திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1192 முருகு லாவிய மைப்பா (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1192 murugulAviyamaippA (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தானன தத்தான தானன தனன தானன தத்தான தானன தனன தானன தத்தான தானன ...... தனதான ......... பாடல் ......... முருகு லாவிய மைப்பாவு வார்குழல் முளரி வாய்நெகிழ் வித்தார வேல்விழி முடுகு வோர்குலை வித்தான கோடெனு ...... முலையாலே முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல் முடுகு வோரென எய்த்தோடி யாகமு மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு ...... முயல்வேகொண் டுருகு வார்சில சிற்றாம னோலய முயிரு மாகமு மொத்தாசை யோடுள முருகி தீமெழு கிட்டான தோவென ...... வுரையாநண் புலக வாவொழி வித்தார்ம னோலய முணர்வு நீடிய பொற்பாத சேவடி யுலவு நீயெனை வைத்தாள வேயருள் ...... தருவாயே குருகு லாவிய நற்றாழி சூழ்நகர் குமர னேமுனை வெற்பார்ப ராபரை குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் ...... வடிவேலா குறவர் சீர்மக ளைத்தேடி வாடிய குழையு நீள்கர வைத்தோடி யேயவர் குடியி லேமயி லைக்கோடு சோதிய ...... வுரவோனே மருகு மாமது ரைக்கூடல் மால்வரை வளைவு ளாகிய நக்கீர ரோதிய வளகை சேர்தமி ழுக்காக நீடிய ...... கரவோனே மதிய மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீநொடி யற்றான போதினில் மயிலை நீடுல கைச்சூழ வேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முருகு உலாவிய மைப் பாவு(ம்) வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி முடுகுவோர் குலை வித்தான கோடு எனு(ம்) முலையாலே ... நறுமணம் வீசி உலவும் மை தீட்டிய நீண்ட கூந்தலின் மீதும், தாமரை போன்ற வாயின் மீதும், அசைகின்ற விரிந்த வேல் போன்ற கண்ணின் மீதும், விரைந்து செல்வோர்களின் மனத்தைக் குலைப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் மலை போன்ற மார்பகத்தின் மீதும், முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என எய்த்து ஓடி ஆகமும் மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு உருகுவார் சில சிற்றா(ர்) ... ஒழுக்கம் சிதறுண்டு கெட, கறுத்து (நீர்) நிறைந்துள்ள பெரிய கடலில் (பயணம்) விரைந்து செல்வார் போல் இளைப்புடன் ஓடி, உடலும் பேச்சும் மாறுதல் உறும்படி பித்து ஏறினார் என்று சொல்லும்படி முயற்சிகளை மேற்கொண்டு, அந்த உலக நெறியிலே சில அற்ப ஆன்மாக்கள் உள்ளம் உருகுபவர்கள். மனோலயம் உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உ(ள்)ளம் உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு ... மன ஒடுக்கம் உற்று உயிரும் உடலும் ஒரு வழிப்பட்டு, பக்தியுடன் மனம் உருகி தீயில் இடப்பட்ட மெழுகோ என்று சொல்லும்படி அன்பு மொழிகளைக் கொண்டு உன்னைப் புகழ்ந்துரைத்து, உலக அவா ஒழிவித்தார் மனோலயம் உணர்வு நீடிய பொன் பாத சேவடி உலவு நீ எ(ன்)னை வைத்து ஆளவே அருள் தருவாயே ... இவ்வுலகத்தில் மண், பெண், பொன் என்ற மூவாசைகளையும் நீக்கினவர்களாய மனம் ஒடுங்கிய ஞான உணர்ச்சியில் உனது அழகிய பாதசேவை தருவதான திருவடிகளுடன் உலவுகின்ற நீ என்னை உன் மனத்தில் வைத்து அருள் புரிவாயாக. குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை குழக பூசுரர் மெய்க் காணும் வீரர் தம் வடிவேலா ... நீர்ப்பறவைகள் உலவுகின்ற அழகிய கடல் சூழ்ந்துள்ள திருச்செந்தூரில் விளங்கும் குமரனே, தலைமை பெற்ற மலையாகிய இமயத்தில் பிறந்த பரதேவதையான பார்வதியின் குழந்தையே, மறையோர்களுக்கு உரியவனே, மெய்ப்பொருளைக் காணும் வடிவேலனே, குறவர் சீர் மகளைத் தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர் குடியிலே மயிலைக் கோடு சோதிய உரவோனே ... வேடர்களுடைய அழகிய மகளைத் தேடி வாடிக் குழைந்தவனே, பெரிய களவு எண்ணத்துடன் ஓடிச் சென்று வேடர்கள் இருப்பிடத்தில் இருந்த மயில் போன்ற வள்ளியைக் கொண்டு சென்ற ஜோதி சொரூபமான திண்ணியனே, மருகு மா மதுரைக் கூடல் மால் வரை வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே ... வாழை, மாமரம் இவை நிரம்பிய கூடல் எனப்படும் மதுரைக்கு அருகில் உள்ள பெருமை வாய்ந்த திருப்பரங்குன்றம் என்னும் மலையில் வட்டமான குகையில் இருந்த நக்கீரர்* எனும் புலவர் பாடிய வளமை வாய்ந்த தமிழைக் (திருமுருகாற்றுப்படையைக்) கேட்கும் பொருட்டு நெடு நாள் மறைந்திருந்து காத்திருந்தவனே, மதிய(ம்) மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில் மயிலை நீடு உலகைச் சூழ ஏவிய பெருமாளே. ... சந்திரனைத் தரித்துள்ள சடையினர், விரிந்த சடையினர் ஆகிய சிவபெருமான் மகிழும்படி நீ ஒரு நொடிப் பொழுதுக்கும் குறைந்த நேரத்தில் உனது மயில் வாகனத்தை பெரிய உலகைச் சூழ்ந்து வரும்படி தூண்டிச் செலுத்திய பெருமாளே. |
* முருகனைப் பாடுவதில்லை என நக்கீரர் வைராக்கியம் கொண்டிருந்தார். அவரைக் குகையில் சிறைப்படுத்தித் திருமுருகாற்றுப்படையைப் பாட வைத்தார் முருக வேள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.476 pg 3.477 pg 3.478 pg 3.479 pg 3.480 pg 3.481 WIKI_urai Song number: 1191 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1192 - murugu lAviya maippA (common) muruku lAviya maippAvu vArkuzhal muLari vAynekizh viththAra vElvizhi muduku vOrkulai viththAna kOdenu ...... mulaiyAlE muRaimai sErkeda maiththArvu vArkadal muduku vOrena eyththOdi yAkamu mozhiyum vERidu piththERi nArenu ...... muyalvEkoN duruku vArsila sitRAma nOlaya muyiru mAkamu moththAsai yOduLa muruki theemezhu kittAna thOvena ...... vuraiyAnaN pulaka vAvozhi viththArma nOlaya muNarvu neediya poRpAtha sEvadi yulavu neeyenai vaiththALa vEyaruL ...... tharuvAyE kuruku lAviya natRAzhi cUzhnakar kumara nEmunai veRpArpa rAparai kuzhaka pUsurar meykkANum veerartham ...... vadivElA kuRavar seermaka LaiththEdi vAdiya kuzhaiyu neeLkara vaiththOdi yEyavar kudiyi lEmayi laikkOdu sOthiya ...... vuravOnE maruku mAmathu raikkUdal mAlvarai vaLaivu LAkiya nakkeera rOthiya vaLakai sErthami zhukkAka neediya ...... karavOnE mathiya mEviya sutRAtha vENiyar makizha neenodi yatRAna pOthinil mayilai needula kaiccUzha vEviya ...... perumALE. ......... Meaning ......... muruku ulAviya maip pAvu(m) vAr kuzhal muLari vAy nekizh viththAra vEl vizhi mudukuvOr kulai viththAna kOdu enu(m) mulaiyAlE: On their long and fragrant hair, where they have applied black pigment, on their lotus-like mouth, on their eye that looks like the broad and moving spear, on their mountain-like bosom that is the root-cause of disturbing the mind of people passing by in a hurry, muRaimai sEr keda maiththu Arvu vAr kadal mudukuvOr ena eyththu Odi Akamum mozhiyum vERidu piththu ERinAr enum muyalvE koNdu urukuvAr sila sitRA(r): letting their morals go astray, people run about losing breath like those hastening to travel on the dark and wide sea; their body and speech go through so much of transformation that they are called crazy; some insignificant souls make such endeavours and in that process melt their heart; manOlayam uyirum Akamum oththu AsaiyOdu u(L)Lam uruki thee mezhuku ittAnathO ena uraiyA naNpu: again, there are some other people who control their mind and pursue a path where their body and soul merge together; they choose such loving words of devotion in praise of You that their heart appears to have melted like the wax in the fire; ulaka avA ozhiviththAr manOlayam uNarvu neediya pon pAtha sEvadi ulavu nee e(n)nai vaiththu ALavE aruL tharuvAyE: these people have given up the three worldly lusts namely, earth, woman and gold; in their True realisation arising from the control of mind, You grant them the vision of Your hallowed feet, Oh Lord! Kindly keep me in mind and bless me as well. kuruku ulAviya nal thAzhi cUzh nakar kumaranE munai veRpu Ar parAparai kuzhaka pUsurar meyk kANum veerar tham vadivElA: Many water-birds roam about in the beautiful beach of ThiruchchendhUr, and You reside there, Oh KumarA! She was born in Mount HimAlayAs, the world's leading mountain; and You are the child of that Supreme Mother PArvathi! You belong to those chaste people who chant the VEdAs and realise the truth! kuRavar seer makaLaith thEdi vAdiya kuzhaiyum neeL kara vaiththu OdiyE avar kudiyilE mayilaik kOdu sOthiya uravOnE: You went in search of, pined away and melted for the beautiful damsel of the hunters; You went there running, with an ulterior motive of making a big steal, and took away peacock-like VaLLi who resided in the hunters' place, Oh Embodiment of Effulgence! maruku mA mathuraik kUdal mAl varai vaLaivuL Akiya nakkeerar Othiya vaLakai sEr thamizhukkAka neediya karavOnE: Near the great city of Madhurai, famous for its plantain and mango trees, in a round-shaped cave of the renowned town ThirupparangkundRam, there was this great poet Nakkeerar*; to listen to his rich tamil poetry (ThirumurugAtRuppadai), You waited for a long time in hiding, Oh Lord! mathiya(m) mEviya sutRAtha vENiyar makizha nee nodiyatRAna pOthinil mayilai needu ulakais cUzha Eviya perumALE.: He wears the moon on His wide-spread and matted hair; that Lord SivA was elated when You went around the whole world within a fraction of a second mounting and driving Your vehicle, namely the peacock, Oh Great One! |
* Nakkeerar was determined not to sing songs on Lord Murugan. He was imprisoned in a cave in ThirupparangkundRam, and ultimately Murugan made him compose the famous ThirumurugAtRuppadai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |