திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1301 பொன்னை விரும்பிய (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1301 ponnaivirumbiya (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தன்ன தனந்தன ...... தனதான ......... பாடல் ......... பொன்னை விரும்பிய ......பொதுமாதர் புன்மை விரும்பியெ ...... தடுமாறும் என்னை விரும்பிநி ...... யொருகால்நின் எண்ணி விரும்பவு ...... மருள்வாயே மின்னை விரும்பிய ...... சடையாளர் மெய்யின் விரும்பிய ...... குருநாதா அன்னை விரும்பிய ...... குறமானை அண்மி விரும்பிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பொன்னை விரும்பிய பொதுமாதர் ... தங்கத்தை நாடி விரும்புகின்ற விலைமாதர்களின் புன்மை விரும்பியெ தடுமாறும் ... இழிவான குணத்தையே விரும்பித் தடுமாறுகின்ற (போதிலும்) என்னை விரும்பி நி யொருகால் ... என்னை விரும்பி நீ ஒரு முறையேனும் நின்(னை) எண்ணி விரும்பவும் அருள்வாயே ... உன்னை தியானித்து நான் விரும்புமாறு அருள் புரிவாயாக. மின்னை விரும்பிய சடையாளர் ... மின்னலைப்போல் ஒளி வீசும் செஞ்சடைப் பெருமானாகிய சிவபிரான் மெய்யின் விரும்பிய குருநாதா ... உண்மைப் பொருளை விரும்பி நிற்க, அவருக்கு உபதேசம் செய்த குருநாதனே, அன்னை விரும்பிய குறமானை ... உமையன்னை விரும்பிய குறமான் வள்ளியை அண்மி விரும்பிய பெருமாளே. ... நெருங்கி விருப்பம் கொண்ட பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.678 pg 3.679 WIKI_urai Song number: 1300 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1301 - ponnai virumbiya (common) ponnai virumbiya ...... pothumAthar punmai virumbiye ...... thadumARum ennai virumbini ...... yorukAlnin eNNi virumbavu ...... maruLvAyE minnai virumpiya ...... sadaiyALar meyyin virumbiya ...... gurunAthA annai virumbiya ...... kuRamAnai aNmi virumbiya ...... perumALE. ......... Meaning ......... ponnai virumbiya pothumAthar punmai virumbiye thadumARum: I suffer by going after the despicable aspects of these whores whose desire is only gold; ennai virumbi ni yorukAl nin(nai) eNNi virumbavum aruLvAyE: (nonetheless), kindly take pity on me at least once and bless me to willingly meditate upon You, Oh Lord! minnai virumpiya sadaiyALar: He has reddish matted hair that glows like lightning; meyyin virumbiya gurunAthA: when that Lord SivA sought the truth, You preached it to Him, Oh Master! annai virumbiya kuRamAnai: She was the favourite of Mother PArvathi; she was the deer-like damsel, VaLLi; aNmi virumbiya perumALE.: You went very close to her and fell in love, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |