திருப்புகழ் 1280 வேலை வாளை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1280 vElaivALai  (common)
Thiruppugazh - 1280 vElaivALai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனா தத்ததன தானனா தத்ததன
     தானனா தத்ததன ...... தனதான

......... பாடல் .........

வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்
     வீசுபா ணத்தைநிக ...... ரெனலாகும்

வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை
     யாடிமோ கித்திரியும் ...... வெகுரூப

கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி
     காரமோ டத்தெளிய ...... அரிதான

கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி
     கூடலா கப்பெருமை ...... தருவாயே

வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ
     வாளிபோ டக்கருது ...... மநுராமன்

வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை
     யூதிமோ கித்துவிழ ...... அருள்கூரும்

நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு
     நீசர்வாழ் வைக்களையு ...... மிளையோனே

நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு
     நீபதோ ளொப்பரிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வேலை வாளைக் கொடிய ஆலகாலத்தை மதன் வீசு
பாணத்தை நிகர் எனல் ஆகும்
... வேலாயுதத்தையும், வாளையும்,
கொடுமையான ஆலகால விஷத்தையும், மன்மதன் செலுத்துகின்ற
பாணங்களையும் ஒப்பாகச் சொல்லக் கூடிய

வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து
இரியும்
... துன்பம் தருவதை நிலை நாட்டுகின்ற கண்களை உடைய
விலைமாதர்களின் ஆபத்தான சரசங்களில் விளையாடி, காமப் பற்று
கொண்டு நிலை கெடுகின்ற

வெகு ரூப கோலகாலத்தை விடல் ஆகி மாறக் குண விகாரம்
ஓட
... பல வகையான ஆடம்பரங்களை விட்டு விட்டு, நல் வழிக்கு மாறி
வரவும், குண வேறுபாடுகள் என்னை விட்டு நீங்கவும்,

தெளிய அரிதான கூற ஒ(ண்)ணா தற்பரம ஞான ரூபத்தின்
வழி கூடலாகப் பெருமை தருவாயே
... தெளிந்து அறிவதற்கு
அரிதானதும், எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததானதும்,
மேம்பட்டதானதும், ஞான மயமானதும் ஆன நெறி கூடும்படியான
பெருமையைத் தந்து அருள்வாய்.

வாலி மார்பைத் துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போடக்
கருது(ம்) மநு ராமன்
... வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு
மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட
மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால்,

வான் உலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை ஊதி
மோகித்து விழ அருள் கூறும் நீல மேனிக்கு மருகா
...
விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட,
சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த,
அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய* திருமாலுக்கு மருகனே,

உதாரத்து வரு நீசர் வாழ்வைக் களையும் இளையோனே ...
மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய
அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே,

நேசமாகக் குறவர் தோகை மானைப் புணரும் நீப தோள்
ஒப்பு அரிய பெருமாளே.
... அன்பு கூடும்படி, மயில் போன்ற
குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப
மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே.


* இந்திராணி பாரிஜாதப் பூவை மானிடப் பெண்ணாகிய சத்யபாமைக்கு
(கண்ணனின் தேவிக்குக்) கொடுக்கத் தகாது என, சத்யபாமையின்
வேண்டுகோளுக்கு இரங்கி கருடன் அச்செடியைப் பறித்து சத்யபாமையின்
வீட்டில் நட்டார். இந்திரன் முதலான தேவர்கள் சினந்து கண்ணனோடு போர்
செய்ய, கண்ணன் சங்க நாதம் ஊதித் தேவர்களை மயங்கி விழச் செய்தார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.652  pg 3.653  pg 3.654  pg 3.655 
 WIKI_urai Song number: 1279 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1280 - vElai vALai (common)

vElaivA Laikkodiya AlakA laththaimathan
     veesupA Naththainika ...... renalAkum

vEthaisA thiththavizhi mAtharA paththilviLai
     yAdimO kiththiriyum ...... vekurUpa

kOlakA laththaivida lAkimA RakkuNavi
     kAramO daththeLiya ...... arithAna

kURoNA thaRparama njAnarU paththinvazhi
     kUdalA kapperumai ...... tharuvAyE

vAlimAr paiththuNiya EzhmarA itRuvizha
     vALipO dakkaruthu ...... manurAman

vAnulO kaththilama rEsanO likkavaLai
     yUthimO kiththuvizha ...... aruLkUrum

neelamE nikkumaru kAvuthA raththuvaru
     neesarvAzh vaikkaLaiyu ...... miLaiyOnE

nEsamA kakkuRavar thOkaimA naippuNaru
     neepathO Loppariya ...... perumALE.

......... Meaning .........

vElai vALaik kodiya AlakAlaththai mathan veesu pANaththai nikar enal Akum vEthai sAthiththa vizhi: The eyes of the whores, determined to cause misery, may be compared with the spear, the sword, the evil poison AlakAlam and the arrows shot by Manmathan (God of Love);

mAthar Apaththil viLaiyAdi mOkiththu iriyum: playing dangerous erotic games with such whores, I have been passionately involved with them, losing my balance;

veku rUpa kOlakAlaththai vidal Aki mARak kuNa vikAram Oda: in order to give up the many-faceted pompous gaiety and to direct myself to the righteous path and to get rid of the blemishes in my character,

theLiya arithAna kURa o(N)NA thaRparama njAna rUpaththin vazhi kUdalAkap perumai tharuvAyE: kindly show me that great path lit with true knowledge that is beyond comprehension, that is not easy to describe and that is supreme!

vAli mArpaith thuNiya Ezh marA itRu vizha vALi pOdak karuthu(m) manu rAman: Lord VishNu, coming as RAmA in Manu's lineage, thoughtfully wielded an arrow to pierce the heart of VAli and to knock down the seven gigantic trees;

vAn ulOkaththil amarEsan olikka vaLai Uthi mOkiththu vizha aruL kURum neela mEnikku marukA: when IndrA, the leader of the DEvAs, screamed seeking refuge, He blew His conch shell whose sound was so overpowering that all the celestials swooned; He is the gracious Lord KrishnA* of blue complexion; You are the nephew of that Lord VishNu!

uthAraththu varu neesar vAzhvaik kaLaiyum iLaiyOnE: The glory of the mean and evil demons, who led a pompous life, was destroyed by You, Oh Young One!

nEsamAkak kuRavar thOkai mAnaip puNarum neepa thOL oppu ariya perumALE.: Enhancing Your love for her, You hug VaLLi, the peacock-like damsel of the KuRavAs, with Your strong shoulders whose valour is peerless and which are adorned by kadappa garland, Oh Great One!


* IndrANi, the queen of the celestials, objected to the giving of Divine PArijAtha flower to a mere mortal, SathyabhAma, KrishnnA's consort. Garudan - Lord VishNu's vehicle - acceded to SathyabhAma's appeal and planted that tree in her house. This enraged IndrA and other DEvAs who waged a war against KrishNA. When KrishNA blew His conch shell, the sound was so powerful that all the celestials fainted.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1280 vElai vALai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]