திருப்புகழ் 1243 சூதினுண வாசை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1243 sUdhinuNavAsai  (common)
Thiruppugazh - 1243 sUdhinuNavAsai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான

......... பாடல் .........

சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
     தூசுவழ கானவடி ...... வதனாலே

சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு
     ளாசைதமி லேசுழல ...... வருகாலன்

ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென
     தாவிதனை யேகுறுகி ...... வருபோது

ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு
     மாதிமுரு காநினைவு ...... தருவாயே

ஓதமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர்
     ஓலமிட வேயயில்கொ ...... டமராடீ

ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்
     யோகமயி லாஅமலை ...... மகிழ்பாலா

நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன
     நாடுமடி யார்கள்மன ...... துறைவோனே

ஞானசுர வானைகண வாமுருக னேயமரர்
     நாடுபெற வாழவருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென ... வஞ்சனையாக
வைக்கப்பட்ட தூண்டிலில் உள்ள உணவை உண்ணும் ஆசையிலே
சுழன்று வரும் மீன்போல,

தூசுவழ கானவடிவதனாலே சூதமுட னேருமென ... ஆடையின்
அழகுடன் கூடிய உருவத்தைக்கண்டு மாந்தளிரின் நிறத்துக்கு உடல்
நிறம் சமமாகும் என்று நினைத்து

மாதர்நசை தேடுபொருளாசைதமி லேசுழல ... பெண்கள் மீதுள்ள
காம இச்சை காரணமாகத் தேடுகின்ற பொருளாசையால் மனம்
அலைச்சல் அடையும்போது,

வருகாலன் ஆதிவிதி யோடுபிற ழாதவகை ... வருகின்ற யமன்
முதலில் பிரமனால் எழுதப்பட்ட விதிக்குத் தவறாத வகையில்

தேடியெனதாவிதனை யேகுறுகி வருபோது ... என்னைத் தேடி
என் உயிரைப் பற்ற அருகில் வரும்சமயம்,

ஆதிமுருக ஆதிமுருக ஆதிமுரு காஎனவும் ... ஆதிமுருகா,
ஆதிமுருகா, ஆதிமுருகா, என்று நான் கூறுவதற்கு

ஆதிமுரு காநினைவு தருவாயே ... ஆதி முருகனே, நீ அந்த
ஞாபகத்தைத் தர வேண்டுகிறேன்.

ஓதமுகில் ஆடுகிரி யேறுபட ... ஈரம் உள்ள மேகம் படியும்
கிரெளஞ்சகிரி பொடியாகும்படி,

வாழசுரர் ஓலமிடவே அயில்கொடு அமராடீ ... அங்கு வாழ்ந்த
அசுரர்கள் பயத்தினால் கூக்குரல் இடும்படி, வேல் கொண்டு போர்
புரிந்தவனே,

ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும் ... ஓம் நமசிவாய என்னும்
பஞ்சாட்சரத்துக்கு ஏற்ற குருவாம் சிவபிரான் உனது பாதங்களிலே
பணியும்படியான

யோகமயி லாஅமலை மகிழ்பாலா ... யோக மூர்த்தியான
மயில்வாகனனே, குற்றமற்ற பார்வதி மகிழ்ந்து குலாவும் குழந்தையே,

நாதரகு ராமஅரி மாயன்மருகா ... தலைவனே, ரகுராமனாம்
திருமாலாகிய மாயனுடைய மருகனே,

புவன நாடும் அடியார்கள்மனதுறைவோனே ... பூமியில் உன்னை
விரும்பிப் போற்றும் அடியார்களின் உள்ளத்தில் உறைபவனே,

ஞானசுர ஆனைகணவாமுருகனே ... ஞான ஸ்வரூபியான
தேவயானையின் கணவனே, முருகனே,

அமரர் நாடுபெற வாழவருள் பெருமாளே. ... தேவர்கள் தமது
பொன்னுலகை மீண்டும் பெற்று வாழும்படி அருள் புரிந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.580  pg 3.581  pg 3.582  pg 3.583 
 WIKI_urai Song number: 1242 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1243 - sUdhinuNa vAsai (common)

sUdhinuNa vAsai thanilE suzhalu meenadhena
     dhUsu azhagAna vadi ...... adhanAlE

sUdham udanErumena mAdhar nasai thEdu poruL
     Asai thanilE suzhala ...... varukAlan

Adhi vidhiyOdu piRazhAdha vagai thEdi ena
     dhAvi thanaiyE kuRugi ...... varupOdhu

Adhimuru gAdhimuru gAdhimurugA enavum
     Adhi murugA ninaivu ...... tharuvAyE

Odha mugilAdu giri ERupadavAzh asurar
     OlamidavE ayilkod ...... amarAdee

OnamasivAya gurupAdha madhilE paNiyum
     yOgamayilA amalai ...... magizh bAlA

nAtha ragurAma ari mAyan marugA buvana
     nAdum adiyArgaL manadh ...... uRaivOnE

nyAna sura Anai kaNavA muruganE amarar
     nAdu peRa vAzha aruL ...... perumALE.

......... Meaning .........

sUdhinuNa vAsai thanilE suzhalu meenadhena: I was like the fish revolving with desire around the baited-food in the hook.

dhUsu azhagAna vadi adhanAlE sUdham udanErumena: Looking at the glittering attire (of women), I compared their complexion to that of tender mango leaf.

mAdhar nasai thEdu poruL Asai thanilE suzhala: Lusting for women, my mind revolved around ways and means of garnering wealth (to shower on them).

varukAlan Adhi vidhiyOdu piRazhAdha vagai: Yaman, God of Death, who never deviates from the path of fate predetermined by BrahmA,

thEdi enadhAvi thanaiyE kuRugi varupOdhu: is sure to search for and come to me to take away my life; at that time,

Adhimuru gAdhimuru gAdhimurugA enavum Adhi murugA ninaivu tharuvAyE: Oh Primordial (Adhi) MurugA, kindly remind me to utter Your name as "Adhi MurugA, Adhi MurugA and Adhi MurugA!"

Odha mugilAdu giri ERupada: The mount Krouncha, around which moist clouds hover, was destroyed to pieces,

vAzh asurar OlamidavE ayilkod amarAdee: and the demons who lived there screamed in anguish when You fought them with Your spear.

OnamasivAya gurupAdha madhilE paNiyum: Lord SivA, the Master represented by the ManthrA "Om NamasivAya" prostrated at Your feet

yOgamayilA: when You emerged as the yOgA Master, Oh Lord who mounts the peacock!

amalai magizh bAlA: You are the child elating Your mother, the impeccable Goddess PArvathi!

nAtha ragurAma ari mAyan marugA: Oh Lord, You are the nephew of Raghuraman, the great mystic Hari!

buvana nAdum adiyArgaL manadh uRaivOnE: On this earth, You dwell in the hearts of Your devotees!

nyAna sura Anai kaNavA muruganE: Oh MurugA, You are the consort of the wise damsel, DEvayAnai, belonging to the celestial land,

amarar nAdu peRa vAzha aruL perumALE.: You graciously made it possible for the celestials to redeem their lost kingdom, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1243 sUdhinuNa vAsai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]