வேலவனே,

தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் தொடையோனே ...
வண்டுகளைத் தாவித் தாவிச் சுற்றச்செய்யும்படியான வெட்சி மலர்
மாலையை அணிந்தவனே,

தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே. ... தேவர்கள்
வாழும் சொர்க்கத்தில் விளங்கும் சக்ரவர்த்திப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.680  pg 3.681  pg 3.682  pg 3.683 
 WIKI_urai Song number: 1303 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 1304 - vAn appu (common)

vAn appuk kuppatru maruththuk kanal mEvu
   mAyath thetrip poykkudil okkap ...... piRavAdhE

gnAna sidhdhi chiththira niththath thamizhAlun
   nAmaththaik katrup pugazh gaikkup ...... purivAyE

kAnak kochchai soR kuRavikkuk kadavOnE
   kAdhik kotrap poRkula veRpaip ...... porumvElA

thEnaith thaththach chutriya chechchaith thodaiyOnE
   dhEva sorgach chakkira varthip ...... perumALE.

......... Meaning .........

vAn appuk kup patru maruththuk kanal mEvu: A combination of cosmos, water, earth, desire, air and fire

mAyath thetrip poykkudil okkap piRavAdhE: has built this mystic edifice called my body. I do not want to be born in this illusory dwelling.

gnAna sidhdhi chiththira niththath thamizhAlun: To enable me to reach the pinnacle of Knowledge by praising You in beautiful and immortal Tamil language

nAmaththaik katrup pugazh gaikkup purivAyE: after learning the significance of Your great names (like Murugan, Guhan and Kandhan), You should kindly grant me the wisdom!

kAnak kochchai soR kuRavikkuk kadavOnE: You are indebted to protect the damsel of the KuRavAs, VaLLi roaming in the forest, whose speech is sweet like a child's lisping!

kAdhik kotrap poRkula veRpaip porumvElA: You hold the Spear which shattered the golden and majestic hill Mount Krouncha into pieces!

thEnaith thaththach chutriya chechchaith thodaiyOnE: You wear the garland of chechchai flowers around which beetles roam seeking honey!

dhEva sorgach chakkira varthip perumALE.: You are the Emperor of the Heaven belonging to the DEvAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1304 vAn appu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]