திருப்புகழ் 1229 கப்பரை கைக்கொள  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1229 kapparaikaikkoLa  (common)
Thiruppugazh - 1229 kapparaikaikkoLa - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
     கட்பயி லிட்டிள ...... வளவோரைக்

கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு
     கத்தைமி னுக்கிவ ...... ருமுபாயப்

பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்
     பற்றென வுற்றவொர் ...... தமியேனைப்

பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை
     பட்டதெ னக்கினி ...... யமையாதோ

குப்பர வப்படு பட்சமி குத்துள
     முத்தரை யர்க்கொரு ...... மகவாகிக்

குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்
     குற்றம றுத்திடு ...... முதல்வோனே

விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி
     சித்ரத னக்கிரி ...... மிசைதோயும்

விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு
     வெற்பைநெ ருக்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கப்பரை கைக் கொள வைப்பவர் ... (தம்மை நாடி வருபவர்) பிச்சை
எடுக்கும் ஓட்டைக் கையில் ஏந்தும்படி வைப்பவர்கள்.

மைப் பயில் கண் பயிலிட்டு இள வளவோரைக் கைக்குள்
வசப் பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாயப்
பப்பர மட்டைகள்
... மை தீட்டிய கண் பார்வை கொண்டு இளமைப்
பருவத்தினராக செல்வம் உள்ளவர்களை தமது கையில் வசப்படும்படி,
வெற்றிலைக் கறை கொண்ட பல்லைக் காட்டி முகத்தை மினுக்கச்
செய்து மயக்கும் தந்திரக் கூத்தாடிகள்.

பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை ...
பொட்டு வைத்த நெற்றியை உடையவர்கள் ஆகிய வேசியர்களே
துணை எனக் கொண்ட ஒரு தன்னந்தனியனான கதி அற்ற என்னை,

பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது
எனக்கு இனி அமையாதோ
... தாமரை போன்ற உன் திருவடிக் கீழ்
வைத்து, திருவருளைத் தந்து, அருள் பிரசாதத்தைப் பெற்றேன் என்ற
நிலை எனக்கு இனிமேல் கூடாதோ?

குப் பரவப் படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு
ஆகி
... உலகத்தாரால் புகழப்படும் அன்பு மிகவும் உள்ள, மூவுலகுக்கும்
தலைவராகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையாகி,

குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம்
அறுத்திடு முதல்வோனே
... வஞ்சகம் இல்லாமல் உன்னைப்
புகழ்தல், உன்னிடம் ஆசை கொள்ளுதல், உன்னை அறிதல்
இம்மூன்றும் இல்லாத ஒரு பிழையை நீக்கும் முன்னவனே,

விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தனக் கிரி
மிசை தோயும் விக்ரம
... அந்தணராகிய சிவ முனிவர்க்கு மான் பெற்ற
குறிஞ்சி நிலத்துப் பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களைத்
தழுவும் பராக்கிரமசாலியே,

மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய
பெருமாளே.
... பொருந்திய புய மலையைக் கொண்டு சூரனுடைய
ஏழு குலமலைகளையும் தாக்கி அழித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.552  pg 3.553  pg 3.554  pg 3.555 
 WIKI_urai Song number: 1228 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1229 - kapparai kaikkoLa (common)

kapparai kaikkoLa vaippavar maippayil
     katpayi littiLa ...... vaLavOraik

kaikkuLva sappada paRkaRai yittumu
     kaththaimi nukkiva ...... rumupAyap

pappara mattaikaL pottidu netRiyar
     patRena vutRavor ...... thamiyEnaip

pathmapa thaththinil vaiththaruL thuyththirai
     pattathe nakkini ...... yamaiyAthO

kuppara vappadu patchami kuththuLa
     muththarai yarkkoru ...... makavAkik

kuththira matRurai patRuNar vatRavor
     kutRama Ruththidu ...... muthalvOnE

vipramu nikkuzhai petRako dicchivi
     sithratha nakkiri ...... misaithOyum

vikrama maRpuya veRpinai yittezhu
     veRpaine rukkiya ...... perumALE.

......... Meaning .........

kapparai kaik koLa vaippavar: These women are capable of handing (to their suitors) the begging bowl;

maip payil kaN payilittu iLa vaLavOraik kaikkuL vasap pada pal kaRai ittu mukaththai minukki varum upAyap pappara mattaikaL: with their enticing eyes that are painted with black pigment they ensnare young and rich men; showing their teeth stained due to chewing betelnut, they show their gleaming face and lure people; they are such cunning and crafty dancers;

pottu idu netRiyar patRu ena utRa or thamiyEnai: I have been thinking that these whores who show off the ornamental dot on their forehead are my only refuge; I am such a hopeless loner;

pathma pathaththinil vaiththu aruL thuyththu irai pattathu enakku ini amaiyAthO: shall I never attain the status where You take charge of me under Your hallowed lotus feet and grant me the boon of Your grace?

kup paravap padu patcha mikuththuLa muththaraiyarkku oru makavu Aki: He has the love of the entire people of the world who extol Him; He is the Leader of the three worlds; and You are the matchless child of that Lord SivA!

kuththiram atRu urai patRu uNarvu atRa or kutRam aRuththidu muthalvOnE: I suffer from a severe setback of not having any of the three virtues, namely, praising You without any treacherous thought, devotion towards You and seeking to know You; but You are the Primal Lord that removes my shortcoming!

vipra munikku uzhai petRa kodicchi visithra thanak kiri misai thOyum vikrama: She is the creeper-like girl born in the mountainous region to a deer, sired by a Saivite brahmin sage; She is the damsel, VaLLi of the KuRinji land, and You hug her beautiful bosom, Oh valorous One!

mal puya veRpinai ittu ezhu veRpai nerukkiya perumALE.: You attacked and destroyed the seven protective mountains of the demon SUran with Your mountain-like shoulders, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1229 kapparai kaikkoLa - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]