திருப்புகழ் 1213 ஆசைக் கொளுத்தி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1213 AsaikkoLuththi  (common)
Thiruppugazh - 1213 AsaikkoLuththi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தனத்ததன தானத் தனத்ததன
     தானத் தனத்ததன ...... தனதான

......... பாடல் .........

ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு
     மாடைப் பணத்தையெடெ ...... னுறவாடி

ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி
     யாடக் குலத்துமயில் ...... கிளிபோலப்

பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி
     பேதைப் படுத்திமய ...... லிடுமாதர்

பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை
     பீடைப் படுத்துமய ...... லொழியாதோ

தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி
     சேடற் பிடுத்துதறு ...... மயில்வீரா

தேடித் துதித்தஅடி யார்சித் தமுற்றருளு
     சீர்பொற் பதத்தஅரி ...... மருகோனே

நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு
     நீசற் கனத்தமுற ...... விடும்வேலா

நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி
     நீர்பொற் புவிக்குள்மகிழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆசைக் கொளுத்தி வெகுவாகப் பசப்பி வரும் மாடைப்
பணத்தை எடு என உறவாடி
... காமத்தை மூட்டி, வெகு பக்குவமாக
இனிமையாகப் பேசி, வரவேண்டிய பொற்காசை எடுத்துத்தா என்று
உரிமையுடன் நட்புப் பேச்சுக்கள் பேசி,

ஆரக் கழுத்து முலை மார்பைக் குலுக்கி விழி ஆடக் குலத்து
மயில் கிளி போலப் பேசிச் சிரித்து மயிர் கோதிக் குலைத்து
முடி பேதைப் படுத்தி மயல் இடு மாதர்
... முத்து மாலை அணிந்த
கழுத்தையும், மார்பகங்களையும் குலுக்கி, கண்கள் அசைய, சிறப்புள்ள
மயில் போல உலவியும் கிளி போலப் பேசியும், சிரித்தும், தலை மயிரைக்
கோதிவிட்டும், அவிழ்த்தும் (எனக்குப்) பேதைமையை ஊட்டி
மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின்

பீறல் சலத்து வழி நாறப் படுத்தி எனை பீடைப் படுத்து மயல்
ஒழியாதோ
... கிழிபட்டதும், சிறு நீர் பிரியும் நாற்றமுடைய வழியையும்
வெளிக்காட்டி என்னைத் துன்பத்துக்கு ஆளாக்கும் காம மயக்கம்
என்னை விட்டு நீங்காதோ?

தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து
உதறு மயில் வீரா
... ஒளிமிக்க மாணிக்கத்தைத் தன்னுள்
கொண்டதும், பிரகாசம் உடையதும், சீறி ஒலிப்பதும், கோடுகளை
உடையதுமான ஆதிசேஷனைப் பிடித்து உதறி எறியும் மயில் மேல்
அமரும் வீரனே,

தேடித் துதித்த அடியார் சித்தம் உற்று அருளு(ம்) சீர் பொன்
பதத்த அரி மருகோனே
... நீ வீற்றிருக்கும் தலங்களைத் தேடி
உன்னைப் போற்றும் அடியார்களுடைய உள்ளத்தில் நின்று அருள்
புரியும், சிறப்பையும் அழகையும் கொண்ட திருவடியை உடையவனே,
திருமாலின் மருகனே,

நேசப் படுத்தி இமையோரைக் கெடுத்த முழு நீசற்கு
அனத்தம் உற விடும்வேலா
... அன்பே இல்லாமல் தேவர்களைக்
கெடுத்த முற்றிலும் இழிவான அசுரர்களுக்கு கேடு உண்டாகும்படியாக
செலுத்திய வேலாயுதனே,

நேசக் குறத்தி மயலோடு உற்பவித்த பொ(ன்)னி நீர் பொன்
புவிக்குள் மகிழ் பெருமாளே.
... அன்பு நிறைந்த குறப் பெண்ணாகிய
வள்ளி உன் மீது காதலுடன் பிறந்த இடமாகிய வள்ளி மலையில் மகிழ்ந்து
வீற்றிருப்பவனே, பொன்னி (காவேரி) ஆறு பாயும் அழகிய புவிக்குள்
(அதாவது, வயலூர், திரிசிராப்பள்ளி, சுவாமி மலை முதலிய தலங்களில்)
மகிழ்ச்சி கொள்ளும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.522  pg 3.523  pg 3.524  pg 3.525 
 WIKI_urai Song number: 1212 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1213 - Asaik koLuththi (common)

Asaik koLuththiveku vAkap pasappivaru
     mAdaip paNaththaiyede ...... nuRavAdi

Arak kazhuththumulai mArpaik kulukkivizhi
     yAdak kulaththumayil ...... kiLipOlap

pEsic chiriththumayir kOthik kulaiththumudi
     pEthaip paduththimaya ...... lidumAthar

peeRaR chalaththuvazhi nARap paduththiyenai
     peedaip paduththumaya ...... lozhiyAthO

thEsath thadaiththupira kAsith tholiththuvari
     sEdaR piduththuthaRu ...... mayilveerA

thEdith thuthiththAdi yArchith thamutRaruLu
     seerpoR pathaththAri ...... marukOnE

nEsap paduththiyimai yOraik keduththamuzhu
     neesaR kanaththamuRa ...... vidumvElA

nEsak kuRaththimaya lOduR paviththaponi
     neerpoR puvikkuLmakizh ...... perumALE.

......... Meaning .........

Asaik koLuththi vekuvAkap pasappi varum mAdaip paNaththai edu ena uRavAdi: Provoking passion, they speak sweetly with a finesse and take liberties through friendly persuasion in seeking golden coins due to them;

Arak kazhuththu mulai mArpaik kulukki vizhi Adak kulaththu mayil kiLi pOlap pEsic chiriththu mayir kOthik kulaiththu mudi pEthaip paduththi mayal idu mAthar: they shake their neck and breasts adorned with strings of pearl; they roll their eyes, pacing hither and thither with the gait of a famous peacock; they speak like the parrot; they giggle a lot, deliberately combing their hair, loosening it and tying it again in a knot; these whores make a fool of me leaving me in a state of delusion;

peeRal salaththu vazhi nARap paduththi enai peedaip paduththu mayal ozhiyAthO: exposing their torn and stinking passage of urination, they miserably drive me crazy with passion; will this illusion never leave me?

thEsam thadaiththu pirakAsiththu oliththu vari sEdan pidiththu uthaRu mayil veerA: The serpent AdhisEshan, holding a dazzling gem within itself, is bright, make a hissing noise and has stripes all over its body; that serpent is plucked and thrown apart by the powerful peacock which You mount, Oh Valorous One!

thEdith thuthiththa adiyAr chiththam utRu aruLu(m) seer pon pathaththa ari marukOnE: You prevail in the hearts of the devotees who praise You going in search of all places where You are seated, Oh Lord, and You bless them with Your hallowed and beautiful Lotus feet! You are the nephew of Lord VishNu!

nEsap paduththi imaiyOraik keduththa muzhu neesaRku anaththam uRa vidumvElA: The utterly debased demons harassed the celestials without an iota of love; and You destroyed those demons by wielding the spear, Oh Lord!

nEsak kuRaththi mayalOdu uRpaviththa po(n)ni neer pon puvikkuL makizh perumALE.: You are happily seated in VaLLimalai, the place where VaLLi was born with love for You; She is the dear damsel of the KuRavAs! You are delighted to be in all those places where the river KAvEri flows (such as VayalUr, ThirichirAppaLLi and SwAmimalai), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1213 Asaik koLuththi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]