திருப்புகழ் 1211 ஆசார வீனன்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1211 AchAraveenan  (common)
Thiruppugazh - 1211 AchAraveenan - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தான தனதன தானான தான தனதன
     தானான தான தனதன ...... தனதான

......... பாடல் .........

ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
     னாகாத நீச னநுசிதன் ...... விபரீதன்

ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
     னாகாச நீர்ம ணனல்வளி ...... யுருமாறி

மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
     வாயாத பாவி யிவனென ...... நினையாமல்

மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
     மாஞான போத மருள்செய ...... நினைவாயே

வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
     வேதாள ராசி பசிகெட ...... அறைகூறி

மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர
     மீதேற வேல்கொ டமர்செயு ...... மிளையோனே

கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
     கூறாம னீய அவனுகர் ...... தருசேடங்

கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
     கோலோக நாத குறமகள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆசார வீனன் அறிவிலி ... ஒழுக்கக் குறைவு உடையவன்,
அறிவில்லாதவன்,

கோப அபராதி யவகுணன் ... கோபம் காரணமாகக் குற்றங்கள்
பல செய்பவன், கெட்ட குணத்தை உடையவன்,

ஆகாத நீசன் அநுசிதன் ... யாருக்கும் பயனாகாத இழிந்த
குணத்தவன், தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன்,

விபரீதன் ... மாறுபாடான புத்தியை உடையவன்,

ஆசாவிசார வெகுவித மோக ஆசரீத பரவசன் ... (மண், பெண்,
பொன் என்ற) மூவாசைகளிலே எண்ணத்தை வைத்து, பலவிதமான
ஆசைச் செயல்களைச் செய்து தன்வசம் இழந்தவன்,

ஆகாச நீர்மண் அனல்வளி யுருமாறி ... ஆகாயம், நீர், மண், தீ,
காற்று என்ற பஞ்சபூதச் சேர்க்கையால் வெவ்வேறு பிறவிகளில் பல
உடல்களை எடுத்து,

மாசான நாலெண் வகைதனை ... குற்றங்களுடன் கலந்த
முப்பத்திரண்டு* தத்துவங்களைக் கொண்ட

நீநானெனாத அறிவுளம் வாயாத பாவி ... இந்த உடல்களை நீ
என்பதும் நான் என்பதுமான பிரிவைக் காணாத, ஞான உள்ளம்
வாய்க்கப் பெறாத பாவி,

இவனெனநினையாமல் ... இத்தனையும் இவன் என்று நினைத்து
என்னை நீ ஒதுக்கி விடாமல்,

மாதாபிதாவின் அருள் நல மாறா மகாரிலெனையினி ... தாய்
தந்தையரின் அருள் நிறைந்த உபகாரச் செயல்கள் மாறாத குழந்தைகள்
போல, உன் குழந்தையாகிய என்மீது இனிமேலாயினும்

மாஞான போதம் அருள்செய நினைவாயே ... சிறந்த
ஞானோபதேசத்தை அருள்வதற்கு உன் திருவுள்ளத்தில் நினைப்பாயாக.

வீசால வேலை சுவறிட ... அகன்ற சமுத்திரமானது வற்றிப் போகவும்,

மாசூரர் மார்பு தொளைபட ... பெரிய சூரன் முதலியோரது மார்புகள்
தொளைபடவும்,

வேதாள ராசி பசிகெட ... வேதாள கணங்களின் பசி (சூர
சம்ஹாரத்தால்) தீர்ந்திடவும்,

அறைகூறி ... போருக்கு வாருங்கள் என்று அசுரர்களைக் கூவி
அழைத்து,

மேக ஆரவார மெனஅதிர் போர் ... மேகங்களின் பெரும்
ஆரவாரமான இடியோசை போல முழங்கும் போரில்,

யாது தானர்** எமபுர மீதேற ... அரக்கர்கள் யம பட்டணம் போய்ச்
சேரும்படியாக,

வேல்கொடு அமர்செயும் இளையோனே ... வேலைக் கொண்டு
போர் செய்த இளையோனே,

கூசாது வேடன் உமிழ்தரு நீராடி ... கொஞ்சமும் தயங்காது
வேடன் கண்ணப்பன் வாயினின்று உமிழ்ந்த நீர் அபிஷேகத்தைப்
பெற்றுக்கொண்டு,

ஊனு ணெனுமுரை கூறா ... இந்த மாமிசம் சுவையானது, இதை
உண்டருள்க என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டு,

மன் ஈய அவனுகர் தருசேடம் ... நிரம்பவும் அவன் தருவதை, அந்த
வேடன் எச்சில் செய்து தந்த மீதம்

கோதாம் எனாமல் அமுதுசெய் ... குற்றமுள்ளது என்று பாவிக்காமல்
அமுதாக எண்ணி உண்டு அருளியவரும்,

வேத ஆகமாதி முதல்தரு கோ ... வேதங்களுக்கும் ஆகமங்களுங்கும்
ஆதி முதல்வர் ஆனவருமான சிவபிரான் பெற்றெடுத்த அரசனே,

லோக நாத குறமகள் பெருமாளே. ... இந்த உலகத்துக்கெல்லாம்
நாதனே, குறமகள் வள்ளியின் பெருமாளே.


* 32 தத்துவங்கள் பின்வருமாறு:

ஆத்ம தத்துவம் 20, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.


** 'யாது தானர்' என்றால் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள்
தானவருமாகிய அரக்கர்கள். இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.516  pg 3.517  pg 3.518  pg 3.519 
 WIKI_urai Song number: 1210 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1211 - AchAra veenan (common)

AachAra veena naRivili kOpApa rAthi yavakuNa
     nAkAtha neesa nanusithan ...... vipareethan

AachAvi chAra vekuvitha mOkAsa reetha paravasa
     nAkAsa neerma NanalvaLi ...... yurumARi

mAsAna nAleN vakaithanai neenAne nAtha aRivuLam
     vAyAtha pAvi yivanena ...... ninaiyAmal

mAthApi thAvi naruNala mARAma kAri lenaiyini
     mAnjAna pOtha maruLseya ...... ninaivAyE

veesAla vElai suvaRida mAchUrar mArpu thoLaipada
     vEthALa rAsi pasikeda ...... aRaikURi

mEkAra vAra mena athir pOryAthu thAna remapura
     meethERa vElko damarseyu ...... miLaiyOnE

kUsAthu vEda numizhtharu neerAdi yUnu Nenumurai
     kURAma neeya avanukar ...... tharusEdang

kOthAme nAma lamuthusey vEthAka mAthi muthaltharu
     kOlOka nAtha kuRamakaL ...... perumALE.

......... Meaning .........

AchAra veenan aRivili: I am lacking in discipline; I am stupid;

kOpAparAthi yavakuNan: I commit many crimes due to my foul temper; I am very vicious;

AakAtha neesa nanusithan vipareethan: I have a dirty mind and I indulge in forbidden acts; and I am very controversial.

AachAvi cAra vekuvitha mOka Aasareetha paravasan: Thinking only about the three desires (namely, acquisition of property, women and gold), I have committed many a lustful act without self-control.

AakAsa neerma NanalvaLi yurumARi: By the various permutations and combinations of the five elements, namely the sky, water, earth, fire and air,

mAsAna nAleN vakaithanai: I have taken birth in several bodies with thirty-two types* of contaminated tenets;

neenAne nAtha aRivuLam vAyAtha pAvi: I have been a sinner incapable of realising that there is no distinction between You and me.

yivanena ninaiyAmal: Please do not shun me because of all these bad qualities in me.

mAthApi thAvi naruNala mARAma kAril: Like the steadfast loving acts of the parents for their children,

enaiyini mAnjAna pOtha maruLseya ninaivAyE: kindly love me henceforth and think about preaching to me so that I can realise the great and true knowledge.

veesAla vElai suvaRida: The wide ocean completely dried up;

mAchUrar mArpu thoLaipada: the chests of the huge demons were pierced;

vEthALa rAsi pasikeda: and the hunger of the devils was satiated;

aRaikURi mEkAra vAra mena athir pOr: when You called the demons, roaring like the thunder, challenging them to come to the battlefield,

yAthu thAna remapura meethERa: and sent away the YAdhus and DhanavAs** to the land of Yaman (God of Death)

vElko damarseyu miLaiyOnE: battling with Your Spear, Oh Young One!

kUsAthu vEda numizhtharu neerAdi: When the hunter (Kannappan) showered his saliva on the 'siva-lingam'***, He bathed in it unhesitatingly;

yUnu Nenumurai kURAma neeya avanukar tharusEdang kOthAme nAmal: when partly-eaten meat was offered by him saying that it was tasty meat, He did not reject it as dirty leftover;

amuthusey vEthAka mAthi muthaltharu kO: instead, He accepted that food with relish as if it were nectar; He is the primordial Lord SivA who is above all scriptures; and You are the Leader delivered to us by Him!

lOka nAtha kuRamakaL perumALE.: You govern the entire universe! You are the consort of VaLLi, the damsel of the KuRavAs, Oh Great One!


* 32 tenets are:

Athma Thathwam (tenets of the soul) - 20, Vidya Thathwam (tenets of learning) - 7, and SivA Thathwam (tenets of SivA)- 5.


** YAdhus are the sons of Dhithi and Dhanavas are the sons of Dhanu, all of whom were the forefathers of the demons.


*** 'nAdha bhindu' ('vindhu') is explained here:

'nAdha' is the principle of sound. It is also known as 'nAma' or name. From this 'nAdha' or name, came out 'bhindu' or 'rUba' which is the form. These name and form are 'nAma' and 'rUba' or 'nAdha' and 'bhindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'nAdha' is represented by a line or a pillar and the 'bhindu' by a disc or elliptic base. It is this 'nAdha' or vibration that is known as 'lingA', and 'bhindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bhindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rUbArUbam' ('rUba - arUbam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva SidhdhAndham).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1211 AchAra veenan - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]