திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1290 தீது உற்றே எழு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1290 theedhuutREezhu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானத் தானன ...... தந்ததான ......... பாடல் ......... தீதுற் றேயெழு ...... திங்களாலே தீயைத் தூவிய ...... தென்றலாலே போதுற் றாடும ...... நங்கனாலே போதப் பேதைந ...... லங்கலாமோ வேதத் தோனைமு ...... னிந்தகோவே வேடப் பாவைவி ...... ரும்புமார்பா ஓதச் சூதமெ ...... றிந்தவேலா ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... தீது உற்றே எழு(ம்) திங்களாலே ... இடையூறு செய்யவே எழுகின்ற சந்திரனாலும், தீயைத் தூவிய தென்றலாலே ... நெருப்பை அள்ளி வீசுகின்ற தென்றல் காற்றாலும், போது உற்று ஆடும் அனங்கனாலே ... தனது மலர்ப் பாணங்களைச் செலுத்தி விளையாடும் மன்மதனாலும், போதப் பேதை நலங்கலாமோ ... அறிவுள்ள என் பெண் துயர் உறலாமோ? வேதத்தோனை முனிந்த கோவே ... வேத நாயகனாகிய பிரமனை கோபித்த தலைவனே, வேடப் பாவை விரும்பும் மார்பா ... வேடுவர் மகளான வள்ளி விரும்புகின்ற திரு மார்பனே, ஓதச் சூதம் எறிந்த வேலா ... கடலிடையே இருந்த மாமரத்தை (சூரபத்மனை) பிளந்தெறிந்த வேலாயுதனே, ஊமைத் தேவர்கள் தம்பிரானே. ... (வல்லவனாகிய உன் முன்னே) வாயில்லாத ஊமைகளாய் உள்ள தேவர்களின் பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது. நிலவு, தென்றல், மன்மதன், மலர்ப் பாணங்கள் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.666 pg 3.667 WIKI_urai Song number: 1289 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1290 - theedhu utRE ezhu (common) theethutR REyezhu ...... thingaLAlE theeyaith thUviya ...... thendRalAlE pOthut RAduma ...... nanganAlE pOthap pEthaina ...... langalAmO vEthath thOnaimu ...... ninthakOvE vEdap pAvaivi ...... rumpumArpA Othach chUthame ...... RinthavElA Umaith thEvarkaL ...... thambirAnE. ......... Meaning ......... theethu utRE ezhu(m) thingaLAlE: Because of the harassing moonlight, theeyaith thUviya thendRalAlE: because of the hurling of fire by the southerly breeze, pOthu utRu Adum ananganAlE: and because of the playful shooting of flowery arrows by Manmathan (God of Love), pOthap pEthai nalangalAmO: should my intelligent girl feel so miserable? vEthaththOnai munintha kOvE: You are the Lord who showed Your rage on BrahmA, the Lord of the VEdAs! vEdap pAvai virumpum mArpA: Your hallowed chest is coveted by VaLLi, the damsel of the hunters! Othach chUtham eRintha vElA: You wielded Your spear to shatter the mango tree (disguise of demon SUran) in the middle of the seas! Umaith thEvarkaL thambirAnE.: You are the Lord of the dumb celestials (who are speechless in Your dominating presence), Oh Great One! |
This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan. The moonlight, the southerly breeze, the God of Love Manmathan and His flowery arrows are a few of the things that aggravate the agony of separation. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |