திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1191 முத்தம் உலாவு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1191 muththamulAvu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன ...... தனதான ......... பாடல் ......... முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள் முத்தமி டாம னுருக்கிக ...... ளிளைஞோர்பால் முட்டவு லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்திய ...... ரநுராகத் தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறு மாற கமெத்திக ...... ளளவேநான் தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோத வுமுத்தமிழ் தத்துவ ஞான மெனக்கருள் ...... புரிவாயே மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி மைத்துன னாகி யவிக்ரமன் ...... மருகோனே வற்றிட வாரி திமுற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்தரு ...... ளிளையோனே சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை சிக்கென வேத ழுவிப்புணர் ...... மணவாளா செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு சித்தவி சாக வியற்சுரர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் ... முத்து மாலை உலவுகின்ற மார்பினை உடையவர், மன்மதனின் கட்டளைகளை நடத்துபவர்கள், முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர் பால் முட்ட உலாவி மருட்டிகள் ... முத்தம் தந்து மனத்தை உருக்குபவர்கள், இளைஞோர்கள் இடத்தில் நன்றாகக் கலந்து (அவர்களை) மயங்கச் செய்பவர்கள், நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் ... நீண்ட இலையை ஒத்த வேலை நிகர்க்கும் கண்களை உடையவர்கள், பல கோடிக் கணக்கான எண்ணங்களை உடையவர்கள், அநுராகத் தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் ... காமப் பற்றை விளைக்கும் கிளி போன்றவர்கள், ஆசைகளைக் காட்டுபவர்கள், பச்சைக் கற்பூரம் அளாவிய தோள்களோடு மினுக்குபவர்கள், தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் தட்டு அழியாது ... தப்பான வழியில் செல்லும் மனத்துடன் வஞ்சிக்கும் வேசிகள் இடத்திலே நான் நிலை குலையாது, திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள் புரிவாயே ... உனது திருப்புகழைக் கற்பதற்கும் எப்போதும் ஓதுவதற்கும் (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழ் தத்துவ ஞானத்தை எனக்கு அருள்வாயாக. மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே ... கும்பத் தலத்தை உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன* முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே, வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்பு உற வற்பு உறு வேலை விடுத்து அருள் இளையோனே ... கடல் வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள் பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி அருளிய இளையோனே, சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்து இடை சிக்கெனவே தழுவிப் புணர் மணவாளா ... அழகிய குறப்பெண் வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத் தழுவிச் சேர்ந்த மணவாளனே, செச்சை உலாவு பதத்தின மெய்த் தவர் வாழ்வு பெறத் தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே. ... வெட்சி மலர் சூழும் பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப் பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள தேவர்களின் பெருமாளே. |
* ஒரு சமயம் திருமாலும், அவரது அம்சமான உபேந்திரரும், லக்ஷ்மியும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்வ முநிவரைக் கவனிக்காததால், முநிவர் கடுங்கோபம் அடைந்து அவர்களை முறையே சிவ முநிவராகவும், வேடர் மன்னனாகவும், மானாகவும் பிறக்க சபித்து விடுகிறார். அடுத்த பிறப்பில் சிவமுநிவரான திருமாலுக்கும், மானாகிய லக்ஷ்மிக்கும் பிறக்கும் வள்ளியை உபேந்திரனான வேடர் மன்னன் நம்பிராஜன் கண்டெடுத்து வளர்க்கிறான். வள்ளியின் வளர்ப்புத் தந்தை உபேந்திரன் திருமாலின் தம்பியானதால் லக்ஷ்மிக்கு மைத்துனன் முறை ஆகிறது. எனவே வள்ளியை மணந்த முருகன் லக்ஷ்மியின் மைத்துனனின் மருகன் என்று இங்கு குறிப்பிடுகிறார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.474 pg 3.475 pg 3.476 pg 3.477 WIKI_urai Song number: 1190 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1191 - muththam ulAvu (common) muththamu lAvu thanaththiyar siththasa nANai seluththikaL muththami dAma nurukkika ...... LiLainjOrpAl muttavu lAvi maruttikaL nettilai vElin vizhicchiyar muppathu kOdi manaththiya ...... ranurAkath thaththaika LAsai vithaththiyar kaRpura thOLin minukkikaL thappuRu mARa kameththika ...... LaLavEnAn thattazhi yAthu thiruppukazh kaRkavu mOtha vumuththamizh thaththuva njAna menakkaruL ...... purivAyE maththaka yAnai yuriththavar petRaku mAra ilatchumi maiththuna nAki yavikraman ...... marukOnE vatRida vAri thimutRiya vetRikoL cUrar pathaippuRa vaRpuRu vElai viduththaru ...... LiLaiyOnE siththira mAna kuRaththiyai yutRoru pOthu punaththidai sikkena vEtha zhuvippuNar ...... maNavALA secchaiyu lAvu pathaththina meyththavar vAzhvu peRaththaru siththavi sAka viyaRcurar ...... perumALE. ......... Meaning ......... muththam ulAvu thanaththiyar siththasan ANai seluththikaL: These women display pearl necklaces upon their bosom; they carry out the errands of Manmathan (God of Love); muththam idA mana urukkikaL iLainjOr pAl mutta ulAvi maruttikaL: they melt their suitors' hearts merely by kissing; they mingle very well with young men and keep them in a trance; nettu ilai vElin vizhicchiyar muppathu kOdi manaththiyar: their eyes look like long leaves and spears; they are capable of having millions of thoughts in their mind; anurAkath thaththaikaL Asai vithaththiyar kaRpura thOLin minukkikaL: they are like parrots with the ability to arouse passion; they entice in many ways; they show of their shoulders smeared with camphorous paste; thappuRum ARu akam eththikaL aLavE nAn thattu azhiyAthu: these are the whores who lead one to the sinful path with a treacherous mind; I do not wish to lose my balance because of these whores; thiruppukazh kaRkavum Othavum muththamizh thaththuva njAnam enakku aruL purivAyE: instead, kindly bless me with the true principle of knowledge based on the three aspects of Tamil (namely, literature, music and drama) so that I could learn about Your glory and chant it all the time! maththaka yAnai uriththavar petRa kumAra ilatchumi maiththunanAkiya vikraman marukOnE: You are the son of Lord SivA, who peeled of the hide from the elephant-demon (KayAsuran) with a huge pot-like forehead; You are the nephew of Lord VishNu (who came as hunter Upendran) related to Goddess Lakshmi as a brother-in-law*! vatRida vArithi mutRiya vetRi koL cUrar pathaippu uRa vaRpu uRu vElai viduththu aruL iLaiyOnE: Making the seas dry up, and scaring the demons who bragged about their earlier victories, You wielded the powerful spear graciously, Oh Young Lord! siththiramAna kuRaththiyai utRu oru pOthu punaththu idai sikkenavE thazhuvip puNar maNavALA: You went up to VaLLi, the beautiful damsel of the KuRavAs, and once, in the millet field, You hugged her tightly as her Consort! secchai ulAvu pathaththina meyth thavar vAzhvu peRath tharu siththa visAka iyal surar perumALE.: Your hallowed feet are wrapped with vetchi flowers, Oh Lord! You are the Lord that blesses true saints with immortal and blissful life, Oh VishAkA; You are the Lord of the worthy celestials, Oh Great One! |
* Once, Lord VishNu, His brother UpEndran and Lakshmi were in deep conversation among themselves ignoring the presence of Sage KaNvar who visited them. The Sage became wild with anger and cursed them to take birth respectively as a Saivite sage, hunter-king and a deer. In the next birth, the Saivite sage unites with the deer, siring their daughter, VaLLi who was reared by NambirAjan, the hunter-king. As her foster father is UpEndran, the brother of VishNu, he becomes the brother-in-law of Lakshmi. As Murugan marries VaLLi, the poet refers to Him as "Lakshmi's brother-in-law's son-in-law". |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |