திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1237 கோகனகமுகிழ்த்த (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1237 kOganagamugizhththa (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தனன தத்த தான தனன தத்த தான தனன தத்த ...... தனதான ......... பாடல் ......... கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த கோடு தலைகு லைத்த ...... முலையாலே கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த நீடி யகுவ ளைக்கண் ...... மடமானார் ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து மீள விதழ்க டிப்ப ...... தறியாதே ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த சேலில் பரித விப்ப ...... தினியேனோ மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு சாவி யதுவோ ரர்த்த ...... மொழிவோனே வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில் வாழ்வு பெறுகு றத்தி ...... மணவாளா வேக வுரக ரத்ந நாக சயன சக்ர மேவி மரக தத்தின் ...... மருகோனே வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி வேலை யுருவ விட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கோகனகம் முகிழ்த்த போக(ம்) புளகிதத்த கோடு தலை குலைத்த முலையாலே ... தாமரை மொட்டு மலர்ந்தது போன்றதாய், காம இன்பத்தினால் புளகாங்கிதம் கொண்டதாய், மலையின் சிகரத்தையும் வென்ற மார்பகத்தால், கூட வர அழைக்கு(ம்) மாடு குழை அடர்த்த நீடிய குவளைக் கண் மடமானார் ... தங்களுடன் இணைவதற்கு அழைப்பு விடுப்பவை போன்றுள்ளவையும், பொன்னாலாகிய குண்டலத்தை மோதும்படி நெருங்கி நீண்டுள்ளவையும், குவளை மலர் போன்றவையுமான கண்களை உடைய இளம் பொது மகளிருடைய ஆகம் உற அணைத்து காசை அபகரித்து மீள இதழ் கடிப்பது அறியாதே ... உடலை இறுக்கி அணைத்தும், பொருளை அபகரித்தும், மீண்டும் வாயிதழைக் கடிக்கும் வஞ்சக எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல், ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ ... காம இச்சையை மிக்க எழுப்பும் ஆலகால விஷத்தை உண்ட சேல் மீன் போல வருந்துவது இன்னமும் வேண்டுமோ? (போதும் போதும் என்றபடி) மாக நதி மதி ப்ரதாப மவுலியர்க்கு உசாவியது ஓர் அர்த்தம் மொழிவோனே ... ஆகாய நதியாகிய கங்கை, சந்திரன், (இவற்றை அணிந்துள்ள) புகழைக் கொண்ட சிவபெருமானுக்கு, அவர் கேட்டறிந்த ஒப்பற்ற ஒரு பொருளை (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தவனே, வாகுவலைய(ம்) சித்ர ஆறு இரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா ... தோளணி பூண்டதும், அழகிய பன்னிரண்டு மலை போன்றதுமான உனது தோள்களில் வாழ்வின் இன்பத்தைப் பெற்ற குறப்பெண்ணாகிய வள்ளியின் கணவனே, வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் ஏவி மரகதத்தின் மருகோனே ... விஷமுள்ள சர்ப்பமாகிய, ரத்தின மணி கொண்ட ஆதிசேஷன் மீது பள்ளி கொள்பவரும், சக்ராயுதம் ஏந்தியவரும் ஆன பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகோனே, வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே. ... வீசுகின்ற அலைகள் அலைக்கும் கடல் வற்றும்படி வெற்றி வேலை ஊடுருவச் செல்ல விட்ட பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.568 pg 3.569 pg 3.570 pg 3.571 WIKI_urai Song number: 1236 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1237 - kOganagamugizhththa (common) kOka nakamu kizhththa pOka puLaki thaththa kOdu thalaiku laiththa ...... mulaiyAlE kUda varava zhaikku mAdu kuzhaiya darththa needi yakuva LaikkaN ...... madamAnAr Aka muRava Naiththu kAsai yapaka riththu meeLa vithazhka dippa ...... thaRiyAthE Asai yathuko Luththu mAla mathuku diththa sElil paritha vippa ...... thiniyEnO mAka nathima thipra thApa mavuli yarkku sAvi yathuvo rarththa ...... mozhivOnE vAku valaiya chithra ARi rupuya veRpil vAzhvu peRuku Raththi ...... maNavALA vEka vuraka rathna nAka sayana chakra mEvi maraka thaththin ...... marukOnE veesu thiraiya laiththa vElai suvaRa vetRi vElai yuruva vitta ...... perumALE. ......... Meaning ......... kOkanakam mukizhththa pOka(m) puLakithaththa kOdu thalai kulaiththa mulaiyAlE: Their bosom looks like a blossoming lotus bud, enthralled by the pleasure of love and surpassing the peak of the mountain; kUda vara azhaikku(m) mAdu kuzhai adarththa neediya kuvaLaik kaN madamAnAr: their eyes invite their suitors to embrace them, extending right up to their ears and colliding with the swinging ear-studs made of gold; the eyes of the young whores resemble black lily; Akam uRa aNaiththu kAsai apakariththu meeLa ithazh kadippathu aRiyAthE: without realising the ulterior motive in their tight hugging, namely, grabbing of all the belongings of their suitors and biting the lips again, Asai athu koLuththum Alam athu kudiththa sElil parithavippathu ini EnO: am I to suffer still like the sEl fish that has imbibed the passion-provoking poison of AlakAlam? (Enough is enough). mAka nathi mathi prathApa mavuliyarkku usAviyathu Or arththam mozhivOnE: He is famous for holding in His matted hair the great river Gangai that flows across the sky and the crescent moon; to that Lord SivA You preached the meaning of the matchless PraNava ManthrA which He sought to learn! vAkuvalaiya(m) chithra ARu iru puya veRpil vAzhvu peRu kuRaththi maNavALA: She derived the bliss of Her life from Your twelve mountain-like shoulders wearing the shoulder-ornaments; She is the damsel of the KuravAs, and You are that VaLLi's consort! vEka uraka rathna nAka sayana sakram Evi marakathaththin marukOnE: He slumbers on the bed of the poisonous Serpent AdhisEshan that holds the precious gem, ruby; He holds the disc as a weapon in His hand; and You are the nephew of that green-hued Lord VishNu! veesu thirai alaiththa vElai suvaRa vetRi vElai uruva vitta perumALE.: When You wielded Your triumphant spear across the wavy sea, its water dried up and the sea became dehydrated, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |