பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 673 1301. மனைவி, மக்கள், சுற்றத்தார் என்கின்ற மாய வலையை விட்டு விலக (தாண்டத் தெரியாமல் வினையிலேயே (செருக்கி) களித்து மயங்கி அடிமை நாயேனாகிய நான் வீனுக்குப் (பயனின்றி) என் ஆயுள் நாளைக் கழித்து விடல் நன்றா? (நன்றன்று என்றபடி) சுனையைக் கலக்கி விளையாடின உருவழகியாம் குறத்தி - வள்ளியின் மணவாளனே! நாளும் நல்ல ஒழுக்கங்களை மேற்கொண்டிருந்த தேவர்களின் சிறையை (வெட்டிவிட்ட) நீக்கி ஒழித்த பெருமாளே! (விழலுக்கு இறைத்து விடலாமோ) 1302. கடல் மீது எழுகின்ற நிலவாலும் மன்மதன் செலுத்தின அம்பினாலும் உலகிலுள்ளோர் யாவரும் இகழ்ந்து பேசும் செய்கையாலும் பாவியாகிய எனது உயிர் நிலையழியலாமா! சூரனுடைய பெரிய மார்பைத் தொளை செய்த வேலனே! ஜோதியே! மயில்மீது வீற்றிருக்கும் அரசே! (மூரி) பெருமையும் (மால்) உன் மீ து ஆசையும் கொண்டிருந்த (யானை) தேவசேனையை மணந்த திருமார்பா! (அல்லது தேவசேனை மணந்த திருமார் பாl) பிரமா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவர்க்கும் (திரிமூர்த்திகளுக்கும்) பெருமானே தேவாதிகளின் தலைவனே! (அல்லது தேவாதிகளாம் மூவர்க்கும் தலைவன்ே) (பாவியேன் ஆவி மயங்கலாமோ) 1303. (வான்) ஆகாயம், (அப்பு) நீர், (கு) மண், (பற்று) இவையுடன் கூடின (மருத்து) காற்று (கனல்) நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள் சேர்ந்துள்ள மாய - மாயம் - நிலையிலாத (தெற்றி) ஒரு கட்டடமாம், (பொய்க்குடில்) பொய்த் தோற்றமான இந்தக் குடில் ஒக்க குடிசை . வீடாகிய உடலுடனே பிறவாமல்