திருப்புகழ் 1232 கள்ள மீனச் சுறவு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1232 kaLLameenachchuRavu  (common)
Thiruppugazh - 1232 kaLLameenachchuRavu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
     தய்யனா தத்ததன ...... தனதான

......... பாடல் .........

கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய
     கல்விவீ றக்கரிய ...... மனமாகுங்

கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய
     மெய்கள்தோ ணிப்பிறவி ...... யலைவேலை

மெள்ளஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண
     முல்லைவே ருற்பலமு ...... ளரிநீபம்

வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது
     சொல்லையோ திப்பணிவ ...... தொருநாளே

துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு
     வள்ளிமா னுக்குமயல் ...... மொழிவோனே

தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன்
     எல்லைகா ணற்கரியர் ...... குருநாதா

தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள்
     செல்வனே முத்தமிணர் ...... பெருவாழ்வே

தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
     தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கள்ள மீனச் சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற ...
கள்ளத் தந்திரத்தை உடைய சுறாமீன் பல மீன்களை உண்ணும்.
(அதுபோல) பெரிய புலவர்களை வெல்லக் கூடிய நல்ல பெரிய கல்வி
ஞானமானது எனக்கு மேம்பட்டு விளங்குவதற்காக,

கரிய மனமாகும் கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து
இசைய
... அஞ்ஞான மனமாகிய கல்லை அது போகும் வழியில்
விடாது ஒரு நிலைப்படுத்தி, நாலு திசைகளிலும் பொருந்தி உள்ள
பெரியோர்கள் சொல்லியுள்ள ஆராய்ச்சியின் பயனை அடையச் செய்ய,

மெய்கள் தோணிப் பிறவி அலை வேலை மெள்ள ஏறி ...
உண்மைப் பொருள்கள் தோன்றி விளங்க, பிறவியாகிய அலை கடலை
மெதுவாகக் கடந்து செல்ல (என்ன செய்யவேண்டும் என்றால்),

குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ(ம்) முல்லை வேர்
உற்பலம் முளரி நீபம் வில்ல(ம்)
... குராமலர், விளா இலை, ஆத்தி,
வெட்சி, குளிர்ச்சி பொருந்திய முல்லை, குறு வேர், நீலோற்பல மலர்,
தாமரை, கடம்பு, வில்வம் முதலியவற்றை

நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை
ஓதிப் பணிவது ஒரு நாளே
... பெரியதும், அழகுள்ளதும், பொன்
போல் ஒளி வீசுவதுமான, அல்லிமலர் போன்ற உனது திருவடியின் மீது
இட்டு, உனது புகழை உரைத்து உன்னைப் பணிவதுமான ஒரு நாள்
எனக்குக் கிடைக்குமா?

துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு வள்ளி
மானுக்கு மயல் மொழிவோனே
... வீறிட்டு எழும் ஆசைகளை
ஒழித்த சிவ முனிவர் தமக்கும் புள்ளி மானுக்கும் வள்ளி மலையில் பிறந்த
மான் போன்ற வள்ளி நாயகியிடம் காதல் மொழிகளைப் பேசியவனே,

தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை
காணற்கு அரியர் குருநாதா
... பழமையான பாம்பாகிய ஆதிசேஷன்
மீது கண் வளரும் செல்வராகிய திருமாலும், வேள்வி நாயகனான மகபதி
இந்திரனும் எல்லையே காண முடியாதவராகி நின்ற சிவபெருமானுக்கு
குரு நாதனே,

தெள்ளு நாதச் சுருதி வள்ளல் மோலிப் புடை கொள்
செல்வனே முத்தமி(ழ்)ணர் பெரு வாழ்வே
... தெளிவான
நாதத்துடன் வேதங்களை ஓதும் பிரமனுடைய தலையைக் குட்டிய
செல்வனே, முத்தமிழும் வல்ல புலவர்களின் பெருவாழ்வே,

தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானைத் தலைவ
தெய்வ யானைக்கு இனிய பெருமாளே.
... தெய்வ யானையாகிய
விநாயகப் பெருமானுக்கு இளையவனே, வெள்ளை யானையாகிய
ஐராவதத்துக்குத் தலைவனே, தேவயானைக்கு இன்பம் தரும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.558  pg 3.559  pg 3.560  pg 3.561  pg 3.562  pg 3.563 
 WIKI_urai Song number: 1231 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1232 - kaLLa meenach chuRavu (common)

kaLLamee nacchuRavu koLLumee naRperiya
     kalvivee Rakkariya ...... manamAkum

kalvidA thutRathisai solvisA raththisaiya
     meykaLthO NippiRavi ...... yalaivElai

meLLaE Rikkuravu veLLilAr vetchithaNa
     mullaivE ruRpalamu ...... Larineepam

villaneeL poRkanaka vallimE littunathu
     sollaiyO thippaNiva ...... thorunALE

thuLLumA niththamuni puLLimAn veRputhavu
     vaLLimA nukkumayal ...... mozhivOnE

tholviyA LaththuvaLar selvaryA kaththaraiyan
     ellaikA NaRkariyar ...... gurunAthA

theLLunA thacchuruthi vaLLalmO lippudaikoL
     selvanE muththamiNar ...... peruvAzhvE

theyvayA naikkiLaiya veLLaiyA naiththalaiva
     theyvayA naikkiniya ...... perumALE.

......... Meaning .........

kaLLa meenac chuRavu koLLum meenam periya kalvi veeRa: The large and crafty shark gobbles up many a fish; (likewise) in order that I could excel with a vast and illustrious erudition to conquer many a poet,

kariya manamAkum kal vidAthu utRa thisai sol visAraththu isaiya: in order that I am able to restrain the stone-like ignorant mind of mine from rambling on its own course and steady it, making it derive the benefit of research of elders,

meykaL thONip piRavi alai vElai meLLa ERi: and in order that I discern truths, slowly crossing over the wavy sea of birth, (this is what I have to do) -

kuravu veLLil Ar vetchi thaN a(m) mullai vEr uRpalam muLari neepam villa(m): collecting the following, namely, kurA flower, viLA and Aththi (mountain ebony) leaves, vetchi and cool jasmine flowers, kuRu root, blue lily, lotus, kadappa flower and vilvam (bael) leaves,

neeL pon kanakam alli mEl ittu unathu sollai Othip paNivathu oru nALE: I must offer them at Your hallowed alli-like feet which are large, beautiful and shiny like gold, and prostrate at them singing Your glory; will there be a day when I can do that?

thuLLum mAl niththa muni puLLi mAn veRpu uthavu vaLLi mAnukku mayal mozhivOnE: When the Saivite sage, who had ridden himself of all surging desires, had union with the dotted deer in Mount VaLLimalai, the deer-like damsel, VaLLi, was born; You spoke to her sweet words of deep love, Oh Lord!

thol viyALaththu vaLar selvar yAkaththu araiyan ellai kANaRku ariyar gurunAthA: He stood there without any boundary in sight, and beyond the comprehension of Lord VishNu, who slumbers on the old serpent AdhisEshan, and IndrA, the Lord of all sacrifices; You are the Master of that Lord SivA!

theLLu nAthac churuthi vaLLal mOlip pudai koL selvanE muththami(zh)Nar peru vAzhvE: He chants VEdAs musically in a clear tone and pitch; You banged the heads of that Lord BrahmA with Your knuckles; You are the great asset of all poets, well-versed in the three branches of Tamil language, Oh Lord!

theyva yAnaikku iLaiya veLLai yAnaith thalaiva theyva yAnaikku iniya perumALE.: You are the younger brother of the Divine Elephant-God, VinAyagAr; You are the Master of the white celestial elephant, airAvadham; and You are the beloved consort of DEvayAnai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1232 kaLLa meenach chuRavu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]