திருப்புகழ் 1261 பாதகமான யாக்கை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1261 pAdhagamAnayAkkai  (common)
Thiruppugazh - 1261 pAdhagamAnayAkkai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தான தாத்த தானன தான தாத்த
     தானன தான தாத்த ...... தனதான

......... பாடல் .........

பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த
     பாணமும் வாளு மேற்ற ...... இருபார்வை

பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த
     பாயலின் மீத ணாப்பி ...... யிதமாடுந்

தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு
     தூய்மையில் நாயி னேற்கும் ...... வினைதீரச்

சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு
     கோதய ஞான வார்த்தை ...... யருள்வாயே

சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர
     ஜாபதி யாண்மை தோற்க ...... வரைசாடிச்

சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர
     தாபம கீப போற்றி ...... யெனநேமி

மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட
     வாசவ னோதி மீட்க ...... மறைநீப

மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி
     வானவர் சேனை காத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாதகமான யாக்கை வாது செய் பாவி ... பாவத்தினால் ஏற்பட்ட
உடலுடன் வேதனைப் போர் செய்கின்ற பாவியாகிய நான்,

கோத்த பாணமும் வாளும் ஏற்ற இரு பார்வை பார படீரம்
மாப் பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம்
ஆடும்
... செலுத்துவதற்குத் தயாராக இருக்கும் அம்பையும் வாளையும்
போன்ற இரண்டு கண்களையும், கனத்ததும் சந்தனம் பூசியுள்ளதும்
அழகு உள்ளதுமான மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின்
பொருந்திய படுக்கையின் மேலிருந்து ஏமாற்றி இனிமை காட்டும்,

தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு(ம்)
தூய்மையில் நாயினேற்கும் வினை தீர
... வஞ்சகமான
பேச்சுக்களை உபதேச மொழியாகக் கருதும் பரிசுத்தம் இல்லாத
நாயொத்த அடியேனுக்கும் என்னுடைய வினைகள் ஒழிய,

சூழும் அனாதி நீத்த யானொடு தான் இ(ல்)லாச் சுக உதய
ஞான வார்த்தை அருள்வாயே
... பொருந்தி, தொடக்கம்
இல்லாததாய், பெருந் தன்மையதான, யான், தான் என்னும் இரண்டும்
இல்லாததாய், சுகத்தைத் தோற்றுவிக்கும் ஞான மொழியை உபதேசித்து
அருள்வாயாக.

சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை
தோற்க வரை சாடி
... வேத நூல்களில் பயிற்சி உள்ள பழைமை
உடையவனும், பூணூல் அணிந்தவனுமாகிய பிரம தேவனுடைய தீரம்
குலைய வைத்து (ஆணவத்தை அடக்கி), கிரவுஞ்ச மலையை துகைத்து
ஒழித்து,

சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி
என
... கடலில் (மாமரமாக) இருந்த சூரனை வேட்டை ஆடிய வெற்றி
வேலைக் கொண்ட கீர்த்திமானே, அரசே, உன்னைத் துதிக்கிறேன் என்று,

நேமி மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன்
ஓதி மீட்க மறை நீப மா மலர் தூவி வாழ்த்த
... சக்ராயுதத்தை
ஏந்திய திருமாலும், தேவி விளங்கும் பாகத்தினரான சிவபெருமானும்,
பல கண்களை உடைய இந்திரனும் புகழ்ந்து, தம்மைக் காக்க
வேதங்களை ஓதியும், கடம்பின் அழகிய பூக்களைக் கொண்டு தூவியும்
உன்னை வாழ்த்த,

யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த
பெருமாளே.
... தேவயானையை மணம் புரிந்து தேவர்களுடைய
சேனைகளைக் காத்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.614  pg 3.615  pg 3.616  pg 3.617 
 WIKI_urai Song number: 1260 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1261 - pAdhagamAna yAkkai (common)

pAthaka mAna yAkkai vAthusey pAvi kOththa
     pANamum vALu mEtRa ...... irupArvai

pArapa deera mAppa yOthara mAthar vAyththa
     pAyalin meetha NAppi ...... yithamAdun

thOthaka mAya vArththai pOthaka mAka nOkku
     thUymaiyil nAyi nERkum ...... vinaitheerac

cUzhuma nAthi neeththa yAnodu thAni lAcchu
     kOthaya njAna vArththai ...... yaruLvAyE

sAthana vEtha nURpu rAthana pUNa nURpra
     jApathi yANmai thORka ...... varaisAdi

sAkara cUra vEttai yAdiya veera vERpra
     thApama keepa pOtRi ...... yenanEmi

mAthavan mAthu pUththa pAkara nEka nAtta
     vAsava nOthi meetka ...... maRaineepa

mAmalar thUvi vAzhththa yAnaiyai mAlai cUtti
     vAnavar sEnai kAththa ...... perumALE.

......... Meaning .........

pAthakamAna yAkkai vAthu sey pAvi: I am a sinner waging a miserable war with my body which itself is a result of sins;

kOththa pANamum vALum EtRa iru pArvai pAra padeeram mAp payOthara mAthar vAyththa pAyalin meethu aNAppi itham Adum: looking at the two eyes which are like an arrow and a sword ready to be wielded at any time and at the heavy and beautiful bosom, smeared with sandalwood paste, of the whores tantalising me with treacherous and sweet words from their cosy bed,

thOthakam Aya vArththai pOthakamAka nOkku(m) thUymaiyil nAyinERkum vinai theera: I have been imbibing their deceptive speech as if it were holy sermon; I am like an impure dog; nontheless, to put an end to my bad deeds,

cUzhum anAthi neeththa yAnodu thAn i(l)lA chuka uthaya njAna vArththai aruLvAyE: kindly teach me the language of True Knowledge that is appropriate, that is without any beginning, that is lofty, that is devoid of myself and itself and that generates eternal bliss!

sAthana vEtha nUl purAthana pUNa nUl prajApathi ANmai thORka varai sAdi: "Brahma, who is well-versed in VEdAs from time immemorial, and who is wearing the sacred thread, became stunned when You tamed His arrogance; You also smashed the mount Krouncha to pieces;

sAkara cUra vEttai Adiya veera vEl prathApa makeepa pOtRi ena: when the demon SUran hid in the sea as a mango tree, You hounded him out with Your triumphant Spear, Oh famous King, we bow to You" - so saying,

nEmi mAthavan mAthu pUththa pAkar anEka nAtta vAsavan Othi meetka maRai neepa mA malar thUvi vAzhththa: Lord VishNu holding the disc in His hand, Lord SivA on whose left side DEvi PArvathi is concorporate and Indra, bestowed with a myriad of eyes, praised You chanting the VEdAs for their own protection and offering beautiful kadappa flowers,

yAnaiyai mAlai cUtti vAnavar sEnai kAththa perumALE.: as You entered into wedlock with DEvayAnai and proceeded to protect the armies of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1261 pAdhagamAna yAkkai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]