பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 521 (வேடர் நாட்டில்) வேடர்களின் ப்ரதேசத்தில் (வள்ளி மலையில் விளைந்த (புன ஏனல்) ஏனல் புன்ம் - தினைக் கொல்லையைக் (கர்த்த) பாதுகாத்த சிறுமியை வள்ளிப்பெண்ணை (வேடம் மாற்றி) உன்து நிஜ உருவைக் (காட்டாது மாற்றி) வேட உருவுடன் ச்ென்று (வ்ழிபட்ட) வணங்கின (அல்லது வள்ளிக்குத் தெய்வக்கோலத்தைத் தந்தவனே! அவளை வணங்கின) இளைஞனே! Hor (ஞாலம் ஏத்தி) பூமியில் உள்ளோர் போற்றி வழிபடுகின்ற (ஆறு ப்ேர்க்கும்) கார்த்திகை மாதர் அறுவர்க்கும். (மகவென) குழந்தையென்று_சொல்லும்படி நாணல் பூத்த படுகையில்) நாணல் புல் சூழ்ந்த மடுவினில் சரவணத்தில் தோன்றினவனே! (நாத) தலைவ போற்றி என் றுகூறி (முதுதாதை) பெரியவராம் உனது தந்தை (கேட்க) உபதேசிப்பாயாக என்று கேட்க அவருக்கு ) அனுபவ ஞான வார்த்தையை இன்ப நுகர்ச்சியைத்தரும் ஞான ம்ொழியை உபதேசித்தருளின பெருமாளே! (காதலால் கருது முணர்ச்சியைத் தருவாயே) 1215. (ஆலும்) ஆரவாரித்து ஒலிக்கும் அல்லது ம் மயில்போல் உள்ள (தோகையர்கள்) மாதர்களின் ரம்பின முத்துமாலை மேலே அணிந்துள்ள கொங்கையின் மேலே - பொருத்தமான ஆடையை அணிந்து தெருவிலே நிற்கு (ஆம் அவரையே) ப்ரியப்படும் அப்பொதுமாதர்களையே நீதிக் (நான்) பேசாமல் - வேலாயுதத்தையும், அழகு நிரம்பிய ம், வீரம் உள்ளதும், நீலநிறமுள்ளதும்ான் மயில்ம்ேல் ஆரோகணித்து விளங்குபவனான உனது மலர்ந்த தாமரை யன்ன (அல்லது பத்மம் ஆர் - தாமரை போன்ற) திருமுகங்கள் ஆறினையும், பொருந்தி உனது இருபுறங்களிலும் வாழ்கின்ற (அன்னைமார்) தாய்மார் - தேவசேன்ன வள்ளி என்னும் இருவருடைய (தக்க மேதகவும்) சிறந்த பெருமையையும் - மேன்மையையும் நான் நாள் தோறும் புகழ மாட்டேனோ! நான்கு முகங்களைக்கொண்ட பிரமனாலும், ஆலிலையிற் பள்ளி கொள்ளும் திருமாலாலும் தேடுதற்கு அரிய்ராய்நின்ற சிவபிரான் அளித்த ஒப்பற்ற குழந்தையே!

  • ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறுபேர் - கார்த்திகை மாதர். இது கார்த்திகை விரதத்தின் மேன்மையையும் குறிக்கும்.

"ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் நோற்று முப்புவனத்தின் வேண்டும் முறைமையை அடைந்த நீரார் மெய்ப்படு தொகையை யாரே விளம்புவார்". கந்தபுரா. 6.23-19