திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1216 ஆலும் மயில் போல் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1216 AlumayilpOl (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தானத்த தானதன தானத்த தானதன தானத்த ...... தனதான ......... பாடல் ......... ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த ஆரவட மேலிட்ட ...... முலைமீதே ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க ஆமவரை யேசற்று ...... முரையாதே வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று வீறுமுன தார்பத்ம ...... முகமாறு மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க மேதகவு நானித்த ...... முரையேனோ நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு நாடவரி யார்பெற்ற ...... வொருபாலா நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க நாடுகுயில் பார்மிக்க ...... எழில்மாது வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த வேழமுக வோனுக்கு ...... மிளையோனே வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து வேலைமிக வேவிட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆலும் மயில் போல் உற்ற தோகையர்களே மெத்த ஆர வடம் மேலிட்ட முலை மீதே ... ஆடும் மயில் போல் உள்ள மாதர்கள், முத்து மாலையை மேலே அணிந்த, நிரம்பிய மார்பின் மீது ஆன துகிலே இட்டு வீதி தனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே ... பொருத்தமான ஆடையை அணிந்து தெருவில் நிற்க ஆசைப்பட்ட விலைமாதர்கள் - இவர்களைப் பற்றியே சிறிதும் நான் பேசாமல், வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்ம முகம் ஆறு ... உனது வேலாயுதத்தையும், அழகு நிறைந்த, வீரம் மிக்க, நீலநிறம் கொண்ட மயில் மீது ஏறி விளங்குவதான உன் மலர்ந்த தாமரை போன்ற ஆறு முகங்களையும், மேவி இரு பாகத்தும் வாழும் அ(ன்)னைமார் தக்க மேதகவும் நான் நித்தம் உரையேனோ ... பொருந்தி உனது இரு புறங்களிலும் வாழ்கின்ற அன்னைமார் (வள்ளி, தேவயானை என்ற இருவருடைய) சிறந்த பெருமையையும், நான் நாள்தோறும் புகழ மாட்டேனோ? நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கும் நாட அரியார் பெற்ற ஒரு பாலா ... நான்கு முகங்களைக் கொண்ட பிரமனாலும், ஆலிலை மேல் பள்ளி கொள்ளும் திருமாலாலும் தேடிக் காண முடியாத சிவபெருமான் ஈன்ற ஒப்பற்ற குழந்தையே, நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது ... நாணம் உடையவளும், வெற்றி பெறும் வேடர் குலத்திலே யாவரும் விரும்பிப் போற்றும் குயில் போன்றவளும், உலகில் யாரினும் மேம்பட்ட அழகுள்ள பெண்ணும், வேலை விழி வேடச்சியார் கணவனே ... கடல் போன்ற கண்களைக் கொண்ட வேடப்பெண் ஆகிய வள்ளியின் கணவனே, மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே ... மதம் கொண்ட யானை முகம் உள்ள கணபதிக்குத் தம்பியே, வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே விட்ட பெருமாளே. ... வீரத்துடன் போருக்கு எழுந்த சூரனுடைய அழகிய மார்பிடத்தே வேலாயுதத்தை வேகமாகச் செலுத்திய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.528 pg 3.529 pg 3.530 pg 3.531 WIKI_urai Song number: 1215 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1216 - Alum ayil pOl (common) Aalumayil pOlutRa thOkaiyarka LEmeththa Aravada mElitta ...... mulaimeethE Aanathuki lEyittu veethithani lEniRka Amavarai yEsatRu ...... muraiyAthE vElumazha kArkotRa neelamayil mElutRu veeRumuna thArpathma ...... mukamARu mEviyiru pAkaththum vAzhumanai mArthakka mEthakavu nAniththa ...... muraiyEnO nAlumuka vEthaRku mAlilaiyil mAlukku nAdavari yArpetRa ...... vorupAlA nANamudai yALvetRi vEdarkula meethokka nAdukuyil pArmikka ...... ezhilmAthu vElaivizhi vEdacchi yArkaNava nEmaththa vEzhamuka vOnukku ...... miLaiyOnE veeramuda nEyutRa cUranaNi mArpaththu vElaimika vEvitta ...... perumALE. ......... Meaning ......... Aalum mayil pOl utRa thOkaiyarkaLE meththa Ara vadam mElitta mulai meethE: Women who look like the dancing peacock, wearing pearl necklace on their big bosom, Aana thukilE ittu veethi thanilE niRka Am avaraiyE satRum uraiyAthE: wrapped in appropriate dress, stand at the street-corners; I do not want to speak in the least about these whores; vElum azhaku Ar kotRa neela mayil mEl utRu veeRum unathu Ar pathma mukam ARu: instead, (I wish to speak of) Your spear, Your mounting the beautiful, valorous and blue peacock, Your six fully-blossomed lotus faces, mEvi iru pAkaththum vAzhum a(n)naimAr thakka mEthakavum nAn niththam uraiyEnO: and the great eminence of the two Goddesses (VaLLi and DEvayAnai) gracefully positioned by Your sides; will I be able to sing the praise of these everyday? nAlu muka vEthaRkum Alilaiyil mAlukkum nAda ariyAr petRa oru pAlA: The four-faced BrahmA and Lord VishNu who slumbers on a banyan leaf could not perceive Him; You are the unique child of that Lord SivA! nANam udaiyAL vetRi vEdar kula meethu okka nAdu kuyil pAr mikka ezhil mAthu: She is a shy damsel of the triumphant tribe of hunters who cherish her like a cuckoo; she is the most beautiful woman in this world; vElai vizhi vEdacchiyAr kaNavanE: She is VaLLi, the kuRavA girl, with eyes wide like the sea; and You are her Consort, Oh Lord! maththa vEzha mukavOnukkum iLaiyOnE: You are the younger brother of GaNapathi, the Lord with the face of a frenzied elephant! veeramudanE utRa cUran aNi mArpaththu vElai mikavE vitta perumALE.: You swiftly wielded the spear aimed at the broad chest of the demon SUran who came to the battlefield valorously, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2017-2030 [xhtml] 0504.2022[css]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact us if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., we are NOT responsible for any damage caused by downloading any item from this website. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |