திருப்புகழ் 1188 மாண்டார் எலும்பு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1188 mANdArelumbu  (common)
Thiruppugazh - 1188 mANdArelumbu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாந்தான தந்தன தந்தன
     தாந்தான தந்தன தந்தன
          தாந்தான தந்தன தந்தன ...... தனதான

......... பாடல் .........

மாண்டாரெ லும்பணி யுஞ்சடை
     யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை
          வான்பூத லம்பவ னங்கனல் ...... புனலான

வான்பூத முங்கர ணங்களு
     நான்போயொ டுங்கஅ டங்கலு
          மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை ...... யருளாயேல்

வேண்டாமை யொன்றைய டைந்துள
     மீண்டாறி நின்சர ணங்களில்
          வீழந்தாவல் கொண்டுரு கன்பினை ...... யுடையேனாய்

வேந்தாக டம்புபு னைந்தருள்
     சேந்தாச ரண்சர ணென்பது
          வீண்போம தொன்றல என்பதை ...... யுணராதோ

ஆண்டார்த லங்கள ளந்திட
     நீண்டார்மு குந்தர்த டந்தனில்
          ஆண்டாவி துஞ்சிய தென்றுமு ...... தலைவாயுற்

றாங்கோர்சி லம்புபு லம்பிட
     ஞான்றூது துங்கச லஞ்சலம்
          ஆம்பூமு ழங்கிய டங்கும ...... ளவில்நேசம்

பூண்டாழி கொண்டுவ னங்களி
     லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி
          போந்தோல மென்றுத வும்புயல் ...... மருகோனே

பூம்பாளை யெங்கும ணங்கமழ்
     தேங்காவில் நின்றதொர் குன்றவர்
          பூந்தோகை கொங்கைவி ரும்பிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார் ...
(தக்ஷயாகத்துக்குப் பின்) இறந்து பட்ட திருமால், பிரமன்
முதலோருடைய எலும்பை அணிந்தவரும், ஜடாமுடிகொண்ட
தலைவரும் ஆகிய சிவபெருமான்

இறைஞ்ச மொழிந்ததை ... உன்னை வணங்க, நீ உபதேசித்த
பிரணவப் பொருளை,

வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன ... விண், பூமி, காற்று,
நெருப்பு, நீர் ஆகிய

வான் பூதமும் கரணங்களும் ... பெரிய ஐம்பூதங்களும், (மனம்,
புத்தி, சித்தம், அகங்காரம்) எனப்படும் நான்கு கரணங்களும்,

நான் போய் ஒடுங்க அடங்கலும் மாய்ந்தால் ... நான், எனது -
என்னும் அகங்கார மமகாரமும் நீங்கி ஒடுங்க, இங்ஙனம் எல்லாம்
இறந்துபட்டால்

விளங்கும் அது ஒன்றினை அருளாயேல் ... விளங்குவதான அந்த
ஒப்பற்ற ஒரு பொருளை நீ எனக்கு அருளாவிட்டால் (அதற்குப் பதிலாக)

வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம் ... வேண்டாமை
என்னும் ஆசை நீக்கமான மன நிலை ஒன்றை நான் அடைந்து,

மீண்டு ஆறி நின் சரணங்களில் வீழ்ந்து ... என் மனம் மீண்டும்
பல திசைகளில் ஓடாது அமைதிபெற்று உனது திருவடிகளில் விழுந்து

ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய் ...
ஆசையுடனே உள்ளம் உருகும்படியான அன்பு நிலையை நான்
உடையவனாகி,

வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண் சரண்
என்பது
... அரசே, கடப்ப மாலை அணிந்த காரணனே, உன் திருவடியே
சரணம் என்னும் அந்த வழிபாடு

வீண் போம் அது ஒன்று அ(ல்)ல என்பதை உணராதோ ...
வீணாகப் போகும்படியான ஒன்று அன்று என்பதை உணரமாட்டேனோ?

ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர் ... உலகத்தை
எல்லாம் ஆள்பவர், மூவுலகையும் தமது திருவடி இரண்டினால்
அளக்கவேண்டி நீண்ட உருவம் (விஸ்வரூபம்) எடுத்தவர், முகுந்தர்,

தடம் தனில் ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாய்
உற்று
... மடுவில் அன்றொரு நாள் உயிரே போய்விட்டது என்று
முதலையின் வாயில் அகப்பட்டு,

ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ... அங்கே ஒரு மலைபோன்ற
(கஜேந்திரன் என்னும்) யானை (ஆதிமூலமே என்று) கூச்சலிட,

ஞான்று ஊது துங்க சலஞ்சலம் ஆம் பூ முழங்கி அடங்கும்
அளவில்
... அப்பொழுது ஊதின பரிசுத்தமான பாஞ்ச ஜன்யம் என்னும்
சங்கை, மலரை ஒத்த வாயில் முழக்கம் செய்து சங்கின் ஓசை
அடங்குவதற்குள்

நேசம் பூண்டு ஆழி கொண்டு வனங்களில் ஏய்ந்து ...
அளவில்லாத அன்பு பூண்டு சுதர் ன சக்கரத்தை ஏந்தி (மடு இருந்த)
வனத்தை அடைந்து

ஆள வென்று வெறும் தனி போந்து ஓலம் என்று உதவும்
புயல் மருகோனே
... (அந்த யானையை) ஆண்டருள தான் மாத்திரம்
தனியே வந்து அபயம் தந்தோம் என்று உதவிய மேக நிறம் கொண்ட
திருமாலின் மருகனே,

பூம்பாளை எங்கும் மணம் கமழ் ... அழகிய தென்னம்பாளை எங்கும்
நறு மணம் வீசுகின்ற

தேம் காவில் நின்றது ஓர் குன்றவர் பூம் தோகை ... இனிய
பூஞ்சோலையில் இருந்த ஒப்பற்ற (வள்ளி) மலை வேடர்களின் அழகிய
மயில் போன்ற வள்ளியின்

கொங்கை விரும்பிய பெருமாளே. ... மார்பகங்களை விரும்பிய
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.464  pg 3.465  pg 3.466  pg 3.467  pg 3.468  pg 3.469 
 pg 3.470  pg 3.471 
 WIKI_urai Song number: 1187 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1188 - mANdAr elumbu (common)

mANdAr elumbaNiyun sadai
     yANdAr iRainja mozhindhadhai
          vAn bUthalam pavanang kanal ...... punalAna

vAn bUthamun karaNangaLu
     nAn pOyodunga adangalu
          mAyndhAl viLanguma dhondrinai ...... aruLAyEl

vENdAmai ondrai adaindhuLa
     meeNd ARi nin charaNangaLil
          veezhndh Aval koNdurug anbinai ...... udaiyEnAy

vEndhA kadambu punaindh aruL
     sEndhA charaN saraN enbadhu
          veeN pOma dhondrala enbadhai ...... uNarAdhO

ANdAr thalangaL aLandhida
     neeNdAr mukundhar thadan thanil
          ANdAvi thunjiya dhendru mudhalai ...... vAyutr

AngOr silambu pulambida
     nyAndr Udhu thunga calan calam
          Am pU muzhangi adangum ...... aLavilnEsam

pUNdAzhi koNdu vanangaLil
     EyndhALa vendru veRun thani
          pOndh Olamendr udhavum puyal ...... marugOnE

pUm pALai engu maNam kamazh
     thEn kAvil nindradhOr kundravar
          pUn thOgai kongai virumbiya ...... perumALE.

......... Meaning .........

mANdAr elumbaNiyun sadai yANdAr: He wore the bones of the dead Gods such as Vishnu and BrahmA (after Dhaksha's Sacrifice); He is the Leader with a unique tress;

iRainja mozhindhadhai: that Lord SivA pleaded with You; then You preached to Him the PraNava ManthrA;

vAn bUthalam pavanang kanal punalAna vAn bUthamun: (If the) five elements, namely, ether, earth, air, fire and water,

karaNangaLu nAn pOyodunga: the four karaNas (internal sense organs), namely, manas (mind), ahankAram (egoism), budhdhi (intellect) and chitta (will), and the arrogance and possessiveness in me are all gone, -

adangalu mAyndhAl viLanguma dhondrinai aruLAyEl: in other words, if all the aforesaid things are destroyed, the PraNava ManthrA will become discernible. If You choose not to teach me that ManthrA, (as an alternative)

vENdAmai ondrai adaindhuLa meeNd ARi: kindly grant me "detachment" with which my mind gives up all desires and unwaveringly

nin charaNangaLil veezhndh Aval koNdurug anbinai udaiyEnAy: falls at Your hallowed feet; I seek only those feet, with a melting heart full of love.

vEndhA kadambu punaindh aruL sEndhA charaN saraN enbadhu: My prayer to You, saying "Oh Lord, You are the primordial One, wearing the garland of kadappa flowers; Your holy feet are my only refuge"

veeN pOma dhondrala enbadhai uNarAdhO: is not something that would go waste; don't I know this truth?

ANdAr thalangaL aLandhida neeNdAr mukundhar: He rules the entire universe; He assumed a huge form (ViswarUpam) to measure the three worlds with His two footsteps; He is Mukundan (Lord Vishnu);

thadan thanil ANdAvi thunjiya dhendru mudhalai vAyutr AngOr silambu pulambida: In the pond, once, caught in the mouth of a crocodile, a mountain-like elephant (GajEndran) thought it was going to die and screamed for help from Lord Vishnu;

nyAndr Udhu thunga calan calam Am pU muzhangi adangum aLavil: at that moment, Lord Vishnu blew hard on His pure conchshell (Panchajanyam) and even before its sound subsided,

nEsam pUNdAzhi koNdu vanangaLil Eyndhu: with profuse love, He reached the forest where the pond was situated, holding the disc (Sudharsanam) readily in His hand;

ALa vendru veRun thani pOndh Olamendr udhavum puyal marugOnE: He came alone, all by Himself, and rescued the elephant and gave refuge; You are the nephew of that Vishnu with the hue of the dark cloud!

pUm pALai engu maNam kamazh thEn kAvil: In this nice grove, the blossoming coconut petals were giving off a pleasant aroma;

nindradhOr kundravar pUn thOgai: there, among the unique hunters of the hill (VaLLimalai), stood the peacock-like damsel, VaLLi

kongai virumbiya perumALE.: whose pretty bosom was desired by You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1188 mANdAr elumbu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]