பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 473 மதியம் மேவிய வேணியர் - சந்திரனைத் தரித்துள்ள சடையினர், சுற்றாத விரிந்த சடையினர் . (மகிழ) மகிழும்படி நீ (நொடியற்றான போதினில்) ஒரு நொடிப் பொழுதுக்கும் குறைந்த நேரத்தில் ஒரு நொடிப் பொழுது ஆகும் முன்னரே - உனது மயில் வாகனத்தை பெரிய இவ்வுலகைச் சூழ்ந்து வரும் படித் துண்டிச் செலுத்தின பெருமாளே! (ஆளவே அருள் தருவாயே) 1192. கொங்கையின் மேலே (கலிங்கம்) ஆடை (ஒன்றிட) பொருந்த (முதல் வானிற் பிறந்த மின் பிறை) வானில் - ஆகாயத்தில் - (முதல் பிறந்த) - அப்போதுதான் தோன்றிய (மின்) ஒளி வீசும் பிறைச்சந்திரன் போன்ற (நுதல் மேல்) நெற்றியின் மேல் - முத்து - முத்துப்போல வேர்வை அரும்ப தோன்ற புந்தியில் புத்தியில் - (இதம் ஆர)-இன்பம் நிரம்ப (முகம் நேசித்து இலங்கவும்) முகத்தில் நேசபாவம் விளங்கி, (பல வினை மூசி) பல வஞ்சக எண்ணங்கள் நிறைந்து, திரைபுரளும் வளப்பமுள்ள கடலின் (முரண் ஒசைக்கு வலிய ஓசைக்கு (அமைந்தவன்) (பொருந்தினவனான - தக்கவனான - மன்மதனுடைய) கடலைத் தனக்கு ஏற்ற முரச வாத்தியமாகக் கொண்டவனாகிய மன்மதனுடைய சரம் என (மலர்ப்) பானங்கள் என்று சொல்லும்படி - கெடாத - வாடாத மலர் போலச் சிவந்ததாயுள்ள செவ்விய கண்ணில் மயக்கம் மிகக் கொள்வதற்கு இருண்ட அஞ்சனம், கரிய மையைத் தவறாமல் அணிந்து, வலிய (கயம்)-என நாடி- யானைபோல மதத்துடன், தேடி வருகின்ற பெண்கள்பால் இரக்கம் வைத்து, மனமும் காம மயக்கம் பெருகி நிற்க அதனால் (நின் செயல் மருவாமல்) உனக்குச் செய்யவேண்டிய தொண்டுத் தொழில்களில் ஈடுபடாமல் கலங்குகின்ற என் (வஞ்சகம்) மோச நிலை என்னைவிட்டு நீங்காதா? கெடாத நல்ல (தவங்கள் நின்று) தவநிலைகளில் இருந்து உன்னை நிலைத்த புத்தியுடன் புகழ்ந்துகொண்டிருக்கும் (அடியாருள் துலங்கி நின்று அடியார்களின் உள்ளத்தே (துலங்கி) விளக்கத் துடன் இருந்து அவர்களுக்குத் (துணை அருள் வேளே) துணை செய்கின்ற செவ்வேளே!