திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1297 பட்டுப் படாத (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1297 pattuppadAdha (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தத் தனான ...... தனதான ......... பாடல் ......... பட்டுப் படாத ...... மதனாலும் பக்கத்து மாதர் ...... வசையாலும் சுட்டுச் சுடாத ...... நிலவாலும் துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான் தட்டுப் படாத ...... திறல்வீரா தர்க்கித்த சூரர் ...... குலகாலா மட்டுப் படாத ...... மயிலோனே மற்றொப்பி லாத ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பட்டுப் படாத மதனாலும் ... என்னை மலர்ப் பாணங்களினால் தாக்கியும் தாக்காததுபோல மறைந்திருக்கும் மன்மதனாலும், பக்கத்து மாதர் வசையாலும் ... அண்டை அயலிலுள்ள பெண்களின் பழிச்சொற்களினாலும், சுட்டுச் சுடாத நிலவாலும் ... தன் கிரணங்களினால் எரித்தும் எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும், துக்கத்தில் ஆழ்வது இயல்போதான் ... நான் விரக வேதனையில் மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா? தட்டுப் படாத திறல்வீரா ... குறையொன்றும் இல்லாத பராக்கிரமம் உடைய வீரனே, தர்க்கித்த சூரர் குலகாலா ... உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின் குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே, மட்டுப் படாத மயிலோனே ... அடக்க முடியாத வீரம் செறிந்த மயிலை வாகனமாகக் கொண்டோனே, மற்றொப்பி லாத பெருமாளே. ... வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச் சொல்லமுடியாத பெருமாளே. |
இது அகத்துறையில் முருகனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்து எழுதிய பாடல். மன்மதன், மலர்க்கணை, மாதர்களின் வசை, நிலவு போன்றவை தலைவியின் காதலை வளர்ப்பன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.672 pg 3.673 pg 3.674 pg 3.675 WIKI_urai Song number: 1296 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'மயிலாடுதுறை' திரு சொ. சிவகுமார் Thiru S. Sivakumar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு அருண் சந்தானம் (அட்லாண்டா) Thiru Arun Santhanam (Atlanta) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 1297 - pattup padAdha (common) pattup padAdha ...... madhanAlum pakkaththu mAdhar ...... vasaiyAlum suttuch sudAdha ...... nilavAlum dhukkaththil Azhvadh ...... iyalbOthAn thattup padAdha ...... thiRalveerA tharkkiththa sUrar ...... kulakAlA mattup padAdha ...... mayilOnE matRop pilAdha ...... perumALE. ......... Meaning ......... pattup padAdha madhanAlum: Attacking me with His flowery arrows, and at the same time being invisible, Manmathan (Love God) haunts me; pakkaththu mAdhar vasaiyAlum: the neighbouring women harrass me with their taunts; suttuch sudAdha nilavAlum: the rays from the moon scorch me while the moon itself remains bright and cold; dhukkaththil Azhvadh iyalbOthAn: and is it fair that I should be subjected to these pangs of separation from You? thattup padAdha thiRalveerA: Your valour is matchless! tharkkiththa sUrar kulakAlA: The hostile and argumentative SUran and his clan were annihilated by You as their God of Death! mattup padAdha mayilOnE: Your vehicle Peacock's valour is absolutely uncontrollable! matRop pilAdha perumALE.: None else can ever be Your equal, Oh Great One! |
This is a love song with Murugan as the NAyakA and the poet as the NAyaki. Love God, His flowery arrows, moon's rays and womenfolk's gossip-mongering are some of the aspects that enhance the agony of separation of the NAyaki from the NAyakA. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |