![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி). (Please read my important note before using this website - Thank You). |
திருப்புகழ் 1300 புத்தகத்து ஏட்டில் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1300 puththagaththuEttil (common) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு mp3 | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தனத் தாத்தத் தாத்த ...... தனதான ......... பாடல் ......... புத்தகத் தேட்டிற் றீட்டி ...... முடியாது பொற்புறக் கூட்டிக் காட்டி ...... யருள்ஞான வித்தகப் பேற்றைத் தேற்றி ...... யருளாலே மெத்தெனக் கூட்டிக் காக்க ...... நினைவாயே தத்தைபுக் கோட்டிக் காட்டி ...... லுறைவாளைச் சற்கரித் தேத்திக் கீர்த்தி ...... பெறுவோனே கைத்தலத் தீக்குப் பார்த்து ...... நுழையாத கற்பகத் தோப்புக் காத்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது ... புத்தகங்களிலும் ஏட்டிலும் எழுத முடியாத பொருளை, பொற்புறக் கூட்டிக் காட்டி ... அழகு பொருந்தக் கூட்டுவித்துக் காட்டியும், அருள்ஞான வித்தகப் பேற்றைத் தேற்றி ... அருள்மயமான ஞான நன்மைப் பாக்கியத்தை எனக்குத் தெளிய வைத்தும், அருளாலே மெத்தெனக் கூட்டிக் காக்க நினைவாயே ... உன் திருவருளால் பக்குவமாக எனக்கு அதைக் கூட்டிவைத்தும் என்னைப் பாதுகாக்க நீ நினைத்தருள வேண்டுகிறேன். தத்தை புக்கு ஓட்டிக் காட்டில் உறைவாளை ... கிளிகளை அவை தினைப்புனத்தில் இருக்கும் இடம் தேடிச் சென்று விரட்டி அந்தக் காட்டில் வசித்தவளாம் வள்ளியை சற்கரித்து ஏத்திக் கீர்த்தி பெறுவோனே ... உபசரித்து, பாராட்டி, பேரும் புகழும் பெற்றவனே, கைத்தலத்து ஈக் குப்பு ஆர்த்து நுழையாத ... ஈக்கள், வண்டுகளின் கும்பல் ஆரவாரத்துடன் ஒலி செய்து உள்ளே புகமுடியாதபடி நெருக்கமான கற்பகத் தோப்புக் காத்த பெருமாளே. ... கற்பகத் தோட்டங்கள் நிறைந்த தேவலோகத்தைக் காத்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.676 pg 3.677 pg 3.678 pg 3.679 WIKI_urai Song number: 1299 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | 'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | ![]() to singer's page |
![]() | சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil | ![]() |
![]() | திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
(Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
Song 1300 - puththagaththu Ettil (common) puththakath thEttiR Reetti ...... mudiyAthu poRpuRak kUttik kAtti ...... yaruLnjAna viththakap pEtRaith thEtRi ...... yaruLAlE meththenak kUttik kAkka ...... ninaivAyE thaththaipuk kOttik kAtti ...... luRaivALai saRkarith thEththik keerththi ...... peRuvOnE kaiththalath theekkup pArththu ...... nuzhaiyAtha kaRpakath thOppuk kAththa ...... perumALE. ......... Meaning ......... puththakaththu Ettil theetti mudiyAthu: It is something that cannot be written down in books or palm leaves; poRpuRak kUttik kAtti: I want You to show Its beauty elegantly to me; aruLnjAna viththakap pEtRaith thEtRi: please make me realise the fortune of gracious Knowledge; aruLAlE meththenak kUttik kAkka ninaivAyE: and kindly think in terms of protecting me daintily by bestowing Your grace on me! thaththai pukku Ottik kAttil uRaivALai: She chased away the parrots from the millet-field by seeking them out; she lived in the forest; saRkariththu Eththik keerththi peRuvOnE: You wooed that VaLLi, praised her and attained great fame! kaiththalaththu eek kuppu Arththu nuzhaiyAtha: Herds of humming flies and beetles can never penetrate the thick groves of kaRpakath thOppuk kAththa perumALE.: KaRpaga trees in the celestial land which was rescued by You, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | mp3 |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |