திருப்புகழ் 1224 ஏட்டிலே வரை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1224 EttilEvarai  (common)
Thiruppugazh - 1224 EttilEvarai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாத்த தானன தாத்த தானன
     தாத்த தானன ...... தந்ததான

......... பாடல் .........

ஏட்டி லேவரை பாட்டி லேசில
     நீட்டி லேயினி ...... தென்றுதேடி

ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
     லேற்ற மானகு ...... லங்கள்பேசிக்

காட்டி லேயியல் நாட்டி லேபயில்
     வீட்டி லேஉல ...... கங்களேசக்

காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
     யாக்கை மாய்வதொ ...... ழிந்திடாதோ

கோட்டு மாயிர நாட்ட னாடுறை
     கோட்டு வாலிப ...... மங்கைகோவே

கோத்த வேலையி லார்த்த சூர்பொரு
     வேற்சி காவள ...... கொங்கில்வேளே

பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
     பூட்கை சேர்குற ...... மங்கைபாகா

பூத்த மாமலர் சாத்தி யேகழல்
     போற்று தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

ஏட்டிலே வரை பாட்டிலே ... ஏட்டில் எழுதப்படும், மனிதர்களைத்
துதிக்கும் பாடல்களும்,

சிலநீட்டிலே ... அவற்றுள் சிலவற்றை நீட்டி முழக்கிப் பாடுதலும்

இனிதென்று தேடி ஈட்டு மாபொருள் ... சம்பாதிக்க இனிய வழிகள்
என்று பிரபுக்களை நாடி சேர்க்கும் பொருட்களை

பாத்துணாது இகல் ஏற்றமான ... மற்றவர்களோடு பங்கிட்டு
உண்ணாது, தகுதிக்கு ஏற்றாற்போல்

குலங்கள்பேசி ... குலப்பெருமையையே பேசிக்கொண்டு,

காட்டிலே யியல் நாட்டிலே ... காட்டிலும், பொருந்திய நாட்டிலும்,

பயில் வீட்டிலே உலகங்கள் ஏச ... பழகும் வீட்டிலும் உள்ள
உலகத்தார் அனைவரும் பழிக்கும்படியாக வாழ்ந்து,

காக்கை நாய்நரி பேய்க் குழாம் உண ... (கடைசியில்) காக்கை,
நாய், நரி, பேய்களின் கூட்டங்களுக்கு உணவாகும்

யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ ... இந்த உடம்பு இறந்து
படுவது என்பது நீங்காதோ?

கோட்டும் ஆயிர நாட்டன் நாடுறை ... விளங்கும் ஆயிரம்
கண்களைக் கொண்ட இந்திரனது நாட்டில் வாழும்

கோட்டு வால் இப மங்கை கோவே ... தந்தங்களை உடைய
வெள்ளை யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் மணவாளா,

கோத்த வேலையில் ஆர்த்த சூர் ... உலகு ஆடையாக உடுத்த
கடலில் ஆர்ப்பரித்து நின்ற சூரனுடன்

பொரு வேற் சிகாவள ... போரிட்ட வேலாயுதனே, மயில் வாகனனே,

கொங்கில்வேளே ... கொங்கு நாட்டின்* தலங்களில் அமர்ந்த
செவ்வேளே,

பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர் ... நாண் ஏற்றப்பட்ட பெரிய
வில்லை ஏந்திய மலை வேடர்களின்

பூட்கை சேர்குற மங்கைபாகா ... குலதர்மக் கொள்கைப்படி வளர்ந்த
குறமாது வள்ளியின் பங்கனே,

பூத்த மாமலர் சாத்தியே ... அன்றலர்ந்த நல்ல பூக்களைச் சாத்தியே

கழல் போற்று தேவர்கள் தம்பிரானே. ... உன் திருவடியைப்
போற்றும் தேவர்கள் தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.544  pg 3.545 
 WIKI_urai Song number: 1223 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1224 - EttilE varai (common)

EttilE varai pAttilE sila
     neettilE ini ...... dhendru thEdi

eettu mAporuL pAththuNAdh igal
     Etra mAna ...... kulangaL pEsik

kAttilE iyal nAttilE payil
     veettilE ...... ulagangaL Esa

kAkkai nAy nari pEyk kuzhAmuNa
     yAkkai mAyvadh ...... ozhindhidAdhO

kOttum Ayira nAtta nAduRai
     kOttu vAliba ...... mangai kOvE

kOththa vElaiyi lArththa sUrporu
     vER sikAvaLa ...... kongil vELE

pUttuvAr silai kOttu vEduvar
     pUtkai sEr kuRa ...... mangai bAgA

pUththa mAmalar sAththiyE kazhal
     pOtru dhEvargaL ...... thambirAnE.

......... Meaning .........

EttilE varai pAttilE: In all those songs inscribed in palm leaves praising human beings

sila neettilE: and in some of those songs elaborately sung,

ini dhendru thEdi: I thought I found a nice source of income and went after rich people.

eettu mAporuL pAththuNAdhu: But I never cared to share the great wealth so earned.

igal Etra mAna kulangaL pEsi: I was simply bragging about how great was my lineage was!

kAttilE iyal nAttilE payil veettilE: In the forests or countryside or even in my own household,

ulagangaL Esa: everyone in this world decried me for my meanness.

kAkkai nAy nari pEyk kuzhAmuNa: Finally, is it for feeding the crowds of crows, dogs, foxes and devils

yAkkai mAyvadh ozhindhidAdhO: that my body is meant? Can I put an end to such death and decay of my body?

kOttum Ayira nAtta nAduRai: In the Land of the great IndrA, with a thousand eyes, lives

kOttu vAliba mangai kOvE: DEvayAnai, who was reared by AirAvatham, the white elephant with tusks; she is Your consort.

kOththa vElaiyi lArththa sUr: The earth wears the ocean as clothing; in that ocean, SUran created havoc, and

poruvER sikAvaLa kongil vELE: You fought with Your Spear with Peacock as Your vehicle. You reside in several mounts* in Kongu NAdu!

pUttuvAr silai kOttu vEduvar: The hunters living in the mounts hold large bows with taut strings;

pUtkai sEr kuRa mangai bAgA: and You married VaLLi, the damsel of that tribe, who followed their tradition.

pUththa mAmalar sAththiyE kazhal: Fresh flowers are showered daily at Your feet by

pOtru dhEvargaL thambirAnE.: DEvAs worshipping Your feet, Oh great One!


* To name a few mounts in Kongu NAdu:

ThiruchenkOdu, Chennimalai, KangkEyam, BhavAni and Maruthamalai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1224 EttilE varai - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]