பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 511 மேக ஆரவாரம் என (சப்த மேகங்களின் பேரொலியோ இது என்னும்படி, அதிர்போர் - முழங்கும் போரில் (யாது தானர்) அரக்கர்கள் (எமபுரம் மீதேற) யம பட்டணம் போய்ச் சேரும்படி (இறக்கும்படி, வேல்கொண்டு அமர் புரிந்த இளையோனே! (கூசாது) அஞ்சாது (வேடன்) கண்ணப்பன் (உமிழ்தரு) வாயினின்றும் உமிழ்ந்த நீராடி) நீர் அபிஷேகத்தைப் பெற்று. (ஊன் உண் எ (ன்)னும் உரை) இந்த ஊன் சுவைப்புளது. இதை உண்டருள் என்னும் சொல்லைக் (கூறா) கூறி - சொல்லி, (மன்) நிரம்ப, (ஈய) கொடுக்க, (அவன்) அந்த வேடன் (நுகர்தரு) எச்சில் செய்து கொடுத்த (சேடம்) பாக்கி, (கோது ஆம்) குற்றம் ஆம் தகாது, எ(ன்)ணாமல் என்று பாவிக்காமல் அமுது (செய்) உண்டவரும், (வேத ஆகம முதல்) வேதங்களுக்கும் ஆக்மங்களுக்கும் ஆதிமுதல்வரும் ஆன சிவபிரான் (தரு பெற்ற (கோகோவே தலைவனே உலகங்களுக்கு நாதனே! குறமகள் - வள்ளியின் பெருமாளே! (ஞானபோதம் அருள்செய நினைவாயே) 1211. ஆசைகூர் (உன்மீது ஆசைமிக்க) பத்தனேன் - பக்தியுள்ள நான் (மனோபத்மமான) மனம் எனப்படும் தாமரை மலரைவைத்து நடுவே ஞானப் பூமாலை ஒன்றைக்கட்டி உனது பவளம் ஆனைய திருவடியிற் சாத்தும் பாக்கியத்தைப் பெறுவேனோ! என்பது இப்பாடலின் முதல் நான்கடியின் கருத்து மனம்" என்பது எண்ணங்களைக் குறிக்கும். "நூறாயிர மணமுடை மாபாவிகள்" "முப்பது கோடி மனத்தியர்" திருப்புகழ் 583, 1190 எனவருவன காண்க. நாவிலே கட்டி" என்றதனால் இது "ஞானப் பாமாலையாம் பூமாலை" எனக் கொள்ளவேண்டும். பத்தி வலையிற் படுவோன் ஈசன் ஆதலினால் ஆசை கூர் பத்தன்' என்றார், ஈசன் மனத்தகத்தான்' ஆதலின்ாலும் பூவினுட் சிறந்தது பொறிவாழ் பூவே என்றபடி பூவினுள் பத்மம் - தாமரையே சிறந்தது ஆதலினாலும் மனோ பத்மம்' என்னும் பூவை வைத்து இம்மாலையைக் கட்டுகின்றேன் என்றார். ஒடுங்கி ஒடுங்கி உணர்ந்தங் கிருக்கில். மடங்கி மடங்கிடும் மன்னுயிருள்ளே, நடங்கொண்ட கூத்தனும் நாடுகின்றானே' எனத் திரு மந்திரமும் (666) சும்மா இருக்கின்ற திறம் அரிது' எனத் தாயுமானாரும் கூறுதலால், மனம் கட்டப்பட்டா லொழிய இறை (தொடர்ச்சி 512ஆம் பக்கம் பார்க்க)