திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1190 மின்னினில் நடுக்கம் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1190 minninilnadukkam (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த ...... தனதான ......... பாடல் ......... மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த வெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த வின்னுதலி லிட்ட பொட்டில் ...... விலைமாதர் கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த கண்ணினிணை யிற்சி வத்த ...... கனிவாயிற் கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த கன்மவச மெப்ப டிக்கு ...... மறவேனே அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி யம்மையட விப்பு னத்தில் ...... விளையாடும் அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில் அன்னியஅ ரக்க ரத்த ...... னையுமாளப் பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட புன்மையர்பு ரத்ர யத்தர் ...... பொடியாகப் பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற புண்ணியவொ ருத்தி பெற்ற ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மின்னினில் நடுக்கம் உற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் ... மின்னலைப் போல் நடுங்குகின்ற மெலிந்த இடையிலும், முத்துப் போன்ற வெண்மை நிறம் கொண்ட பற்களிலும், வட்டம் ஒத்து அழகு ஆர விம்மி இளகிக் கதித்த கொம்மை முலையில் ... வட்ட வடிவு கொண்டு அழகு நிரம்பி, பூரித்து, நெகிழ்ந்து, எழுந்து, திரண்ட மார்பகங்களிலும், குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் ... வளைவு கொண்ட, வில்லைப் போன்ற நெற்றியில் அணிந்துள்ள பொட்டிலும், விலைமாதர்களுடைய கரும்பு போல் இனிக்கும் பேச்சிலும், சிறப்புற்ற அன்னத்தைப் போன்ற நடையிலும், கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் கண் அழிவு வைத்த புத்தி ... கறுப்பு நிறம் கொண்ட இரு கண்களிலும், சிவந்த (கொவ்வைக்) கனி போன்ற வாயிலும், தனித்தனி தோய்ந்து வியப்புற்றுக் கிடந்த என் புத்தி மாறி, ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே ... (உனது) ஆறு முகங்களையும் நினைக்குமாறு செய்த புண்ணியப் பயனை எந்தக் காரணத்தையும் கொண்டு மறக்க முடியுமா? அன்ன நடையைப் பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவிப் புனத்தில் விளையாடும் அன்னை ... அன்னத்தின் நடையைப் பழிக்க வல்ல மயிலைப் போன்றவள், மலையில் வளர்ந்த குறமங்கையாகிய தேவி, காட்டிலும் தினைப் புனத்திலும் விளையாடிய தாய் ஆகிய வள்ளி நாயகி, இறுகப் பிணித்த பன்னிரு திருப் புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையு(ம்) மாள பொன்னுலகினைப் புரக்கும் மன்ன ... அழுத்தி அணைத்த பன்னிரண்டு திருப்புயங்களால் அயலாராய் மாறுபட்டிருந்த அசுரர்கள் அனைவர்களும் இறக்கும்படிச் செய்து, (தேவர்களின்) பொன்னுலகத்தைக்காத்தளித்த அரசே, நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக ... நல்ல விரத அனுஷ்டானங்களைக் கைவிட்ட* இழி குணத்தோராய் முப்புரங்களில் வாழ்ந்திருந்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே. ... மேருவை வில்லாக வளைத்து எரித்த நெற்றிக் கண்ணராகிய சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கும் ஒப்பற்ற புண்ணியவதியாகிய பார்வதி தேவி பெற்றெடுத்த பெருமாளே. |
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கராகவும் சென்று, பலவித அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கை விடச் செய்தனர் - சிவபுராணம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.472 pg 3.473 pg 3.474 pg 3.475 WIKI_urai Song number: 1189 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1190 - minninil nadukkam (common) minninilna dukka mutRa nuNNiyanu suppil muththa veNNakaiyil vatta moththu ...... azhakAra vimmiyiLa kikka thiththa kommaimulai yiRku niththa vinnuthali litta pottil ...... vilaimAthar kannalmozhi yiRchi Rakku mannanadai yiRka Ruththa kaNNiniNai yiRchi vaththa ...... kanivAyiR kaNNazhivu vaiththa puththi shaNmugani naikka vaiththa kanmavasa meppa dikku ...... maRavEnE annanadai yaippa zhiththa manjnjaimalai yiRku Raththi yammaiyada vippu naththil ...... viLaiyAdum annaiyiRu kappi Niththa panniruthi ruppu yaththil anniya arakka raththa ...... naiyumALap ponnulaki naippu rakku mannanalvra thaththai vitta punmaiyarpu rathra yaththar ...... podiyAkap ponmalaiva Laiththe riththa kaNNuthali daththi lutRa puNNiyavo ruththi petRa ...... perumALE. ......... Meaning ......... minninil nadukkam utRa nuNNiya nusuppil muththa veN nakaiyil: In their slender waist that quivers like lightning, in their white pearl-like teeth, vattam oththu azhaku Ara vimmi iLakik kathiththa kommai mulaiyil: in their round-shaped, beautiful, fulsome, soft and bulging breasts, kuniththa vil nuthalil itta pottil vilai mAthar kannal mozhiyil siRakkum anna nadaiyil: in the vermillion dot worn on their curved bow-like forehead, in the speech of the whores which is sweet like the sugarcane, in their gait like that of the famous swan, kaRuththa kaNNin iNaiyil sivantha kani vAyil kaN azhivu vaiththa puththi: in their two black eyes and in their reddish kovvai-fruit-like mouth, I had remained awestruck, with mind immersing in each of them individually; changing my mind set, shaNmuga ninaikka vaiththa kanma vasam eppadikku maRavEnE: the fruit of my past deeds made me meditate on Your six hallowed faces; how can I ever forget this reward for any reason? anna nadaiyaip pazhiththa manjnjai malaiyil kuRaththi ammai adavip punaththil viLaiyAdum annai: She is the peacock-like damsel whose gait surpasses that of the swan; she is the Goddess who was reared in the mountain by the KuRavAs; she played around in the forest and the millet field; She is our mother; iRukap piNiththa panniru thirup puyaththil anniya arakkar aththanaiyu(m) mALa ponnulakinaip purakkum manna: the twelve hallowed shoulders tightly hugged by Your consort, VaLLi, were responsible for destroying all the alienated demons; and You are the Lord that protected the celestial land and redeemed it for the DEvAs! nal vrathaththai vitta punmaiyar pura thraya aththar podiyAka: The demons, who lived in Thiripuram leading a sinful life after they abandoned the good ritualistic worship* of SivA, were all burnt down to ashes pon malai vaLaiththu eriththa kaN nuthal idaththil utRa puNNiya oruththi petRa perumALE.: when He bent the Mount MEru like a bow and opened His fiery eye on the forehead; on the left side of that Lord SivA, this unique and virtuous Goddess is concorporate; You are the son delivered by that PArvathi, Oh Great One! |
* When it was realised that the evil demons in Thiripuram could not be conquered until and unless they were made to give up their ritualisic worship of Lord SivA, Lord VishNu went to Thiripuram in the disguise of a buddhist priest and Sage NArathar went along with Him as His student. They performed many miracles, hypnotised the demons and made them forsake the worship of SivA - Siva PurANam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |