திருப்புகழ் 1212 ஆசைகூர் பத்தன்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1212 AsaikUrbaththan  (common)
Thiruppugazh - 1212 AsaikUrbaththan - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனா தத்த தானனா தத்த
     தானனா தத்த ...... தனதான

......... பாடல் .........

ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
     மானபூ வைத்து ...... நடுவேயன்

பானநூ லிட்டு நாவிலே சித்ர
     மாகவே கட்டி ...... யொருஞான

வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
     மாசிலோர் புத்தி ...... யளிபாட

மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
     வாளபா தத்தி ...... லணிவேனோ

மூசுகா னத்து மீதுவாழ் முத்த
     மூரல்வே டிச்சி ...... தனபார

மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
     மூரிவே ழத்தின் ...... மயில்வாழ்வே

வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
     வேகவே தித்து ...... வருமாசூர்

வீழமோ திப்ப ராரைநா கத்து
     வீரவேல் தொட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆசைகூர் பத்தனேன் ... உன் மீது ஆசை மிகுந்த பக்தியை
உடைய நான்

மனோ பத்மமானபூ வைத்து ... மனம் எனப்படும் தாமரை மலரை
வைத்து,

நடுவேயன்பானநூலிட்டு ... இடையில் அன்பு என்னும் நாரைக்
கொண்டு,

நாவிலே சித்ரமாகவே கட்டி ... நாக்கு என்னும் இடத்திலே அழகான
ஒரு மாலையைத் தொடுத்து,

ஒருஞான வாசம்வீசி ... அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம்
என்னும் நறுமணத்தைத் தடவி,

ப்ரகாசியா நிற்ப ... அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும்,

மாசிலோர் புத்தி யளிபாட ... அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு
என்ற வண்டு மொய்த்துப் பாடவும்,

மாத்ருகா புஷ்ப மாலை ... மாத்ருகா மந்திர* மாலையான இந்தப்
பூமாலையை

கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ ... அழகிய பவளம்
போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

மூசுகானத்து மீதுவாழ் ... சிள்வண்டுகள் மொய்க்கும் காட்டிலே
வாழ்கின்ற,

முத்த மூரல்வே டிச்சி தனபார மூழ்கு ... முத்தை நிகர்த்த அழகிய
பற்களை உடைய, வேடர் குலப்பெண் வள்ளியின் மார்பகத்தில் முழுகி
அழுந்திக் கிடக்கும்,

நீபப்ரதாப மார்பத்த ... கடப்ப மாலையைச் சிறப்பாக அணியும்,
மார்பை உடைய ஐயனே,

மூரிவே ழத்தின் மயில்வாழ்வே ... வலிமையான ஐராவத யானை
வளர்த்த மயிலின் சாயலுள்ள தேவயானையின் மணவாளனே,

வீசுமீன் அப் பயோதிவாய் விட்டு வேக ... அலை வீசும், மீன்கள்
மிகுந்த, கடல் பேரொலியோடு வெந்து வற்ற,

வேதித்து வருமாசூர் வீழ ... தேவர்களை வருத்தித் துன்புறுத்தி
வந்த பெரும் சூரன் அழிபட்டு விழ,

மோதிப் பராரை நாகத்து ... தாக்குதல் செய்து, பருத்த
அடிப்பாகத்தை உடைய கிரெளஞ்சமலை மீது

வீரவேல் தொட்ட பெருமாளே. ... வீரம் பொருந்திய
வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.


* வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட
மாத்ருகா புஷ்ப மாலை. சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் வரும் இந்த
மந்திரம், முருகன் 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.518  pg 3.519  pg 3.520  pg 3.521  pg 3.522  pg 3.523 
 WIKI_urai Song number: 1211 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1212 - AsaikUr baththan (common)

AsaikUr baththanEn manO padhma
     mAna pU vaiththu ...... naduvE an

pAna nUlittu nAvilE chithra
     mAgavE katti ...... orunyAna

vAsam veesi prakAsiyA niRpa
     mAsilOr budhdhi ...... aLipAda

mAthrukA pushpa mAlai kOla pra
     vALa pAdhaththil ...... aNivEnO

mUsu kAnaththu meedhu vAzh muththa
     mUral vEdichchi ...... thanabAra

mUzhgu neepap prathApa mArbaththa
     mUri vEzhaththin ...... mayilvAzhvE

veesu meenap payOdhi vAy vittu
     vEga vEdhiththu ...... varumAsUr

veezha mOdhip parArai nAgaththu
     veera vEl thotta ...... perumALE.

......... Meaning .........

AsaikUr baththanEn: I have tremendous love and devotion for You.

manO padhma mAna pU vaiththu: I shall pick the lotus flower of my heart;

naduvE anpAna nUlittu: tying that flower with the thread of my love,

nAvilE chithramAgavE katti: I shall make a beautiful garland with my tongue,

orunyAna vAsam veesi: sprinkling it with the fragrance of unique Knowledge;

prakAsiyA niRpa: that garland is going to be sparkling,

mAsilOr budhdhi aLipAda: surrounded by the humming beetle called the spotless intellect;

mAthrukA pushpa mAlai: and that garland is called MAthruka Pushpa MAla*!

kOla pravALa pAdhaththil aNivEnO: When will I have the honour of offering that garland to Your lovely coral-like red feet?

mUsu kAnaththu meedhu vAzh: She lives in the forest where beetles abound;

muththa mUral vEdichchi: She belongs to the hunters' tribe, and her teeth are like beautiful pearls;

thanabAra mUzhgu neepap prathApa mArbaththa: You drown in that VaLLi's bosoms; and Your own chest is filled with famous kadappa flowers, Oh Lord!

mUri vEzhaththin mayilvAzhvE: You are also the consort of DEvayAnai, looking like a peahen, and who was reared by the strong elephant (AirAvatham)!

veesu meenap payOdhi vAy vittu vEga: The ocean, full of waves and fish, screamed loudly, boiled over and dried up;

vEdhiththu varumAsUr veezha: and SUran, who tortured the DEvAs, was knocked down dead

mOdhip parArai nAgaththu: when You began Your attack on the huge Mount Krouncha

veera vEl thotta perumALE.: by throwing Your mighty Spear, Oh Great One!


* In Sanskrit, there are 51 letters in the alphabet, beginning with 'a' and ending with 'ksha'.
Each limb of Murugan's form is attributed to one letter.
The garland of letters is known as MAthruka Pushpa MAla.
It occurs in the work, Subramanya ParAkramam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1212 AsaikUr baththan - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]